அசைந்து நகரும் ரயில்பெட்டிகளுக்கு
அசையும் எல்லாக் கைகளிலும்
அப்பிக்கொள்கிறது பிரிவு.
பதிந்து வைத்த இருக்கையெனினும்
பரபரப்பாய்த் தேடியலைந்து
கண்டடையும்போது பரவும் நிம்மதி.
நடன லயத்தில் நகரும் பெட்டியில்
இடறி நடப்பவர்கள் இடைவிடாது
விதைக்கிறார்கள் மன்னிப்பை.
காலை ரயிலில் சாப்பிடுபவர்கள்
அருகில் இருப்பவர்களுக்கு
ஊட்டுகிறார்கள் பசியை
எல்லாப் பயணங்களோடும்
ஓடும் ரயில் பெட்டிகளுக்கு
உள்ளேயே
குறுக்கும் நெடுக்குமாய்
ஓடும் ஏதாவதொரு குழந்தை
மறக்கவைக்கிறது வயதை.
---------
குறிப்பு: இந்த வார (20.07.11) ஆனந்தவிகடன் ”சொல்வனம்” பகுதியில் வெளியான கவிதை
17 comments:
அருமையான கவிதை.
மகிழ்ச்சி:)! ஆனந்த விகடன் பிரசுரத்துக்கு வாழ்த்துக்கள்!
இணையம் தாண்டிய வாசக வட்டத்துக்கு உங்கள் படைப்புகள் இனித் தொடர்ந்து கிடைக்கட்டும்.
வாழ்த்துக்கள் நண்பரே.
மிகவும் நன்றாகவுள்ளது கவிதை.
உணர்வுகளின் பிரதிபலிப்பாய்!
வாழ்த்துகள் கவிஞரே
ரொம்ப நாளைக்கப்பறம் மிகவும் ரசித்து வாசித்த கவிதை.. அதுவும் சாப்பிடுபவர்கள் பசியை ஊட்டுவது அருமை.. இது பிரசுரம் ஆனதுல ஆச்சர்யமில்லை... வாழ்த்துக்களும்...
கவிஞர் ஈரோடு கதிர் வாழ்க!
கவிஞர் ஈரோடு கதிர் வாழ்க! வாழ்க!
நிஜம் சொல்லும் கவிதை . உங்கள் படைப்புக்கள் மேலும் திசைஎங்கும்பரவவேண்டும்
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
அருமையான கவிதை.
ஆனந்த விகடன் பிரசுரத்துக்கு மகிழ்ச்சி.
//குறுக்கும் நெடுக்குமாய்
ஓடும் ஏதாவதொரு குழந்தை
மறக்கவைக்கிறது வயதை//
அருமை. விகடனில் பிரசுரமானதுக்கு வாழ்த்துகள்.
நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்.
//அசைந்து நகரும் ரயில்பெட்டிகளுக்கு
அசையும் எல்லாக் கைகளிலும்
அப்பிக்கொள்கிறது பிரிவு.//
நெடுங்கால பிரிவினைக் கொடுக்கும் கையசைப்புகள் கண்களில் படிந்து நினைவில் அசைந்துக் கொண்டேயிருக்கும்.
வாழ்த்துக்கள் கதிர்.
போங்க கதிர் உங்களை வாழ்த்தி வாழ்த்தி ஒரே பொறாமைக்க்காரியா ஆயிட்டேன்...
நான் ஆனந்த விகடன் வெள்ளிகிழமை காலை வாங்கி படிக்கும் போது உங்கள் கவிதை படித்து பார்த்து சந்தோசப்பட்டேன் கதிர் வாழ்த்துக்கள்
அசைந்து நகரும் ரயில்பெட்டிகளுக்கு
அசையும் எல்லாக் கைகளிலும்
அப்பிக்கொள்கிறது பிரிவு.
காலை ரயிலில் சாப்பிடுபவர்கள்
அருகில் இருப்பவர்களுக்கு
ஊட்டுகிறார்கள் பசியை
அருமை நண்பரே
அருமையாயிருக்கு கவிதை..
அருமையான கவிதை.
Post a Comment