Feb 7, 2014

தீண்டும் போதை



இந்த பிரபஞ்சத்துக்கான
ஒட்டுமொத்த தூக்கத்தை
குத்தகைக்கெடுத்து
உறங்குகிறான் அவன்!

வியர்வை சிந்தி உழைத்தோ
வஞ்சித்துப் பிடுங்கியோ
ஏற்றிக் கொண்ட மதுவில்
இறங்கிக் கிடப்பவன் செலுத்திய
ஆயத்தீர்வை உள்ளிட்ட
அத்தனை தீர்வைகளிலும்
தேவைகளைப் பூர்த்தி செய்யும்
கள்ளச் சமூகம்
மெல்லக் கடக்கிறது
எச்சில் துளியில் நனைந்த
ஏளனப் புன்னகையொன்றை
அவன் மேல் எறிந்தபடியே

எங்கோ தொலையட்டுமென
விட்ட குடும்பமோ
எப்போ வருவாரோ எனத் தவிக்கும்
பெண்டு பிள்ளைகளோ
காத்தும் கிடக்கலாம்
போதை கரையும் கணமறியாமலே!

அருகில் செல்ல அஞ்சி
அவனைக்கொண்டெழுதும்
இந்த கவிதையின் போதை
வாசிக்கும் உங்களையும்
தீண்டாமலா விட்டுவிடும்!?

-

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தெளிய மிகவும் சிரமம் தான் - தினமும்...! விரைவில் டிக்கட்...!

Ranjith Mohanasundaram said...

அருமை

Unknown said...

:)

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...