கீச்சுகள் - 32


வாழ்க்கையில் ஒருமுறையாவதுபொய் சொல்லவேண்டும்என ஆசைப்படுகிறேன்
# ஆசை நிறைவேறிடுச்சு!



-



நானும் நீங்களும் கிறுக்குவதும்கூட ஓவியம்தான். பார்க்கிறவங்க ஒத்துக்கிறதில்லை என்பது நம்ம குத்தமா பாஸ்?



-



பழகாததால் நீங்கள் தலைக்கனம் பிடித்தவராக, கர்வம் மிகுந்தவராக, ஏன் கெட்டவராகக்கூடத் தெரியலாம். நீங்கள் அப்படியேதும் இல்லாமலும் இருக்கலாம். :)



-



குடித்துவிட்டு சாலையோரத்தில் கிடப்பவர்களை மட்டுமே மது அடிமைகள் என நினைத்துவிடுவது எளிதானதாகவும், வசதியானதாகவும் இருக்கின்றது



-



சரியான மண்ணில், பதமான சூழலில் விழும் வித்து முளைக்கத்தானே செய்யும்.



-



எங்க ஊர்ல பூனை ஒன்னு பேசியதுஎன்றால், பேசியிருக்காது எனத் திடமாக நம்புபவர்களைவிட, பேசியிருக்குமோ என சந்தேகிப்பவர்களே அதிகம்!



-



பார்வையால் எத்தனை உரசினாலும் தேய்வதில்லை பௌர்ணமி நிலா.



-



உங்களுக்கு "66A" தெரிஞ்சா, எங்களுக்கு "49தெரியாம போயிடுமா?

உங்களுக்கு எங்களையும், எங்களுக்கு உங்களையும்விட்டா யாரு இருக்கா?



-



நீங்கள் வியக்கும் ஒருவர் மனதால் உடைந்திருக்கையில், “உங்களுக்கென்னங்க கஷ்டம்னு மொக்கையா மட்டும் கேட்காதீங்க! # கஷ்டம் பொதுவானது!



-



சாப்பாடு குறித்து ஒருவர்ப்யூர் வெஜ்என்றார், நான்ப்யூர் நான்வெஜ்என்றேன். ஒருமாதிரி குறுகுறு பார்க்குறாங்க #ஏம்ப்பா அப்படி பாக்குறீங்க



-



நல்லதைச் செய்பவன்கெட்டவன்என்பதற்காக வருத்தப்படவும், கெட்டவன்நல்லதுசெய்கிறானே என்பதற்காக மகிழவும் செய்கிறோம் சூழலுக்கேற்ப.





-



நமக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருந்து, குழந்தைகள் திணிக்கும் சாக்லெட்டில் அதியுன்னதசுவையோடு கொஞ்சம் சொர்க்கத்தையும் உணர்ந்துவிடமுடிகிறது



-



தெரியாம கடித்த ஒரு மிளகில் இத்தனை காரமா? ஆமா அத்தனை காரத்தையும் தனக்குள்ளே வெச்சிருந்த மிளகுக்கு காரமாவே இருந்திருக்காதா? #காரப் பிதற்றல்







தொடர்ந்து தொடர்ந்து எதையோ நிரூபிக்க முனைந்து கொண்டே இருக்கின்றோம். அவசரத்தில் அந்தஎதைஎன்பதை மட்டும் மறந்துவிட்டு!



-



பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்.



-



எடையற்ற தருணங்கள் இனிமையானவை. தலையிலும் மனதிலும்!



-





அன்பில் எல்லாம் நிரம்பும், தீரும். சில சமயம் தாமதமாக! :)



-



பதிலற்றவை சில. கேள்விகளை வீணாகத் தயாரிக்காதீர்கள்!



-



கடிக்கையில் நெல்லிக்காய் கசப்புதான். இறுதியில் இனிக்குமென மனசுக்கும், புத்திக்கும் தெரியுமென்பதால் தாங்குகிறோம் கசப்பினை!





-



டாஸ்மாக் பாவம்மலிவு விலை மெஸ்ஸிலாவது தீரட்டும்!



-



பல்லிளிக்கிற வெயில்ல, போறவேகத்துல பொசுக்னு இண்டிகேட்டர் போட்டு திரும்புறீங்களே, உங்களையெல்லாம் பெத்தாங்களா, ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா?



