கீச்சுகள் - 28


"செய்தே ஆக வேண்டிய, செய்யப் பிடிக்காத(!) விசயத்தை" எவ்ளோ நாள்தான் தள்ளிப்போடுவே!? #deactivate

-

ஐப்பசினா அடைமழை பெய்யும்பா, இப்ப புயலுக்கு பேரு வெச்சு, செய்திப் பிரியர்கள் காதுக்கு சோறு போட்டு, புயலை ஒரு Branded Product ஆக்கிட்டாங்க

-

உற்றுப் பார்த்தால் எல்லா மரமுமே போதி மரம்தான்.

-

எல்லாம் "புரிஞ்சு" என்ன பண்ணப் போறோம்!

-

அய்யோ மழைல வெளிய போகவே முடியலைனு TVல புலம்பும் ()நாகரிகச் சீமானே... அடங்கு
# பெய்யவேண்டிய மழை பெய்யாம போனா குடிக்க தண்ணிகூட கிடைக்காது!

-

புது முகங்கள் சினிமா படங்களிலிலும், பழைய முகங்கள் விளம்பர படங்களில் (மட்டும்) வெற்றி பெறுகிறார்கள் #நானே யோசிச்சது!

-

ஒரு காலத்தில் Pen தொலைச்சோம், இப்ப Pen drive தொலைக்கிறோம். # அம்புட்டுதான் வளர்ச்சி cum வீக்கம்!

-

குழந்தைகள் கையில் மட்டும் ஓய்வெடுக்கும் சலங்கைகள்கூட சன்னமாய் ஒலித்துக்கொண்டேதான்!
-

ஒருவர்மேல் வரும் கோபத்திற்கு, அப்போது நிகழ்ந்த ஒன்று மட்டுமே பெரிதும் காரணமாக இருப்பதில்லை. எப்பவோ, எங்கோ, யாரோ, எதற்கோ செய்ததும்கூட காரணமாக இருக்கலாம்! #புத்திக்கொள்முதல்

-

ரோட்டில் புகை அடித்து கொசுக்களை வீட்டுக்கு விரட்டிவிடும் பணியை கொஞ்ச நாட்களாக செய்யாமல் இருக்கும் மாநகராட்சிக்கு நன்றி!

-

கவர்மெண்டு பஸ்ல போறப்போ பார்க்கிறதுக்குனே சிலபேரு படம் நடிக்கிற மாதிரியும், சிலபேரு படம் எடுக்கிற மாதிரியும் இருக்கு! # வாழ்க கலைச்சேவை

-

தள்ளிப் போடுதலைமட்டும் உடனுக்குடன் செய்து விடுகிறோம்!

-

குடி போதையில் ஏற்படுத்தும் விபத்துகள் தற்கொலைக்கும், கொலைக்கும் நிகரானது.

-

நேசிப்பு பழகு” # எனக்கு நானே :)

-
பறக்கத் தொந்தரவாக இருக்கும் என்பதனாலும் பறவைகள் தொப்பை வளர்க்காமல் இருக்கலாம்!

-

"விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்" கலைஞர் டிவி வாயிலாக தமிழ்ச் சமூகம் அறிந்துகொண்ட ஒரு சொற்றொடர்! :)

-

ஒவ்வொரு முறையும் மழை தூய்மையாகத்தான் பெய்கிறது.

-

பக்கத்து சந்தில் பாதி சரக்குபாட்டிலை கீழே வெச்சுட்டு ஒருத்தர் என்னமோ பண்றாரேனு பார்த்தா 30+ பல்லு தெரிய, ஆயுதபூஜை சார்ங்கிறாரு குடிமகன் :)


-

ஒருத்தருக்கு பிரச்சனைனா, உடனே கூட இருக்கிறவங்கஎல்லாம் தெரிஞ்ச என்கவுண்டர் ஏகாம்பரவக்கீல்கள் ஆகாம இருத்தல் நலம்!

-

கடந்து போக வேண்டியவற்றை சுமந்து திரிவதும்தான் பல சிக்கல்களுக்குக் காரணம்!

