குழந்தைகளை
நிழற்படக் கருவிக்குள்
அடைக்கும் பொழுது...
கூடவே தேவதைகளும்
குடிபுகுந்து கொள்கின்றன...
நிழற்படக் கருவிக்குள்
அடைக்கும் பொழுது...
கூடவே தேவதைகளும்
குடிபுகுந்து கொள்கின்றன...
----------------------------------------------------------------------------------------
இரவு முழுதும்
வெளிச்சம் இருளையும்
இருள் வெளிச்சத்தையும்
மாறிமாறித் தின்று தீர்க்கின்றன
ஒன்றுமே..... ஒரு நாளில்
பசியாறிவிடுவதில்லை!!!

ஆயுதங்கள்....
அவர்களைக் காக்கவா,
நம்பியவர்களைக் காக்கவா!?
அவர்களைக் காக்கவா,
நம்பியவர்களைக் காக்கவா!?
----------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு முறையும்
ஒற்றைப் பனை
உதிர்த்துக் கொண்டேயிருக்கிறது
ஏதோ ஒரு கவிதையை!
ஒற்றைப் பனை
உதிர்த்துக் கொண்டேயிருக்கிறது
ஏதோ ஒரு கவிதையை!
----------------------------------------------------------------------------------------
தென்னமரத்தடியில்
உட்கார்ந்து
தேநீரும்
குடிக்கலாம்!!!!
உட்கார்ந்து
தேநீரும்
குடிக்கலாம்!!!!
----------------------------------------------------------------------------------------
நண்பனை தவறுதலாக
மாற்றி அழைத்துவிட்டு..
மாற்றித்தான் அழைத்து விட்டேன்
எனச் சொல்லும் உண்மையில்
ஒரு நிம்மதி நிலவுகிறது!
மாற்றி அழைத்துவிட்டு..
மாற்றித்தான் அழைத்து விட்டேன்
எனச் சொல்லும் உண்மையில்
ஒரு நிம்மதி நிலவுகிறது!
----------------------------------------------------------------------------------------
சட்டென புகழும் மனது,
புகார் சொல்லவும்
அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை
புகார் சொல்லவும்
அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை
----------------------------------------------------------------------------------------
தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது
யாரோ ஒரு சிலரிடம் மட்டும்
சட்டென ஒத்துக்கொள்ளத்
தோன்றுகிறது!
யாரோ ஒரு சிலரிடம் மட்டும்
சட்டென ஒத்துக்கொள்ளத்
தோன்றுகிறது!
----------------------------------------------------------------------------------------
வீடு - அலுவலம் - வீதி - மனது.....
என எல்லாக் குப்பைத் தொட்டிகளும்
வேகமாய் நிரம்பி வருகின்றன.
கொஞ்சம் மக்கும் குப்பை
நிறைய மக்காத குப்பை.....
என எல்லாக் குப்பைத் தொட்டிகளும்
வேகமாய் நிரம்பி வருகின்றன.
கொஞ்சம் மக்கும் குப்பை
நிறைய மக்காத குப்பை.....
----------------------------------------------------------------------------------------
தோல்விகளின் வலியை விட
தோல்விகளை
ஒப்புக்கொள்வதன் வலியே
கொடூரமானது!
தோல்விகளை
ஒப்புக்கொள்வதன் வலியே
கொடூரமானது!
----------------------------------------------------------------------------------------
என்றாவது ஒரு நாள் நடக்கும் என்பது......
நியதியெனினும்,
அது இன்றே நடந்தால்
ஏற்றுக்கொள்ளத் தடுமாறுகிறோம்!
நியதியெனினும்,
அது இன்றே நடந்தால்
ஏற்றுக்கொள்ளத் தடுமாறுகிறோம்!
----------------------------------------------------------------------------------------
தாங்க முடியாத
தண்டனைகள் கிடைக்கும் போதுதான்,
போகிற போக்கில் விதைத்த
குற்றங்களின் கொடூரம் உரைக்கிறது.
தண்டனைகள் கிடைக்கும் போதுதான்,
போகிற போக்கில் விதைத்த
குற்றங்களின் கொடூரம் உரைக்கிறது.
