கீச்சுகள் - 15



தேவையான ஆணிகளைப் பிடுங்குவதில் வரும் பிரச்சனைகளை விட, தேவையற்ற ஆணிகளைப் பிடுங்குவதில் வரும் அடிதடிகள்தான் அதிகம்.

~

விழித்து எழுந்து விழிப்பு தீரும் நேரத்திற்குள் அன்பு - கோபம், பாசம் - வேசம், காதல் - காமம், பரிவு - பழி என எல்லாவற்றையும் செலவழிக்க வேண்டியுள்ளது

~

ஊர்ல உருப்படியாப்போற ஒரே தொழில் மெழுகுவர்த்திதான் போல. அன்னாஹசாரே முதல் அணு உலை வரை எந்தப் போராட்டம்னாலும் மெழுகுவர்த்திதான்!

~

காங்கிரஸ் ஆதரவு உண்டு, அதனால்தான் நான் மத்திய மந்திரியாக இருக்கிறேன் - அழகிரி
#அண்ணே, நீங்க கலைஞர் புள்ளைங்கிறதாலதான மந்திரியா இருக்கீங்க!

~

பிடிக்காத படங்களைச் சேமிக்க விரும்புவதில்லை, இருப்பது நாம் எனினும்!

~

60% பேர் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்கள் உள்ள நாட்டில் 70 கோடி பேர் செல்போன்களை வைத்துள்ளனர் # இந்தியாடா :(

~

 “புகழுக்கு மயங்காதவர்எனப் புகழ்ந்தும் வீழ்த்தலாம்!

~

நாக்கைத் துருத்தி பேசக்கூடாதுன்னு சட்டம் ஏதாவது இருக்குதா? - கேப்டன்
# இதுவரைக்கும் ஒரு பாகிஸ்தான் தீவிரவாதிகூட இத தப்புனு சொல்லலையே!

~

நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நபர்கள்தான் இஸ்ரேலிய தூதர் காரில் குண்டுவைத்துள்ளனர் - .சி # தீவிரவாதிகளுக்கான நற்சான்றிதழ்களுக்கு அணுகவும்! :(

~

இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள கறுப்புப்பணம் வெறும்ரூ.24.5 லட்சம் கோடிமட்டுமே! # டேய்... எல்லாம் நல்லாருங்கடா! :(

~

ஒவ்வொருவருக்குள்ளும் ஒருஉலகம்இருப்பதை, நாம் ஏற்க மறு()க்கும்போது சிக்கல் பிறக்கின்றது.

~

காதலர் தினத்தில், தமிழ்க்கவிதைகள் அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகளை இளைஞர்கள் பெரிதும் விரும்புகின்றனர் # எப்படியெல்லாம் தமிழை வளர்க்கவேண்டியதா இருக்கு?:)

~

விவாகரத்து வழக்கில் பிரிந்து வாழும் மனைவி தமது கணவர் வீட்டில் வசிக்க உரிமை உண்டு - உச்சநீதிமன்றம் # மவனே செத்தடா நீ! :))

~

காதலர்களை காதலர்தினத்தன்று தாலியோடு துரத்தும்நல்லவர்களே”, ஒருஎட்டுப்பவுன்தாலிக் கொடியோடு துரத்த உங்களுக்கு தில் இருக்கா? # சவால் :)


~

ஈமூ கோழிகள் இந்தியாவின் தேசியப்பறவை என அழைக்கப்படலாம் # விளம்பரம் விட்டில்கள் :(

~

கிரைண்டர் மிக்ஸி கொடுத்தா போதுமா? "கரண்ட் எங்கே" -கேப்டன் #ஊர்ல இருக்கிற ட்ரான்ஸ்பார்மர் எல்லாம் வெடிக்கவெச்சுட்டு பேச்சப்பாரு பழமயப்பாரு!