-

எதையும் நினைக்கக் கூடாதுஎன நினைக்க உரிமையற்றவர்கள் நாம் :)


-

வெயிலடிச்சா எரியுது, மழை பெய்தா குளிருது, எந்த எருமை மாடும் ஓடவோ, ஒதுங்கவோ ஏன் இப்படி புலம்பவோகூட செய்வதில்லை. புகாரும் செய்வதில்லை :)
-

கேள்வியுறும் எல்லாப் பெயரிலும் யாரோ ஒருவரை அறிந்திருக்கிறோம், குறைந்தபட்சம் யாரோ ஒருவர் குறித்த நினைவையாவது தக்க வைத்திருக்கிறோம்.

-

மனதிற்கு ஒரு திறவுகோலும், விழி, நாசி, செவிக்கு வேறு திறவுகோலும் அவசியப்படுகிறது!

-

எல்லாமே பழசு ஆகும், பாராட்டு உட்பட!

-

மின் கட்டணம் எவ்வளவு, SMS மூலம் அறியலாம் # வாவ்... வாட் டெக்னாலஜி.... அதுசெரி கரண்டு எப்போ போகும் வரும்னும் SMS தெரியும்ங்ளா?

-

எல்லோருக்கும் எடை குறைக்க ஆசைதான், எவருக்கும் வழக்கத்தை விட மட்டும் விருப்பமிருப்பதில்லை # எனக்கும் நானே! :)))

-

கேள்வி: சார், IRCTC தளம் அடிக்கடி இயங்குறதில்லையே, எப்போ சரியாகும்?
நாராயணசாமி: இன்னும் 15 தினங்களில் IRCTCல் இருந்து மின்சாரம் கிடைக்கும்

-

சல்யூட் ராம்ராஜ்க்கு சல்ல்ல்யூட்ட்ட்! இந்த விளம்பரம் எப்போ போட்டாலும்.. ராமராஜனுக்கு சல்யூட்னே என் காதுல விழுது! # வீ மிஸ் யூ பசுநேசன்!

-

ஒரு வார்த்தையை உதிர்ப்பதையும், விழுங்குவதையும் தீர்மானிப்பதற்குவிதிஎனவும் பெயரிடலாம்!

-

காதலி(லன்) பெயர் கடவுச்சொல்என நகைச்சுவை சொல்லி அதுக்கு சிரிக்கனும்னு எதிர்பார்க்கிற வரைக்கும் இந்த கரண்டு கட் இப்படியேதான் இருக்கும் :)

-

செய்யவேண்டிய வேலைகளை மட்டும் ஒழுங்காக செய்தால், வேலைகள் முடிந்தபிறகும் நிறைய நேரமும் மிச்சம் இருக்கின்றது #ஆனா செய்யமாட்டோம்ல, நாங்க யாரு?


-

பழகிப்போச்சுஎனும் வார்த்தை பழகிப்போகாமல் இருந்திருந்தால், எத்தனையோ மாற்றமும், புரட்சியும் இந்த சமூகத்தில் நிகழ்ந்திருக்கும்.

-

மின்வெட்டுக்குக் காரணம் கடந்த திமுக ஆட்சிதான் -நத்தம் #எந்த ஆட்சினு தெளிவா சொல்லுங்க 2006? 1996? 1989? 1971? 1969? அல்லது அண்ணா ஆண்ட 1967?

-

டிவி பார்க்கவிடாமல் தடுத்த கணவனை வெட்டி கொலை செய்த மனைவி
# அட பக்கிக் பயலே....... ரஷ்யாவுல நடந்ததை ஏண்டா இங்கே தலைப்புச் செய்தில போடுற. என் நல்லநேரம் எங்கவீட்டு மகராசி இதெல்லாம் படிக்கிறதில்லை! :)

-

ஒட்டடை அடிக்கையில் ஒரு சிலந்திக்கூட்டை கலைக்கிறோம் எனும் குற்றஉணர்வு வரவில்லையா?
# சுத்தம் பேணா சோம்பேறித்தனம் எப்படி வேணா யோசிக்கும்!?

-

ஒரு காலத்துல வெளி ஊர்க்காரர்களைப் பார்த்தால்ஊர்ல மழை தண்ணி உண்டானு கேப்பாங்க. இப்பகரண்ட் கட்எவ்ளோ நேரம்னு கேக்குறாங்க! :(

-

கவர்ச்சி வேறு! ஆபாசம் வேறு! # தொலைக்காட்சி பேட்டிகளில் எந்த ஊர் தமிழ் கதாநாயகியும் தெளிவாகப் பேசும் வசனம்!

