நேர்கையில் யாழெடுத்து!

மின்சாரம் பொசுக்கென போன ஒரு இரவுப் பொழுதில் மகளிடம் “நான் சின்னப்பையனா, உன்ன மாதிரி இருந்தப்போ 24 மணி நேரமும் கரண்ட் இருந்துச்சு”னு அடிச்சுவிட்டேன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி துண்டிப்பு, ஹோம் வொர்க், கொசுக்கடி எனக் கொலைவெறியில் இருந்த மகள் ஒரு மார்க்கமாக என்னை முறைத்தாள்.

ஏம்ப்ப்ப்ப்பா,  அப்ப மட்டும் இப்ப இருக்கிற மாதிரி கிரைண்டர், மிக்ஸி, டிவி, ப்ரிட்ஜ், வாசிங்மெசின், ஏசி, வாட்டர்ஹீட்டர், இண்டக்சன் ஸ்டவ், அயர்ன் பாக்ஸ், செல்போன், கம்ப்யூட்டர் அப்புறம் உங்க லேப்டாப் எல்லாம் இல்லைதானேனு போகிற போக்கில் அக்கம்பக்கம் வீட்டில் இருக்கும் சில பொருட்களையும் சேர்த்து பல்பு கொடுத்தாள். (இதெல்லாம் யாராச்சும் சொல்லிக் கொடுத்திருப்பாங்களோ!?)

நான் சொன்னதிற்கு பழிவாங்கலாய் சொன்ன மாதிரி தெரியவில்லை. ஒரு பாடம் சொன்ன மாதிரிதான் தோன்றியது.


***வாசலில் ஓடியதில், காலில் போட்டிருந்த ஒரு கால் செருப்புவார் இன்னொரு காலில் சிக்க, அப்படியே குப்புற கீழே விழுந்ததில் கீழ் உதடு உள்பக்கம் அரை அங்குலம் கிழிந்துபோனது மகளுக்கு, மருத்துவமனை, மருந்து, மாத்திரை என சிறிது பதட்டத்தைத் தணித்து, இரவில் இறுக்கமாய் ஆறுதல் கூறி, ஒரு வழியாய் தூங்க வைக்கையில், மருத்துவர் சொன்னதை அழுத்தமாக நினைவூட்டினேன்.

“முடிஞ்சவரைக்கும் பேசாதே, பேசினா புண் சீக்கிரம் ஆறாது, ரொம்ப வலிக்கும்., எதாச்சும் சொல்லனும்னா ஜாடை காட்டு போதும்”

விடிந்தது…. எப்படித்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்தக் குழந்தைகளுக்கு அவ்வளவு சீக்கிரம் உறக்கம் தீர்ந்து விடுகிறதோ? 

மெல்ல விரல் நுனியால் சீண்டினாள். “ம்” என்றேன். 

“ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்” என்றாள்.

முதல்நாள் மாலை, இரவு எல்லாம் நினைவுக்கு வந்தது. எதும் வலிக்குமோ, எதாச்சும் கேக்குமோ, உதடு திறக்க முடியவில்லையோயென கொஞ்சம் திடுக்கிடலோடு கண் திறக்க உதடு வீங்கியிருந்தது. கண்களில் சிரிப்பு நிரம்பியிருந்தது

”என்ன அம்முக்குட்டி!?”

“ம்ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்” என்றாள் என்னவோ விரல்களில் குறியீடுகளைக் காட்டிக்கொண்டே.

”கம்னு தூங்கு” என அவளுக்கு முதுகுகாட்டிப் புரண்டு படுத்தேன்.

வாகாய் விரிந்த வெற்று முதுகில். விரலால் கிறுக்க ஆரம்பித்தாள். எதோ எழுதுகிறாள் எனப் பிடிபட்டது. முதுகை மெல்ல தளர்த்தி, இறுக்கி,

”ம்ம்ம்… இப்ப எழுது” என்றேன்.

