டாஸ்மாக்



போதை சூழ் மனிதர்களிடம்
போதையற்று உழல்வதே
ஒரு போதை!

-0-

சபதத்தோடு தொடங்கும் குடி
மதுக்குப்பி தீர்கையில்
தீர்த்துவிடுகிறது சபதத்தை!

-0-

தழுவித் தஞ்சம்புகும் மது
திறக்கிறது அம் மனங்களையும்
சிலநேரம் அம்மணங்களையும்!

-0-

பசியாய் அன்பும் உணவாய் வம்பும்
அவ்வப்போது பரிமாறப்படுகிறது
மதுபான மேசைகளில்!

-0-

கூடுதலாய்ச்சேரும் மதுத்துளிகள்
ஒரேநேரத்தில் எழுப்பவல்லது
உறங்கும் கடவுளையும் சாத்தானையும்!

-0-

வரம்புகள் மீறப்படும்
மதுச்சுற்றிலும் உணரலாம்
சிறுதுளி பெருவெள்ளம்

-0-

10 comments:

மோனி said...

பெற்றேன் பேறு :-)

அசோக்ப்ரியன் said...

Super thala

தமிழன்வலை said...

படிச்சா சந்தோஷத்தில் மனசு peg peg nu அடிச்சுக்குது

everestdurai said...

"டாஸ்மாக்" அருமை

Anonymous said...

மிக நன்று ( மிதமாக இருக்கு )

vasu balaji said...

எல்லா கட்டிங்கும் சூப்பர் மேயரே. கலக்கல் கவிதைகள்னா டாஸ்மாக் காரன் கம்ப்ளெயிண்ட் பண்ணீருவான்ல:)))

Paleo God said...

சியர்ஸ்! :)

'பரிவை' சே.குமார் said...

போதைப் பிண்ணனியில் தேன் கவிதைகள்.
அருமை அண்ணா.

பழமைபேசி said...

மச்சி, கோட்டர் சொல்லேன்!

jalli said...

'baru'kkulley nalla naadu..