-

தேடித்தேடிச் சேர்ப்பது, ஒரு கட்டத்தில் தீர்க்கவோ, தொலைக்கவோ தானே!

-

தமிழகத்தில் கொசுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு எதும் இல்லையா?
# To அணுவிஞ்ஞானி நாராயணசாமி! :)

-

பங்குசந்தை டிப்ஸ் தருகிறோம் என இந்தி / ஆங்கிலத்தில் பேசுவோரிடம் (தூய)தமிழில் பேசக் காரணம் மொழிப்பற்று மட்டும் இல்லை. தப்பித்தலும்தான்!


-

எவர் மேலும் யார் சொல்லியும் ஒரு பிரியத்தை சுமத்திவிட முடியாது. தானாக எதாவது கணத்தில் துளிர்க்கும் ஒரு அற்புதம் அது!

-

கரண்ட் இல்லாம சரியாத் தூங்காம, நிறையப் பேரு கொஞ்ச நாள்ல பைத்தியம் பிடிச்சு அலையப் போறாங்க! :(

-

ஒரு புது சினிமா வந்துட்டா, அங்க போடுற விளம்பரக் கொடுமையைவிட, இங்க போடுற விமர்சனப் படுத்தல்தான் ஜாஸ்தியா இருக்கு!

-

புனைப்பெயரின் அதீத வளர்ச்சிதான்ஃபேக் ஐடிகள்! :)))

-

நம்மை அள்ளி தமக்குள்ளே வைத்து பூட்டிக்கொள்கின்றன சில வார்த்தைகள். அதிலிருந்து விடுபட முடிவதில்லை என்பதைவிட நாம் விடுபட விரும்புவதில்லை!

-

இந்தக் காற்றை, இந்த வெளிச்சத்தை, இந்தக் குளிரை, பெயர் தெரியா பறவையின் ஒலியை ஏன் இந்த நாளையும் கூட இப்போதுதான் முதன்முறையாக உணர்கிறேன்!

-

முதல் கவளத்தின் ருசி கடைசிக் கவளத்திலும் இருந்தால் சோறு பத்தலைனும் அர்த்தம்!

-

நான சரியாக எழுதாவிடடாலும, நீஙகள இதை சரியாக வாசிகக முடிகினற பொழுதாவது புரிகினறதா, எதையும புரிநதுகொளள ணணைவிட மூளைதான முகியம எனபது!

-என்னது கரண்டு போகாத ஏரியாக்களில் வீட்டுக்கு வாடகை ஜாஸ்தியா!?” அட ஹவுஸு ஓனருங்களா, உங்க வீட்டுக்குள்ளேயே ரூம் போட்டு யோசிப்பீங்களோ!?

-

தமிழ்நாட்டு மக்களுக்கும் / அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் ஒரே பொதுத் தலைவலிஇந்தக் கரண்டை எவண்டா கண்டுபிடிச்சது?”

-

நான்என்பதைத் தவிர என்ன மிச்சமிருந்துவிடப் போகிறது என்னிடம்.


-

போன் பண்ணினா காசு போறமாதிரி, டெலிமார்க்கெட்டிங்காரங்க போன் பண்ணினா நமக்கு நிமிசத்துக்கு இவ்ளோனு காசு வர்றமாதிரி எதும் வாய்ப்பு இருக்கா?

-
ஒரு சொட்டு மழை நீரை குடிக்கக்கூட இந்த நகர மண்ணுக்கு உரிமை இல்லை #கொஞ்சம் மழைக்கு எத்தன தண்ணி. ஒரு லார்ஜ்கு ஓவரா ஆடுற புதுக்குடிகாரன் போல

-

உயிர் வாழ சுவாசிக்கும் கையளவு காற்றைக்கூட, இது என் காற்று, எனக்கானது எனப்பிடித்து வைத்துக்கொள்ள முடியாதவன் நான்!

-

இருக்கும்போது அதன் பெருமையும், இல்லாதபோது அதன் அருமையும் தெரிவதுபணத்திலும்தான்
#காசும்தான் கடவுளடா!

