கீச்சுகள் - 44பசி ருசி அறியாது. ஆனால் ருசி பசியைத் தூண்டும்!

-

அப்போ ஒவ்வொரு சாதிக்காரங்களும் தங்களுக்கென கட்சி ஆரம்பிச்சாங்க. இப்போ ஒவ்வொரு சாதிக்காரங்களும் தங்களுக்குள் கட்சி ஆரம்பிக்கிறாங்க!

-

நான் ஊருக்கு சொன்னஅட்வைஸ்எல்லாமும், என் காதில் விழுந்து புத்திக்கு எட்டியிருந்தால்....... # இப்ப இதை இப்படி எழுதிட்டிருக்கமாட்டேன்! :)

-
எல்லா நாட்களுக்கும் இருபத்தி நான்கு மணி நேரம்தான். இரவும் பகலும் தான். ஆனால் எல்லா நாட்களும் ஒன்றேயல்ல!

-
அம்மாவின் கை பிடித்துத் தொங்கிக்கொண்டே கேள்விகளால் துளைக்கும் குழந்தையின் பரபரப்பும், பதில் சொல்ல அலுக்கும் அம்மாவின் அயர்வும் அழகிய கவிதை!

-
ஸ்கூட்டர் பின்இருக்கையில் அப்பா முதுகில் தன் முதுகை ஒட்டி காற்றில் ஓவியம் தீட்டும் குழந்தை விரல்களில் பிகாசோவின் மிச்சம் ஒட்டியிருக்கலாம்!


-
ஒரு நாளை எப்படி கடக்கலாம் அல்லது கடத்தலாம்? ரசித்துக் கடத்தலாம், ருசித்தும் கடத்தலாம். இறுக்கிப் (cont)

-
டிவிகள் இப்ப நல்லா கல்லாக் கட்டுறதுசேலம் சிவராஜ் சித்த வைத்தியம்மாதிரியான குரூப், ’டீ அடிக்சன்நிழல்கள் ரவி குரூப்களிடம் தான்.

-
என்னை ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை! என்னை, எனக்கு என்பதில் எதுநான்எனத் தெரியவில்லை!

-உடன் பிறப்புகளே!” என்ற சொல்லைப் பயன்படுத்துவது குறித்து கலைஞர் நிறையவே யோசிக்க வேண்டிய தருணம் இது! :)


-

தொடர்ந்து பயணப்படும் ஒரு ரயிலிலிருந்து இடைப்பட்ட ஒரு ஊரில் நடு இரவில் இறங்குவதற்கான பிரயத்தனத்தைவிட வாழ்க்கையின் சில துன்பங்கள் எளிதுதான்!


-

பிடித்தால் கொண்டாடுவேன்என்பதற்குச் சமமானதாபிடிக்காவிட்டால் திட்டுவேன்என்பது!?


-இருக்கும் இந்த ஒரேயொரு வாழ்க்கையின் மீதுதான் இத்தனை காதலும், அத்தனை அலுப்பும்!


-

புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வராமல் மனதிற்கு மட்டுமேயென தனியே ஒரு வாய் மற்றும் விரல்கள் இருந்திருக்கலாம்!


-

நடிகைக்கு கல்யாணமாயிட்டா மட்டும் நம்ம பயகபிறன்மனை விழையாப் பேராண்மைகுறளைக் கரைச்சுகுடிச்சிட்டு, அதன்பிறகு திரும்பிக்கூட பார்க்கிறதில்ல!


-

சன்ரைஸ்க்கு சூர்யா, ப்ரூ காபிக்கு கார்த்தி, நரசுஸ் காபிக்கு சிவகுமார் வந்துட்டார் அவங்கள 'தமிழகத்தின் காபி குடும்பம்'னு அறிவிச்சுடலாம்.


-

அசோகர் சாலையோரங்களில் மரங்களை நட்டார். அதற்குப் பிறகு இப்போதுதான் NHAI சாலை நடுவே அரளிச் செடி நடுகிறார்கள்!

-

அரசியல் எனக்குப் பிடிக்காது என்பவர்களுக்கான அரசியலை, யாரோ ஒருவன் 'அவர்களுக்கு எதிராகவே' செய்து கொண்டிருக்கிறான்


-

கூட்டங்களில்எனக்கு முன்னால் பேசியவர் எல்லாவற்றையும் சிறப்பாக பேசிவிட்டார்னு யாரும் சொன்னால், ரொம்ப நேரம் கொலையா கொன்னுட்டார்னு அர்த்தம்


-

நாளுகெழமனு கோவிலுக்கு படையெடுத்த கூட்டத்தைவிட, அனுதினமும் ஆஸ்பிடலுக்கு படையெடுக்கும் கூட்டம் அதிகமாக இருக்கின்றது!


-

வாழ்தலுக்கும் காசுக்கும் இடையே கடும் போர்


-

அதென்னய்யா.... பொங்கலுக்கு மட்டும் சமத்துவ பொங்கல். தீபாளி, ரம்ஜான், கிருஸ்மஸ்க்கு சொல்லாத சமத்துவம்

-

நீங்க ஒன்னும் சொல்லாட்டியும் கூட பரவாயில்ல, ’யேப்பீ பொங்கல்னு கூட சொல்லிக்குங்க, ஆனாதைப்பிறந்தால் வலி பிறக்கும்னு மட்டும் படுத்தாதீங்க!

-

இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை இல்லைனு மனசுக்கு இன்னும் எத்தனை முறை சொல்றதுனு தெரியல! #ஙே


-

எழுத்துவலி நீக்கி - வலி புகுத்தி!

