விலை


னிக்கிழமை மாலை நேரம். ஈரோடு பெரிய மாரியம்மன் கம்பம் பிடுங்குதல், மஞ்சள்நீர் விழா. மதியம் பிரப் ரோடு வழியாகச் சென்றேன். கம்பம் அந்த வழியே வருவதால் வழிநெடுகிலும் பல்லாயிரம்பேர் திரண்டு நின்றிருந்தனர். ஈரோட்டில் இவ்வளவு மனிதர்களா என ஆச்சரியமாக இருந்தது. வீட்டை அடைந்தபோது, வானம் வழக்கத்திற்கு மாறாக கருத்து இருந்தது.



தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்தபோதும், ஈரோட்டில் சொட்டு மழையில்லை. பெரிய மாரியம்மன் கம்பம் பிடுங்கும் தினத்தன்று சில துளிகளாவது மழை பெய்யும் என்பதாகச் சொல்வார்கள். சில ஆண்டுகளில் நானும் அதைக் கண்டிருக்கிறேன்.

அந்த தைரியத்தில்… வீட்டிற்குள் நுழைந்துகொண்டே ”இன்னிக்கு கண்டிப்பா மழை வரும்” என்றேன்

”வராதுப்பா” என்றாள் மகள்

“அதெல்லாம் இல்லடா. கண்டிப்பா வரும் பாரு”

“வாரதுப்பா, என்ன பெட்?” என்றாள்

“என்னது பெட்டா…. செரி…. நீயே சொல்லு”

“ம்ம்ம்ம்…. 100 ரூபா”

உண்டியலில் கொஞ்சம் காசு சேர்த்து வைத்திருக்கும் தைரியம்.

கை என்னையறியாமல் பின்பக்கம் இருந்த பர்ஸை தடவிப் பார்த்தது. பர்ஸில் 100 ரூபாய் இருக்கின்றதா என மனசு கணக்குப் போட்டது.

நானும் அசட்டுத் தைரியத்துடன் “ஓகே. எப்படியும் உன்னோட உண்டியல் காசுல 100 ரூவா போகப்போகுது. செரி குட்டி… பெட் கட்டிக்கலாம்” என்றேன்.

என் (அசட்டுத்) தைரியம் கொஞ்சம் குழப்பத்தை விளைவித்திருக்க வேண்டும்

“அப்பா…. இந்த பெட் வேணாம்… வேற மாதிரி வெச்சுக்கலாம்”

“எப்படி!?”

“ம்ம்ம்ம்ம்…. மழை வந்துடுச்சுன்னா, யாரும் ஒன்னும் பண்ண வேணாம். மழை வரலைன்னா, நீங்க எனக்கு ஃபிஃப்டி ரூபீஸ் கொடுத்துடுங்க”

விதி வலியது!


*****


தொழிலில் நமக்கு பலர் வாடிக்கையாளராக இருப்பது போல், நாமும் சிலருக்கு வாடிக்கையாளாரக இருப்பது நியதி. அச்சுத்துறையில் இருப்பதால், அது தொடர்பான வியாபாரங்களில் நாங்களும் வாடிக்கையாளராக இருப்பதுண்டு.


அச்சுப் பணிகளுக்காக காகித உறைகள் (Paper Covers) வாங்குவது வழக்கம், சிலநேரங்களில் முன்னதாகவே காகிதத்தில் அச்சிட்டு, அதை மடித்து ஒட்டி உறையாக மாற்றுவது வழக்கம். அதற்காக சில இடங்களில் அப்படி ஒட்டித் தருவதை கூலிக்கு (Labour)  கொடுப்போம். வழக்கமான இடங்களில் இப்படிக் கொடுத்து வாங்குவது வாடிக்கை. சில நாட்களுக்கு முன்பு உறை மிகஅவசரமான தயாரிக்க வேண்டியிருந்தது வழக்கமான இடத்தில் முடியாது என்பதால், நண்பர் மூலமாக புதிதாக ஒருவரைத் தேடிப் பிடித்தோம். அந்த உறை மடிப்பில் சில நுணுக்கங்கள் இருப்பதனால் நானே நேரில் சென்று கொடுத்து விளக்கிவிட்டு வரச் சென்றேன்.

பெரும்பாலும் இந்த மாதிரி பணி செய்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே வைத்து செய்வது வழக்கம். அதுவும் குடும்ப நபர்களேதான் செய்வார்கள். சொல்லிவைத்த மாதிரி எல்லோருமே ஓட்டு வீடுகளின் தான் இருக்கின்றனர். அது ஒரு மிகச் சிறிய வீடு. நான் சென்றபோது கணவன், மனைவி, மகள் என பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.