-

வருசத்துக்கு 3 பொறந்த நாள் கொண்டாடி மூத்தவங்க வயசை முந்த முடியாது. 3 வருசத்துக்கு ஒருக்கா பிறந்தநாள் கொண்டாடி வயசைக் குறைக்க முடியாது

-

இயற்கைதரும் நீரை விடக்கூடாதென செயற்கையாய் முழுஅடைப்பு நடத்திக்கொண்டிருக்கும்போதே கூடுதல் நீரைத்திறக்க கர்நாடகாவை உந்துகிறது இயற்கை. #பாடம்

-

மரணம் ஒரு அழகிய மௌனம்!

-

வாழ்நாள் முழுதும் புரியாததுமரணம்என்பது வெற்றியா தோல்வியா?

-

வெற்றி தோல்வி போலவும், தோல்வி வெற்றி போலவும் தெரிவது மோக யுத்தத்தில் மட்டுமே! :)))

-

ஒற்றை முத்தம் ஒரு யுத்தத்தை நிறுத்தி, பிறிதொரு யுத்தத்தை விரும்பித் துவக்கும் வல்லமை படைத்தது! :)

-
"தனுஷ் 'ஏவுகணை சோதனை வெற்றி
# போச்சுடா... இந்த சிம்பு பயவேற இதுக்குப் போட்டியா ஆரம்பிச்சிடுமே!

-

வலிந்து கட்டும் மௌனக்கோட்டையை, உதிர்த்திட ஒற்றை முத்தம் போதாதா!?

-

மௌனத்தை எப்படிச் சொல்வது! :)

-

தடுக்கி விழுந்தா ஏன் விழுந்தோம்னு யோசிக்காம, ஏன் சின்னப் புள்ளத்தனமா யாரும் பார்த்திருப்பாங்களோனு சுத்திமுத்தி பார்க்கிறோம்?

-

அப்படிப்பார்த்தா... ஊர்ல யாருதான் பெர்ஃபெக்ட்” # பொது சமாதானத் தத்துவம்

-

டீ கடையில் நாம் அதிகம் அரசியலை விவாதிப்பதற்கு அங்கு தொங்கும் தலைப்புச் செய்திகளும், கசங்கிக் கிடக்கும் அன்றைய செய்தித்தாளுமே காரணம் #அதனால!

-

நூறு ரூபாயை வீணடித்த வருத்தத்தைவிட, கீழே கிடக்கும் பத்து ரூபாயை எடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது!

-

எல்லாத்தையும் எல்லார்கிட்டேயும் சொல்லவே சொல்ல முடியாது! # அடிச்சுக்கேட்டாலும் சொல்லாதீங்க! சரியா? :)))

-

ப்ரீபெய்டு வாழ்க்கைநம்பிக்கைகளால் டாப்அப் செய்து, தீர்ந்து கொண்டிருக்கிறது.

-

எந்த முத்தக் கவளத்தில் தீரும் மோகக் குழந்தையின் பசி!

-

எண்ணத்தில் விளைவதைக் கட்டுப்படுத்த இயலுவதில்லை, வெளிப்படுத்துவதில் மட்டுமே கட்டுப்பாடுகள் வைக்கின்றோம்.


-

தப்பித்தவறி யாராச்சும் யோசனை கேட்கும்போது மட்டும், மூளைக்குள்ளே இருந்து ரெண்டு கொம்பு முளைப்பது எப்படி? #என்ன மாயமோ மந்திரமோ தெரியல

-

சோறு தின்னக்கூட நேரம் ஒதுக்காமல் உழைக்கும்(!)போதுதான் புரிகிறது மனிதனாகப் பிறந்ததுக்குப் பதிலா காட்டில் ஒரு விலங்காகப் பிறந்திருக்கலாம்னு!-

திடீரென ஒருவரின் செயல் திமிராகத் தெரிகிறதா? உங்கள் மனதிடம் கேளுங்கள், அவர் சமீபத்தில் உங்களுக்கு பிடிக்காமல் போனவராகவும் இருக்கலாம்.

-

அப்பவே ஃபேஸ்புக், ட்விட்டர் இருந்திருந்தா காந்தி, நேரு, காமராஜ், பெரியார், அண்ணா எல்லாம் என்னபாடு பட்டிருப்பாங்க நம்ம தாத்தா, அப்பாகிட்ட!