பாதி பருகிய குவளைகள்எதிர்பாரா ஒரு பொழுதில்
எதிரெதிரே கலந்த கண்களில்
ஒளிர்ந்தடங்கியது ஒற்றை மின்னல்

அவள்தானா?
அவன்தானா?
ஆண்டுகள் தீர்ந்தும்
நினைவின் இடுக்குகளில்
சிதையா முகத்தின் மிச்சம்

விழிகள் விரிந்த நொடியில்
உதடுகளில் புன்னகை உதிர
விசாரிப்புகள் விருப்பப் பார்வைகள்
நேசம் பொதிந்த நெடுமூச்சுகள்

ஏதாவது சாப்பிடலாமென
அருகாமைக் கடையில்
காபி குவளைகளோடமர்ந்து
உதடுகள் ஒன்றை உரையாட
விழிகள் வேறொன்றைப் பேச

தீரத் தவிக்கும் நிமிடங்களை
தீர்க்கமற்றுப் பிடித்து
தீரத் துடிக்கும் காபியை
பருகாமல் பருகி
பாதியாய் வைத்த
நொடியின் விளிம்பில்

அவனறியாமல்
இடமாற்றி வைத்தாள்
பாதி பருகிய குவளைகளை
அவனறிந்ததை
அறியாமலே!

-*-
   

8 comments:

Unknown said...

அனுபவத்தில் விளைந்ததா ? அண்ணா ,
இல்லை மலரும் நினைவுகளின் உதிர்ந்த மலர்களா ?

everestdurai said...

இடமாற்றி வைத்தாள்
பாதி பருகிய குவளைகளை
அவனறிந்ததை அறியாமலே!வரிகள் அருமை கதிர்

everestdurai said...

இடமாற்றி வைத்தாள்
பாதி பருகிய குவளைகளை
அவனறிந்ததை அறியாமலே! நல்ல வரிகள் அருமை கதிர்

கிருத்திகாதரன் said...

நிஜம் போன்ற கவிதை ..அருமை..

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - அவனுக்குத் தெரியாமல் அவள் செய்தாள் - ஆனால் அவனுக்குத் தெரியும் என்பது அவளுக்குத் தெரியாது ...... நல்லதொரு கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - அவனுக்குத் தெரியாமல் அவள் செய்தாள் - ஆனால் அவனுக்குத் தெரியும் என்பது அவளுக்குத் தெரியாது ...... நல்லதொரு கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous said...

i feel like these lines has life..

Ramani Prabha Devi said...

arumai..