கீச்சுகள் - 42



மௌனம் என் விருப்பம். பேசுவது உங்கள் விருப்பம். மௌனம் காப்பீர்களென்றும், பேசுவேனென்றும் ஏமாந்து கொண்டேயிருக்கிறோம் இந்த நட்பில்.

-
எங்காவது நம்மைச் சந்திக்கையில், நம்மைத் தவிர்த்து பார்க்காததுபோல் ஓடுபவரை வலுக்கட்டாயமாக பார்க்கவைத்து நெளியவைப்பதில் இருக்கும் சுகமே தனி!

-

வாழ்ந்தாஇடைத் தேர்தல்நடக்கிற தொகுதில வாழனும்யா!

-

எல்லா "மிஸ் யூ"களும் காதலை நோக்குவதாகவும், எல்லா "லவ் யூ"களும் காமத்தை நோக்குவதாகவும் மட்டுமே இருந்து விடுவதில்லை!

-

மௌனம் இனிது! ’உளறல்அதனினும் இனிது!

-

புயலுக்கு வக்கனையாப் பேரு மட்டும் வைக்கிறீங்ளே.... அதில் பாதிக்கப்படுற மக்களுக்கு ஒழுங்கா சோறு வைக்கிறீங்ளா!?

-

கோவில் யானையிடம் மாலை வாங்க யானைக்கு நண்பனாக இருக்க வேண்டியதில்லை! பாகனுக்குத் தோழனாக இருந்தால் போதும்

-

நியாயமாகச் செய்யவேண்டிய கடமைக்கு ஒரு கூலித் தொழிலாளியிடம், ஏழை விவசாயிடம், அனாதை ஊதியம் பெறும் முதியவர்களிடம் அரித்துப் பிடுங்கும் லஞ்சம் என்பது மலம் தின்பதற்கு ஒப்பானது.

-

நாகரிகம் என்பது உடை தொடர்பானது மட்டுமே என நினைப்பது நாகரிகமான செயல் அல்ல!! :)

-

நாம் நம்மீது வைக்கும் நம்பிக்கை, அவநம்பிக்கையைவிட மற்றவர்கள் நம்மீது வைக்கும் நம்பிக்கை, அவநம்பிக்கை பலநேரங்களில் நம்மைத் தூண்டுகின்றன.

-

கிராமத்து இளைஞர் கூட்டம் Wife வேணும்னு தேடுது! நகரத்து இளைஞர் கூட்டம் WiFi வேணும்னு தேடுது!



-

தமிழர்களே! தமிழர்களே!!
காலங்காத்தால நாலு மணிக்கெல்லாம் முகூர்த்தம் வைக்கிறது அநியாயம் புடிச்ச வன்முறை. நல்லாத் தூங்கிட்டு லேட்டாப் போன எனக்கு இப்பயிருந்தே தூக்கம் சொக்குதே...
பாவம்யாஅதுக’ :)

-

பிரியம்என்பதை வெறும் வார்த்தையாக வாசிப்பதைவிட வாழ்க்கையில் உணர்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!

-

பல நேரங்களில்நல்ல்ல்லா வருவே!” என அழுத்தமாகச் சொல்வது நல்லா வந்துடாதே என்பதற்காகத்தான்! :)

-


தெரிந்த நம்(ண்)பரோடு போனில் பேசுகையில், தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வரபுதுநெம்பர்லருந்து கால்னு தெரிந்த நம்(ண்)பரை துண்டிக்கிறோம்

-

குழந்தைகள் தேங்காய்பன்னில் இனிப்பு பகுதியைத் தின்றுவிட்டு வெறும் பன்னை ஒதுக்குவதிலேயே பகுத்தறிவைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர்.

-

'எதுவும் சில காலம்தான்' எனும் சொற்றொடர் மட்டும் நீண்ட காலமாய் !

-



தொலைத்தது இருட்டுக்குள் ஆனால் வெளிச்சத்தில் தேடவே பிடித்திருக்கிறது!

-

எத்தனையோ பாதைகள் இருந்தாலும், குறுக்குவழி ஒன்று கிடைத்துவிட்டால், அது குறுகிய சந்தாகவே இருந்தாலும் அதன் வழியேதான் அடிக்கடி பயணப்படுகிறோம்!

-

பக்கத்து அறையில் ஒரு சிறுவன் வீடியோ கேமில் எதையோ தொடர்ந்து சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறான். சப்தம் காதைக் கிழிக்கிறது. சகிக்க முடியவில்லை. உடனடித் தீர்வு நானும் அது என்ன கேம் எனத்தெரிந்து விளையாடியாகனும் போல! :)

-

பாதி தேய்ந்த ஹமாம் சோப்போடு மைசூர் சாண்டல் சோப்பை ஒட்டிவைத்தது போலிருந்தது அந்தப் புன்னகை!

-

அறிவு கொண்டு எடுத்த முடிவுகளைவிட, அவசரத்திலும், வீம்பிற்காகவும் எடுத்த முடிவுகளே அதிகம்.

-

இறந்தவன் உதடுகளில் உறைந்திருக்கும் புன்னகையில் உலகின் ஒட்டுமொத்த கசப்பு நிரம்பியிருக்கின்றது.

-

உற்றுப்பார்.... புரியும் அல்லது பழகிவிடும்! :)

-

உறங்கிக் கிடக்கும் மனிதர்கள் மத்தியில் சூடாய் முத்தமிட்டுக் கொள்ளும் அந்த இளம் ஜோடி பூமி சுற்றுவதை உறுதிப் படுத்துகின்றனர். :)

-

ஒரு பன்னாட்டு விமான முனையத்தில் இரவு முழுக்க சோர்வாய் ஒளிரும் முகங்களில் விதவிதமான பயண ரேகைகள்..

3 comments:

Umesh Srinivasan said...

எல்லாமே நச்சுனு நல்லாருக்கு கதிர் சார்

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

அருமை , கலக்குங்க ! தத்துவச்சித்தர் என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கிறேன் .

Anonymous said...

வாசித்தேன் இரசித்தேன்.. :)

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் தோழரே!

---