-



களவாடுதலும் களவுபோதலும் அன்பில் இனிக்கிறது! #களவுத்துறை



-


ஹெலிகாப்டர் சர்ச்சையை அரசியலாக்க வேண்டாம் - "சல்மான் குர்ஷித் # அரசியலாக்க வேணாம், but கொஞ்சம் பெப்பர் தூக்கலா போட்டு பொறியலாக்கிடலாம்!





-



ரகசியத்தை ரகசியமாகவேவைத்துக்கொள்ள விரும்பாத மனிதர் உண்டா!?



-



வெறுக்க இருக்கும் காரணங்களைவிட, நேசிக்க கூடுதலாய் ஒரு காரணம் இல்லாமலா போய்விடும்!



-



கட்டுப்பாடுஇல்லையென கட்டுப்பாடுகளால் கட்டுப்பாட்டை உருவாக்குகிறோம் # ஷ்ஷ்ஷ்ப்பா!



-



சில நேரங்களில் எதிரிகளைவிட, நண்பர்களைத்தான் சமூகம் அதிகம் சந்தேகிக்கின்றது.
 



விவாதத்தில், அறிவுரையில் புத்திசாலியிடம் மௌனம் காப்பது வீரமல்ல, முட்டாளிடம் மௌனம் காப்பதே வீரம்!



-



எத்தனை சொன்னாலும் தீர்வதில்லை பழைய காதல் குறித்த நினைவுகள்!



-



எதைக் கண்டு ஒரு சமயத்தில் தெறித்து ஓடுகிறோமோ, அதை நோக்கியே பிறிதொரு சமயத்தில் ஓடவைப்பதில்காலம் வெல்கிறது



-



ஒரு நெல்லிக்காயை மெல்ல மெல்லக் கொறித்த பிறகு, பரிதாபமாக மிஞ்சும் கொட்டையையும் மென்று கொண்டேயிருந்தால்... நீயும் என் தோழனே!



-



காசு இருக்கிறதெனக் குடிக்கும் ஒரு கோக், பெப்ஸிக்கு கொள்ளைபோகும் நீரில், ஒரு மனிதனின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்திடலாம்னு நினைக்கிறேன்



-



அவ்வப்போது கதறி, பொங்கி, புலம்பி என்ன கிழிச்சுடப்போறோம். மனுசியை மனுசியாய் பார்க்கும் பக்குவத்தை ஒருவனுக்கு கற்றுக் கொடுத்துவிடாமல்!




-




புல்லின் தலை வருடும் தென்றல் கண்ணுக்குத் தெரிகிறது, பெரும்பாறையைப் புரட்ட முயலும் புயல்க்காற்று கண்ணுக்குத் தெரிவதில்லை!


-



ஜூன் மாதத்திற்குப்பின் மின்வெட்டே இருக்காது - நத்தம் விஸ்வநாதன் # ஜூன் மாதத்திற்குப்பின் கேலண்டர் இருக்குமா இருக்காதுங்ளா!?



-



குறுகிய சாலையில் நேராகச் செல்ல உங்களுக்கு இருக்கும் அதே உரிமை, பெரிய வாகனத்தை குறுக்குமறுக்காகப் போட்டு திருப்ப முயல்வோருக்கும் உண்டு!

6 comments:

கிருத்திகாதரன் said...

அத்தனையும் அருமை..ரொம்ப நல்லா வந்து இருக்கு இந்த முறை கீச்சுக்கள்..

Anonymous said...

அருமையான வரிகள். சிந்திக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

Unknown said...

மிகவும் பிடித்தது ///வெறுக்க இருக்கும் காரணங்களைவிட, நேசிக்க கூடுதலாய் ஒரு காரணம் இல்லாமலா போய்விடும்!//

everestdurai said...
This comment has been removed by the author.
everestdurai said...


அருமையுலும் அருமை கதர் நேற்றுநடந்தது இன்று மறந்து விடுகிறது இது ஒரு மாத உன்பதிவுகள் எப்படி ?

Unknown said...

அருமை . அனைத்தும் சிந்தனை மிகுந்த வரிகள் , உண்மைகள்