மிகக்குறுகிய அறை, நான் உள்ளே நுழைந்து தரையில் அமர்ந்திருந்தவரின் அருகே மண்டிபோட்டு அமர்ந்து விளக்கம் சொல்ல முற்பட்டேன். அவரின் மனைவி அதிர்ந்துபோய் “அய்யோ சார், சேர்ல உக்காருங்கனு, தடதடவென ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டார்” அட பராவாயில்லைங்க என கீழே அமர்ந்தவாறு விளக்கிவிட்டு கிளம்ப முற்பட்டேன்.

“சார் இருங்க சார்… ஏ பாப்பா ஓடிப்போய் கரும்பு ஜூஸ் வாங்கிட்டுவா” என மகளை துரிதப்படுத்தினார்.

“அய்யே அதெல்லாம் வேணாங்க, நான் இப்பத்தான் டீ குடிச்சுட்டு வந்தேன்” என பொய் சொல்லி மறுத்து வெளியேற முற்பட்டேன்.

“அப்படியெப்படி விடமுடியும்” என தாவி வெளியேறியவர் என் கையை பிடித்துக்கொண்டு என்னோடு வெளியே வந்தார். என்னோடு ஒட்டிக்கொண்டு நடந்தவரின் கையிலிருந்த வியர்வை என் மேல் படிந்தது.


வீதிக்கு எதிர்புறம் இருந்த கரும்பு சாறு கடைக்கு கையைப் பிடித்து இழுத்தாவாறு சென்று “ஜூஸ் குடுப்பா” என்று வாங்கி ஒரு கிளாசை திணித்தார்.

“உங்களுக்கு” என்றேன்

“நாங்க நாளு முச்சூடும் குடிக்கிறதுதானே சார்” என அடுத்த கிளாஸ் வாங்கித் தரமுற்பட்டார். போதுமென மறுத்துக் கிளம்பினேன்.

எத்தனையோ நூறு முறை கரும்புச் சாறு குடித்திருந்தாலும், அப்போது குடித்த சாறுதான் சுவை மிகுந்ததென மனது அழகாக கற்பிதம் செய்யத் தொடங்கியது.

கடையின் முன்பக்கம் இருந்த பந்தல் குச்சியில் ஒரு அட்டையில் ”கிளாஸ் 5 ரூபாய்” என எழுதப்பட்டிருந்தது.

சாறுக்கு விலை வைக்கலாம், சாறில் கலந்திருந்த அன்பிற்கு என்ன விலை வைக்க முடியும்.

-*-

14 comments:

vasu balaji said...

ஆஹா குட்டி இம்புட்டு தேறிட்டாளா?:)))).

selvasankar said...

arumai sir...

ஓலை said...

Arumai kathir.

ராமலக்ஷ்மி said...

ஐம்பது ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் பின்னான சம்பவங்கள் சுவாரஸ்யம்.

துளசி கோபால் said...

அருமையான சம்பவங்கள். ரசித்தேன். அன்புக்கும் உண்டோ அடைக்கும்.....தாழ்?

அகல்விளக்கு said...

ஐந்து ரூபாயின் பிண்ணனி அருமை... இதுபோன்ற விசயங்களை கவனியாது செல்பவர்களே அதிகம்...
உங்கள் விவரனையில் அருமை... :-)

Anonymous said...

புலிக்கு பிறந்தது புனையாகுமா?
நீங்கள் புத்திசாலி,உங்கள் மகள் அதிபுத்திசாலி.

க.பாலாசி said...

//நீங்க எனக்கு ஃபிஃப்டி ரூபீஸ் கொடுத்துடுங்க//

சிங்க குட்டி சாரே...சிங்க குட்டி...

இன்னமும் கிராமத்து பக்கம் உறவினர் வீட்டுக்குபோகும் போதெல்லாம் கலர் வாங்கிக்கொடுப்பாங்க.. கலராயிருந்தாலும், கரும்புச்சாராயிருந்தாலும் அந்த அன்பு என்றும் இனிப்பாவே இருக்கும்..

*இயற்கை ராஜி* said...

Kutty. Keep it up ma.50 Illa da 500
ah kelu

*இயற்கை ராஜி* said...

Kutty. Keep it up ma.50 Illa da 500
ah kelu

*இயற்கை ராஜி* said...

Kutty. Keep it up ma.50 Illa da 500
ah kelu

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை. :-)))

சத்ரியன் said...

அருமை கதிர்.

என்ன செய்ய ஏழைகளிடம் தான் எஞ்சியிருக்கிறது - அன்பு.

Unknown said...

அன்புக்கு விலை வைக்க முடியாதுல்ல...அருமை