சொர்க்கமும் நரகமும்

நீள் பயணங்களில்
நெரியும் சனத்திரளில்
பாரம் தாங்கமுடியாமலோ
பத்திரமாய் உறங்கட்டுமெனவோ

நம் மடிமீது வலிய
இறுத்தப்படும் குழந்தையின்
எப்போதாவது இதமாய்
உந்தும் பிஞ்சுப்பாதம்
இதழ்வழியே தவழ்ந்து
ஈரமூட்டும் எச்சிலமுதம்
கனவுகளில் தேவதைகள்
கூட்டிடும் குறுஞ்சிரிப்பென
என்னதான் சொர்க்கத்தை மீட்டினாலும்

இறுதியாய் எப்போது
சிறுநீர் கழித்திருக்குமென
நச்சரிக்கும் சிந்தனை
நரகத்திலிருந்து
தப்பிக்க முடிவதில்லை
பல நேரங்களில்!

-0-
04 செப் 2011 திண்ணை இணைய இதழில் வெளியான கவிதை. நன்றி திண்ணை!

6 comments:

வெள்ளிநிலா said...

//இறுதியாய் எப்போது
சிறுநீர் கழித்திருக்குமென
நச்சரிக்கும் சிந்தனை
நரகத்திலிருந்து
தப்பிக்க முடிவதில்லை
பல நேரங்களில்!//

கவிதையின் அடிப்படை சிந்தனை என நிஜ முகத்தை துகிலுரிக்கிறது

- ஷர்புதீன்

vasu balaji said...

நைஸ் ஒன்

அன்புடன் அருணா said...

hahaha it happens!

ஸ்ரீராம். said...

அருமை. இரண்டு விதச் சிந்தனைகளும் நேர்மையாய் வெளிப் பட்டிருக்கின்றன.

Anonymous said...

சொர்ககம் ஒப்புகிடலாம்..சிறுநீர் சிந்தனை நரகம் என நினைக்கும் அளவு இருக்காதென நம்புகிறேன்...

KSGOA said...

நல்லா இருக்கு.