~

பெண்களின் செல்போனுக்குத்தான் அதிகம்ராங் கால்அழைப்புகள் வருகின்றன #ஆராய்ச்சி முடிவு :))

~

வீட்டுக்காரம்மா நீங்க #Feb14க்கு யாருக்குமே லவ்லெட்டர் கொடுத்ததில்லையானு உசுப்பேத்துறாங்க #உணர்ச்சிவசப்பட்டு உளறிடாதடா கைப்புள்ள :)

~

எதிரெதிர் துருவங்களும் ஏதோ ஒன்றில் ஒத்துப்போகிறார்கள்.
# காங்கிரசும் சு.சாமியும் ராஜபஷ்சே விச()த்தில் ஒத்துப்போவதுபோல்!

~

விழாக்களில் பணத்தில் மாலை போடுவது, பணத்தில் குடை செய்து பிடிப்பது.... இதையெல்லாம் எங்கய்யா கத்துக்கிட்டீங்க!

~

இந்த கதாநாயகனுங்க மட்டும், வெளிநாட்டுல கூட வீதி வீதியா தெளிவா ஓடுறானுங்களே. மூளைக்குள்ளே கூகுள் மேப் வெச்சிருப்பாங்களோ #டவுட்டு!

~

வீட்டில் ரிமோட், வெளியில் செல்போன் மனிதனின் ஆறாவது விரல்

~

ஒய்யாரமாய் ஓய்வெடுக்கும் தலைவர்களுக்காக ஓங்காரமாய் சண்டையிடும் தொண்டர்கள்!

~

உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக இருப்பவர்கள் இந்தியர்கள்தான் - ஆய்வில் தகவல் # எவனோ தப்பா துப்பு கொடுத்திட்டான் போல!

~

ஒதுங்கிச்செல்வதில் சண்டை - பஸ் டிரைவர் மீது லாரியை ஏற்றிக்கொலை செய்த லாரி டிரைவர் # கொலை செய்ய காரணத்தைவிட ஆள் இருந்துட்டாபோதும் போல :(

~

அரட்டைப்பெட்டியில் அதிகமான பெண்கள் ஆன்லைனில் இருந்தும் பேசாமல் வீம்பு பிடிப்பவனே உண்மையானஅப்பாடக்கர்” :))))

~

செய்ய இயலாததையும் சேகரித்து, நம்மைச் சார்ந்தவர்கள் / குழந்தைகளிடம் அறிவுரையாக சுமத்துவதில் நம்மைவிட சாலச்சிறந்தவர்கள் எவருமில்லை.

~
பூவுக்கு மட்டுமே காசு அழகு மென்மை வண்ணம் வாசம் இலவசமே

~

தமிழகத்தில் மின்வெட்டு சரியாகும்வரை மின்கட்டணம் வசூலிக்கக் கூடாது - காங்கிரஸ் MLA பிரின்ஸ் # நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்!

~

மன்மோகன்சிங் டிவிட்டரில் தொடரும் ஏழே பேரில் அமெரிக்காவின்வெள்ளை மாளிகையும் ஒன்று. #ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு :)

~

குழந்தைகள் மீது செலுத்தும் கோபம்போல் கோழைத்தனம் ஏதுமில்லை!

~

நம்மை நாமே மன்னிக்க முடிவதில்லை # பலநேரங்களில்

~

சென்னை ஆசிரியை கொலையை சட்டஒழுங்கு சீர்குலைவுனு ஆரம்பிச்சிடாதீங்க. இது பெற்றோர்கள் தன்மையின் இயந்திரத்தனமான சீர்குலைவு #விலைமிகு எச்சரிக்கை

~

2ஜி ஊழலுக்கு ராசா மட்டும்தான் காரணமா? - அத்வானி * கர்நாடக கோமாளித்தனங்களுக்கு எடியூரப்பா மட்டும்தான் காரணமா? # அட போங்க பாஸ்!

~

நீ செலவிடும் நேரத்தை இன்னொருவர் வீணடிக்க அனுமதிக்காதே #தத்துப்பித்து

~

முழு மதுவிலக்கு கோரி போராட்டம் - ராமதாஸ் # இப்பத்தான் 3 வண்டியில உங்க கட்சிக்காரங்க, பக்கத்து டாஸ்மாக்லசோலியமுடிச்சிட்டு கிளம்புனாங்க

~

ஒரே சேனலில் ஏமாறச்சொல்லியும், ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை கொடுக்கும் அதிசயம்ஈமுகோழிகளுக்கு மட்டுமே!

