பூர்த்தியான முத்தம்




காதல் மிகுந்து
காமம் குழைந்து
நேசம் சொட்ட
நெஞ்சு பிசைய
உள்ளம் உருக
உணர்வு மிளிர
உயிர் குளிர
உதிரம் தகிக்க

சுற்றம் பாராது
சூழல் நோக்காது
எட்டிப் பறிக்கயெத்தனிக்கையில்
பொட்டெனக் கையில் விழும்
கனிந்த கொய்யா போலே
சட்டெனக் கிட்டுகிறது
ஒரு நீள் முத்தம்!

வேண்டியோ
விரும்பியோ
தாகத்திலோ
தவத்திலோ கிட்டுவதில்லை

ஒரு எதிர்பாராக்
கனவிலே கிட்டும்
இதழ்கள் உலரா ஈரம்கூடிய
ஒரு பூர்த்தியான முத்தம்!


-*-

5 comments:

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - அருமையான கவிதை - படமுடன் - - சிந்தனை நன்று - முத்தத்தினைப் பற்றிய கவிதை - இரசித்தேன் - மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கவியாழி said...

நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அருமையான முத்தக் கவிதை அண்ணா..

படித்தேன்... ரசித்தேன்...

Anonymous said...

nice:-)

Unknown said...

இதழ்களின் வழி ஒரு யாத்திரை ...!