-

மனிதனை வேட்டையாடியதேசிய விலங்குபுலியைப் பிடிக்க அரசு படை திரளுது, பயிர்களை வேட்டையாடும்தேசிய பறவைமயிலை விவசாயி பிடித்தால் தண்டனை!

-

சொல்லாத நினைப்புகள் கோடி... அதில் நிறைய சுகமானதாயும்!


-

சில பாடத்தினைக் கற்றுக்கொள்ள நிறையப் பேசவோ, கற்பிக்கவோ தேவையிருப்பதில்லை. விநாடிப்பொழுது அசைவு போதும் கற்றுக்கொள்ளத் தயாராயிருப்பவனுக்கு!


-
உண்மையை ஏற்கும் துணிவு உங்களுக்கு இல்லையென்பதால், பொய் சொல்லும் தைரியம் எனக்கு வந்திருக்கலாம்

-மாசம் 3000 SMSக்கு 33 ரூவா. 1 நாளைக்கு 100தான் அனுப்பனும் அப்புறமும் என்னத்துக்குடா இப்படி பிச்சை எடுக்குறீங்க!

-

பொங்கல் தீபாவளினா, சென்னை வெளியூர் ஆட்களை 'போய்யா வெண்ணை'னு சொல்லிடுதோ....!?

-

மருத்துவமனை பொதுப்பிரிவில் படுக்கைகள் மத்தியில் இரவு முழுக்கக் கொட்டக்கொட்ட விழித்திருத்தலில் மேலும்... மேலும்... மேலும் உணர முடிகிறது நோயும் வலியும் எத்தனை கொடிதென...
# என்ன பொற()ப்புடா இந்த மனுசப்பொற()ப்பு! :(

-

படம் ரிலீஸ் ஆச்சுன்னா... ரசிகர்கள் பால் ஊத்தினது அந்தக்காலம்! ட்விட்டர், ஃபேஸ்புக்ல சங்கு ஊதுறது இந்தக்காலம்!


-

இன்றைக்கு டோக்கன் போட்டால்தான், மருத்துவரை நாளை சந்திக்க முடியும் என்ற நோய் மிகு சமூக அமைப்பில் வா(வீ)ழ்ந்து கொண்டிருக்கிறோம். :(


-

சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டுவதேயில்லை. எனினும் முன்புபோல் சிரமமாய் இருப்பதில்லை, காரணம் நன்றாகப் பழகிவிடுகின்றன.


-

நிஜமாவே புரியாமதான் கேக்குறேன்சிக்னலை மதிக்காம சர்னு போறவனக்கெதுக்கு நெம்பர் ப்ளேட்லசேகுவேராபடம். இதெல்லாம் புரட்சினு எவஞ்சொன்னது


-

ஃபேஸ்புக், ட்விட்டர்ல கலக்குறீங்கனு யாராச்சும் புகழ்ந்தா, உள்ளே ஒரு குரல் ஒலிக்குதுஅதுக்கு அடிமையா இருக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா!?”


-

நல்லதொரு உரையாடல் நிகழ்த்துபவர்களிடம், உரையாடச் செல்கையில், ’உம்கொட்டுவதற்குத் தகுந்த நண்பரோடு சென்றுவிட வேண்டும். ’அவதானித்தல் இனிது


-

சினை நாயொன்று குளிர் இரவில் வெளியில் குரைத்தபடி, அதன் குட்டி விற்கும் முதலாளி வீட்டில் உறங்கியபடி! #நாய்_வித்த_காசு_குரைக்காது :(


-

இனிமேல் மார்கழியைஎழுத்தாளர்கள்மாதம் என்றே அறிவித்துவிடலாம்!


-

பொழுதுபோக்கு, பொருளீட்டுவதை மட்டுமே மையப்படுத்தும் சிந்தனையை மாற்றினால் மட்டுமே, வரும் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையின் தியாகம் புரியும்!


-

பரபரப்பான உலகிலிருந்து தொலைந்துபோக பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை, வெளியூர்ப் பயணத்தில் நம்மிடமிருக்கும்ஆன்ராய்டுபோன் தொலைந்தால் போதும்


-

எல்லா நம்பிக்கைகளும் அவர்கள் அளித்தவையல்ல. நாம் சேர்த்துக்கொண்டவைகளும்!


-

வார நாட்களின் மத்தியில் வரும் விடுமுறை ஓய்வை விட அலுப்பையே தருகின்றது

-

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகிய கவிதை அருமையான ரசனை...

ஙே, சங்கு ஊதுறது, பிச்சை எடுக்குறது, புரட்சி எல்லாம் செம...!

ராஜி said...

சிதறியவை அனைத்தும் முத்துகள்.
பகிர்வுக்கு நன்றி சகோ!

Mythily kasthuri rengan said...

விகடன்லயும் பார்த்தேன்.
//என்னை ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை! என்னை, எனக்கு என்பதில் எது ’நான்’ எனத் தெரியவில்லை!//கவித.....கவித...
சில விஷயங்கள் ஏற்கனவே உங்க ப்ளோக்ல படிச்சா ஞாபகம்.ஒருவேளை அதுவும் விகடனானு நினைவில்லை!?

lakshmi indiran said...

இருக்கும் ஒரு வாழ்க்கையின் மீது தான் இத்தனை காதலும்,அத்தனை அலுப்பும்-செம

lakshmi indiran said...

இருக்கும் ஒரு வாழ்க்கையின் மீது தான் இத்தனை காதலும்,அத்தனை அலுப்பும்-செம