~

பாரதிதாசனும் ஒரு தீர்க்கதரிசிதான். ”இருட்டறையில் உள்ளதடா உலகம்னு எப்பவே சொல்லிட்டாரே #கரண்டு கட்

~

அங்கங்கே பொத்தான், 2 பக்கமும் பாக்கெட், தோள்பட்டையில் பட்டை இருக்கிற சட்டை போடுறதுதான்இளமைனு இந்த பெருசுங்ககிட்ட யாரோ சொல்லிட்டாங்க போல! :)))))

~

6 மாசம் முன்னால நத்தம் விஸ்வநாதன், உபரி மின்சாரத்தை வேறு மாநிலங்களுக்கு வழங்குவோம்னு சொன்னப்பவே இப்படியெதாச்சும் நடக்கும்னு நினைச்சேன்

~

மின்வெட்டு நிதர்சனம் எனும் சூழலிலும்கிடைக்கும்வரை பயன்படுத்துவேன்என மின்சாரத்தை வீணடித்தலை எவரும் தவிர்ப்பதாகத் தெரியவில்லை #நானும் :(

~
சமீபகால அவஸ்தைகளில் கொடுமையானது, திடீரென இறந்துபோகும் நண்பரின் / உறவினரின் பெயரை செல்போனிலிருந்து நீக்குவதா? வைத்திருப்பதா?

~

எளக்கியவா(வியா)திகளுக்குத்தான் எளக்கியச் சண்டைகள் புரியும்போல இருக்கு!
#ஒன்னுமே புரியல. புரிஞ்சு மட்டும் என்ன கிழிச்சிடப்போறோம்! :)

~

டாஸ்மாக் விடுமுறை தினங்களை உலகத்திற்கே விடுமுறை தினமாக கருதுகிறான் தமிழன்
# நாலு பேர் கேட்டுட்டாங்கஇன்னிக்கு பேங்க் இருக்கா லீவா?’ :)

~

காலை 7.30 மணிக்கே சாலை சந்திப்புகளில் வாகனங்கள் வரிசை கட்டி பச்சை விளக்கிற்காக நிற்கும் நகரங்களின் வளர்ச்சியைவீக்கம்என்று சொல்லலாம்

~

பிடிக்கலஎனச் சொல்வதைப் பெரும்பாலும் ரகசியமாக ரசிக்கின்றோம் / ஆராய்கின்றோம்.

~

ஒருட்விட்எழுத யோசிக்கும் நேரத்தில் உருப்படியாக எதாச்சும் செய்யலாம் என புத்தி சொல்கிறது, மனசு கேட்கமாட்டேன் என்கிறது #எழுதியாச்சு! :)

~

பாராட்டுகளில்செயல்கள்பின் தள்ளப்பட்டு மனிதர்களே முன்னிறுத்தப்படுகின்றனர்
~

என் மனைவிகள் கூட ஓய்வெடுக்கத்தான் சொல்கிறார்கள்” - கருணாநிதி # ”சொன்ன பேச்சு கேக்க மாட்டேங்கிறியே நைனா” – ஸ்டாலின்

~

மனிதன் வாழ நேமாலஜி, நியூமராலஜி, வாஸ்து, ராசிக்கல், பரிகாரம் என எல்லாம் செய்த பிறகும்இடைவிடாமமூச்சு விடவேண்டியிருக்கு #பாவம்யா மனுசன்

~

மீசை அரும்பும்போது சீக்கிரம் முளைக்கவேண்டுமென நினைத்தவன், மீசை நரைக்கும்போது ஏன்தான் இது முளைச்சதோனு நினைக்கிறான்.