ஒரு எழுத்தை எழுதிவிட்டு “ம்ம்ம்ம்ம்?” என்றாள்…..

“G” என்றேன்… அடுத்தடுத்த எழுத்துகளை எழுத ஆரம்பித்தாள். “O”, “O” “D”
ஒன்று சேர்த்து “GOOD”என்றேன்

“ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்….” மகிழ்ச்சியாய் அடுத்து விரலால் உழத் துவங்கினாள்.
”M”…”O”…. புரிந்து போனது!  

ஓ…. “GOOD MORNINGஆ….. ஆஹா…. குட்மார்னிங் … குட்மார்னிங்” என்றேன் மலர்ச்சியாய், மகிழ்ச்சியாய்

இருக்காதா பின்னே, ஒவ்வொருநாளும் காலையில் 7 மணிக்கு மேலே எழுப்புவதே மிகப்பெரிய யாகமாய் நடந்துகொண்டிருக்கும் வீட்டில், எனக்கு முன் எழுந்தவளிடம் குட்மார்னிங் எனக்கேட்பது எத்தனை இன்பம், அதுவும் முதுகில் ஓவியமாய்… ஆனா அப்போது போன தூக்கத்தை யார் தருவாங்க!? 

***

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கேள்வி...

அந்த பாடத்தை நானும் படித்தேன்...

ரசித்தேன்...

தொழிற்களம் குழு said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

அகல்விளக்கு said...

Life is Beautiful...
Even without Electricity...

:-)

வானம்பாடிகள் said...

:)))))). செம சுட்டி. ஆமா உண்டிவில் எப்ப பழகுனா?

s suresh said...

உங்க மகளின் குறும்புகள் ரசித்தேன்! என் வாழ்த்துக்கள்!

Sakthi Dasan said...

நண்பரே,

தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
http://www.tamilkalanchiyam.com

- தமிழ் களஞ்சியம்

Kayathri Vaithyanathan said...

அருமை கதிர்...ஒவ்வொரு வார்த்தையும் உண்மை..:)

thamilarasi said...

நிகழ்வழகா (அடிப்பட்டதை சொல்லவில்லை, குழந்தைக்கு இப்ப எப்படி இருக்குங்க)எழுதிய விதம் அழகா?

பல்பு பரவசத்தை கொடுத்தாலும் குழந்தை விழூந்துட்டாளேன்னு படிச்சதும் வலி உணர முடிந்தது.

அதை பகிர்ந்த விதம் நெகிழ்ச்சியின் சின்னம் வாசிப்பில் உள்ளம் தர அன்பின் சுவை அளாதியாய் இருந்தது.

கதிர் “ நேர்கையில் யாழெடுத்து “ என்னவொரு வார்த்தை சான்சே இல்லை..ரொம்ப ரசித்த வார்த்தை

Anonymous said...

very nice kathir..

vmanish Kumar said...

very nice sir,

vmanish Kumar said...

Very Nice sir,

kirthi said...

ரொம்ப அழகு...குழந்தையுடன் இருக்கும் கணங்கள்..அருமை..ரசித்து படிக்க வேண்டிய பதிவு.

kirthi said...

ரொம்ப அழகு...குழந்தையுடன் இருக்கும் கணங்கள்..அருமை..ரசித்து படிக்க வேண்டிய பதிவு.

shanmuga vadivu said...

அருமை கதிர் .. இதே மாதிரி என் பசங்களும் குழந்தையா இருக்கும்போது விளையாடுவாங்க கதிர் ...

lakshmi indiran said...

பொண்ணுங்ககிட்ட காசு வாங்கினா இப்படிதான்..இந்த விஷயத்தில் பசங்க எப்படியோ?
ஆனாலும் அந்த நச்சரிப்பு கூட சுகம்தான்...

lakshmi indiran said...

நிச்சியமாய் சொல்லலாம் அந்த அழகியகாலைப்பொழுது ஆசீர்வதிக்கப்பட்ட தருணம் என்று...அழகு