முத்த இசை

அறையில் நிரம்பி  
நெருக்கும் குளிரை
கொஞ்சம் தேநீர் கொண்டு
கொய்திடலாம்
இல்லையெனில்
உன் இதழ்களில்
ஒத்தி வழியனுப்பலாம்!

*

நின் இதழ்கள்
நரம்புகளாய்
என் இதழ்கள்
விரல்களாய்
ஓயுமோ முத்த இசை!

*

இடி பொழியும் இரவு
இமைகள் கீறும் மின்னல்
பெய்துவக்கும் மழை
பெரு நம்பிக்கையாய்
சுடும் முத்தம்!

*

2 comments:

காமராஜ் said...

இசையை அனுபவிக்கவிடாமல் உதடுகள் இமசைசெய்கிறது.

Muthusamy Venkatachalam said...

நல்ல ஆழமான முத்த வரிகள்.....மொத்தமும் முத்தத்தை பற்றி இருக்காமல் இருக்கும் சூழ்நிலை அறிந்து எழுதியிருப்பது அருமை.