~

கேப்டன் கைய நீட்டி நாக்கை கடிச்சப்போ ஆளுங்கட்சி MLA 10 பேர் பறந்து போகாம, சட்டசபை ட்ரான்ஸ்பார்ம் வெடிக்காம இருந்துதேனு சந்தோசப்படுங்கப்பா!

~

மின்சாரம் தயாரிப்பதில் சீனாவைவிட இந்தியா பெரிதும் பின்தங்கியுள்ளது -.சிதம்பரம் #பாஸ் நாம ஊழல்ல எப்பவோ முன்னேறிட்டோம் பாஸ், கவலையவிடுங்க!

~

தோசைக்கு ஊறுகாயைத் தொட்டுக்கலாமா என யோசிக்கையில் அண்டை வீட்டுச் சகோதரி ஜன்னல் வழியே சட்னி தர தோன்றுகிறதுகடவுள் இருக்கான் கொமாரு”:)

~
பொதுஇடத்தில் யாரோடேய்என யாரையோ கூப்பிட, கூப்பிடப்படுபவரைத் தவிர அதிகப்படியானோர்நம்மையா இருக்குமோ?”வெனத் திரும்பிப்பார்க்கின்றனர்!

~

கைபேசியை காதில் ஒத்தியவாறு கடந்துபோகும் பெண் : ”நமக்குள்ள எதுக்கு SORRY சொல்றே, இப்ப SORRY சொன்னதுக்கு SORRY சொல்லு” #அடங்கொன்னியா!

~

கனவில் செத்துப்போகின்றவர்கள், நிஜத்தில் செத்துப்போவதில்லை. நிஜத்தில் செத்துப்போவோர் கனவில் சாவதில்லை. #அனுமானம்


~

2ஜி - சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடப்பதை அறிய ஆவலாக உள்ளேன் - ஜெ # பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடப்பதை அறிய ஆவலாக உள்ளேன் - .ராசா

~

தாமதமா படுத்து 7 மணிவரை தூங்கலாம்னு நினைக்கிறப்ப மட்டும் எப்படித்தான் குழந்தைக மூக்கு வேர்க்குமோ தெரியலே 5 மணிக்கே எழுந்து வந்து எழுப்புதுக

~

பிடிக்காத வேலையை தள்ளிப்போடுவதில் இருக்கும் ஆர்வம், பிடித்த வேலையைச் செய்வதில்கூட இருப்பதில்லை!

~

கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்” #தமிழக அரசியல்வாதிகளின் புதிய கண்டுபிடிப்பு!

~

பசியோடு வேலைசெய்றவனை, கெடாக்கறி தின்னுட்டு வெத்தலை மென்னுட்டே சாப்பிடபோகலையா மச்சினு கேட்கிறவங்களுக்கு அந்நியன்ல எதும் தண்டனையிருக்கா? :)

~

முடிவடையா பாதாள சாக்கடை, தீராத மின்தட்டுப்பாடு, சிதைந்த சாலைகள் குறித்து சட்டமன்றத்தில் சண்டை இல்லை. கேவலம், யார் பெரியவர் என்பதற்காகவே! :(

~

முதுமலை முகாம் நிறைவடைந்து கோவில்களுக்கு திரும்பிய யானைகள்ஏன்தான் யானையா பொறந்தோமோனு நினைச்சிட்டிருக்கும். :(

~

ஒரு லட்சத்துக்கு மாதம் ரூ.23000 லாபம் தர்றேங்கிறவனை நம்பி ஏமாறுறவங்களை, இன்னும் எத்தனையாயிரம் ஏமாற்றுக்காரர்கள் வந்தாலும் திருத்தமுடியாது

~

எப்போதும் மற்றவர்களுக்கு மட்டும் நல்லவனாக இருப்பது எப்படி?”னு ரெபிடெக்ஸ்ல புத்தகம் எதும் போட்டிருக்காங்களா?

2 comments:

ராஜ நடராஜன் said...

அருமையான ட்விட்கள்!

இசைரசிகன் said...

Mr.Kathir,
Highly readable/ enjoyable Twit's. Keep posting. Thanks.
VV