டெல்லி - தண்டனைகளோடு திருப்தியடைந்துவிடப் போகின்றோமா?


தன் வக்கிரத்திற்கு, தன் போதைக்கு போகிற வழியில் கிடைத்த பெண்ணை வன்புணர்வு செய்த டெல்லிக் கும்பல்....... சிக்கிக்கொண்டு தெளிந்த பிறகு, தான் மனச் சிதைவு கொண்டவன் என்று சொல்வது குறித்தும், 9 மணிக்கு மேல் நண்பனோடு சென்றவளுக்கு பாடம் கற்பிக்க வன்புணர்வு செய்ததாகச் சொல்வதை மதத்தோடு முடிச்சுப்போட்டு விவாதிப்பதும் ஆரோக்கியமானதில்லை.
மனச்சிதைவு, மத உணர்வு என அவர்கள் சொல்ல முயல்வது தப்பிப்பதற்கான, ஒரு புத்திசாலித்தன மனோபாவமே தவிர... வேறல்ல.... அது குறித்து விரிவாகப் பேசி விவாதிப்பதே அவர்களின் திட்டத்தை அங்கீகரிப்பதற்கு ஒப்பானதும்.

கண்ணுக்குத் தெரியாத கற்பு அழிந்துபோனதாகச் சொல்வதை விட்டுத்தள்ளுங்கள். இந்த மாதிரியான வன்புணர்வு அந்தப் பெண்ணின் வாழ்நாள் முழுதும் மனதிற்குள் எத்தனையெத்தனை இயலாமை வலியைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

ஒரு பெண்ணாக அவளுக்குள் நிகழ்ந்த இயலாமைப் போராட்டம் கொடிதினும் கொடிது. புணர்ந்ததை விட, இயலாமைப் போராட்டத்தை அவள் மேல் ஏவிவிட்டதே கொடும் வக்கிரம்,

எக்காரணம் கொண்டும் எதற்கும்மரண தண்டனை கூடாதுஎன்போரும் கூட இதில் அவன்குறிஅறுக்க வேண்டும் எனத் தளர்ந்து முரண்பட்டபோது இனம்புரியா ஒரு மனச்சூழலுக்குள் ஆளானேன்! அந்த முரண்பட்டை விட நிகழ்வின் கடும்தாக்கம், அவர்களையறியாமல் உள்ளுக்குள் இருந்து பேசவைத்திருக்குமோ என்றும் தோன்றியது.

இது குறித்து கேள்வியுற்ற, வாசித்த ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நீதிபதி உணர்ச்சிப் பூர்வமான தீர்ப்பினை எழுதிக்கொண்டேதான் இருக்கின்றார்.

டெல்லி காவல்துறை தூக்குத் தண்டனைக்கு பரிந்துறை எனச் செய்திகளைப் பார்க்கும் போது, மக்கள் உணர்ச்சியை சமாளிக்க ஒருவேளை என்கவுண்டர் நிகழ்த்தப் படலாம் அல்லது வழக்கு நடந்து முடிவில் அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனைகூட விதிக்கப் படலாம்….. எப்படியாக இருப்பினும் இவர்களுக்கு விதிக்கப்படுவது மிக அதிகபட்ச தண்டனையாகவே இருக்க வேண்டும். அந்தத் தண்டனை இதுபோல் செய்ய முயல்வோருக்கு மிகப் பெரிய அச்சத்தை அளிப்பதாக இருக்க வேண்டும் என்பதில் துளியும் மாற்றுக்கருத்து கிடையாது!

சரி... தண்டனைகளோடு திருப்தியடைந்துவிடப் போகின்றோமா?

ஆண் பிள்ளைகளுக்கு இதுபோன்ற கிடைத்த பெண்ணை வன்புணர்வு செய்வது, கிடைக்காத அல்லது உடன்பட மறுக்கும் பெண்மீது ஆசிட் வீசுவது போன்ற பலதரப்பட்ட வக்கிரச் சூழலுக்கு ஆட்படா  மனோபாவத்தை, அறத்தினை வளர்க்க மறந்து அல்லது மறுத்துவிட்டு....

இது போன்று நிகழ்ந்தபின் குறி அறுக்க வேண்டும் அல்லது முச்சந்தியில் நிறுத்தி கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என்பதெல்லாம் நம் தற்காலிகமாக அறச்சீற்றம் அல்லது மேலதிக
உணர்ச்சிகளுக்க வேண்டுமானல் தீனிபோடலாம்.


-

3 comments:

Aarva Kolaaru said...

மொதல்ல தண்டனை குடுக்கட்டும்.. அப்புறம், அதுவும் ஒரு வகை moral தான். இப்பிடி செஞ்ச இப்பிடி ஆகும்னு தெரியணும். சிஸ்டம் கண்டிப்பா மாறணும். நீ ஒரு பையன், girls மாதிரி அழாதேங்கர்துல ஆரம்பிக்குது gender bias. Weaker sex , Fairer sex , Arm candy இப்பிடி அபத்தமா பொண்ணுங்கள address பண்ணறது. பொண்ணுங்க கிட்ட மரியாதையா நடந்துக்கணும்னு சொல்லறதுக்கு பதிலா பசங்க கிட்ட ஜாக்ரதைய இருன்னு சொல்லி வளக்கறது.. நம்ம அம்மா அப்பா கூட இந்த தப்ப பண்ணிருக்காங்க..நாமளும் நம்ம அறியாம பண்ணறோம்.. இது மாறனும்.. ஆனா டைம் ஆகும். அது வரை அந்த monsters இப்பிடி தான் பண்ணனும். ரொம்ப ரொம்ப கொடூரமா தண்டிக்கணும், atleast பயம் வரணும். வேற வழி இருக்கா?

பாலவெங்கி said...

//வக்கிரச் சூழலுக்கு ஆட்படா மனோபாவத்தை, அறத்தினை வளர்க்க மறந்து அல்லது மறுத்துவிட்டு....//

திரு.கதிர் அவர்களே! அத்தகைய மனோபாவத்தையும் அறத்தையும் வளர்ப்பது எப்படி என்று ஒரு யோசனையாவது தெரிவித்திருந்தால், தற்போதைய அறச்சீற்றம் குறித்த தங்களது கருத்துக்கு மெலும் வலு சேர்ந்திருக்கும்!

Dhinesh Kumar said...

Dear Sir,

This is Dhinesh kumar from chennai. My native is Tuticorin.

i read your post till
"டெல்லி - தண்டனைகளோடு திருப்தியடைந்துவிடப் போகின்றோமா?" this one. Hope you are from tamil nadu. I asked only one question to all of you raise slogan against delhi culprits.

Same Week one small girl, she is studying just 7th standard,his name is PUNITHA. she is the elder girl his family, his dad is passed.

She was raped and killed by one bastard at Thanthankulam(Tuticorin) while she was gonna to writing examination.

how many posts in f.b for delhi girl, how many meetings... i really shame for tamilans who all are support delhi girl.

Finally wanna say only one thing. I dont know whether delhi culprits are punished or not. But ? ? ? second one culprit is surely get the reward for his crime.