ஒளி விருட்சம்இல்லாதது கண்டஞ்சி 
இல்லாததற்குள்ளும்
இருள் கண்டஞ்சி
இருட்டுக்குள்ளும்
ஒளிந்துகொள்கிறேன்
பயம் அஞ்சி அகலுகிறது.

***

நீ பொத்தியிருந்து
தனித்துவிட்ட
என் கைகளுக்குள்
ஒரு விதையை
ஒளித்துவைத்திருக்கிறேன்
விதைக்குள் இருக்கும்
விருட்சம் எனக்குள்
வளர்ந்துகொண்டிருக்கிறது

***

கரு மேகம் பூத்த வானமாக
இருளடைந்த மனது
தாகத்தில் நிலமுமில்லை
பெய்யும் நோக்கத்தில்
மேகமுமில்லை
நான் மட்டும் மழையாய்
கரைந்து கொண்டிருக்கிறேன்!

***

உடையும் விருப்பமும்
இருந்ததில்லை
உடைபடாமல் காக்கும்
வித்தையுமறிந்ததுமில்லை
உடைபடாமல் பிடித்தியிறுத்தும்
ஏதோ ஒரு ஈரச் சொல்
எங்கோ அன்பில்
நனைந்து பிறந்திருக்கலாம்!

***

நன்றி அதீதம்


*

4 comments:

தீபா நாகராணி said...


மிரட்டுது ஒவ்வொரு வார்த்தையுமே...
என்னென்னவோ உணரவைக்குது...
ஆக மொத்தம், ரொம்ப அழகா வந்திருக்கு!
வாழ்த்துகள்!! :)

Anonymous said...

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மிரமிக்க வைக்கும் வரிகள்...

kirthi said...

Mika arumai...varikal asathal....