----------------------------------------------------------------------------------------
பறக்கும் தட்டுகள் குறித்த
கதைகள் - செய்திகள்
ஆச்சர்யத்தை,
நம்பிக்கையின்மையை,
பயத்தை
ஒருசேர விட்டுச்செல்கிறது.
கதைகள் - செய்திகள்
ஆச்சர்யத்தை,
நம்பிக்கையின்மையை,
பயத்தை
ஒருசேர விட்டுச்செல்கிறது.
----------------------------------------------------------------------------------------
25 பைசா காசும்
இனி இறந்து போகப் போகிறதாம்!
ஒவ்வொரு காசுக்கும்
ஒரு கதை இருக்கு நமக்குள்ளே!
பத்து பைசா விளிம்பு போல்
வளைந்த முடி என்று
வர்ணிக்கப்பட்ட பெண்ணும்
வர்ணித்த நண்பனும்
பழைய பத்துப் பைசாவைப்
பார்க்கும் பொழுதெல்லாம்
நினைவுக்குள் அலையடிப்பதுண்டு...!!!

சோறாக்கும் கேஸ் சிலிண்டருக்கான
மானியத்தை நிறுத்தும் வெண்ணைகள்
அந்த சிலிண்டருக்கு வரி வாங்குவதையும்
நிறுத்துவாங்களா!?
மானியத்தை நிறுத்தும் வெண்ணைகள்
அந்த சிலிண்டருக்கு வரி வாங்குவதையும்
நிறுத்துவாங்களா!?
----------------------------------------------------------------------------------------
பகல் பொழுதிலும்
திறக்கப்படாதா கடைக் கதவுகள்
கடந்து செல்பவனின் உற்சாகத்தையும்
தனக்குள்ளே பதுக்கிக்கொள்கிறது!
திறக்கப்படாதா கடைக் கதவுகள்
கடந்து செல்பவனின் உற்சாகத்தையும்
தனக்குள்ளே பதுக்கிக்கொள்கிறது!
----------------------------------------------------------------------------------------
இப்படியே இனிப்ப திணிங்க
ஒருநாள் இல்லாட்டி ஒருநாள்
சக்கரைவியாதி வந்துடும்னு சொல்லி
எம்ஜிஆர் ரெட்டை வெரல
ரெண்டு கண்ணுலயும் விட்டு
நோண்டப்போறாரு பாருங்க! :))))
ஒருநாள் இல்லாட்டி ஒருநாள்
சக்கரைவியாதி வந்துடும்னு சொல்லி
எம்ஜிஆர் ரெட்டை வெரல
ரெண்டு கண்ணுலயும் விட்டு
நோண்டப்போறாரு பாருங்க! :))))
----------------------------------------------------------------------------------------
-0-
16 comments:
கீச்சு கீச்சுன்னு கீச்சிட்டீங்ணா:))
கதிரு,
ஏன் இந்த வேண்டாத வேலை உங்களுக்கு .
’வானம்பாடிகள்’அண்ணனைப் பாருங்க.
தலைய சொரிஞ்சிக்கிட்டிருக்காரு (போட்டோவுல). இதுக்கேன எதிர் இருகைப் போடலாம்னு!!!!!
அருமையா இருக்கு கதிர்.
இந்த 25 காசுக்காக என் நைனாகிட்ட வௌக்கமாத்தடி வாங்கினதெல்லாம் என்னோட வரலாற்று குறிப்பில் உள்ளது யுவர் ஆனர்...
எல்லாமே cadburys chocolates....சுவைக்கும் போதே கரைகிறது...
//எல்லாமே cadburys chocolates....சுவைக்கும் போதே கரைகிறது...//
தமிழ்,
லேட்டா வர்றவங்களுக்கு ‘சாக்லேட்’ லேதா?!!!
”தேவதை”
வரிகள் அருமை கதிர்
கதிர்,
அந்த பாலாசி பயபுள்ளைய வாயிலிருந்து வெரல எடுக்கச் சொல்லுங்க. இல்லன்னா பல்லு நெட்டிக்கினு வெளில வரும்.
அத்தனையும் அருமை.
முதல் ஐந்து படங்களையும் ஏற்கனவே ஃப்ளிக்கரில் பார்த்துள்ளேன் என்பதால் பெயர் போட்டிருக்கலாமே என நினைத்தேன். கடைசியில் குறிப்பிட்டு விட்டீர்கள். நல்லது. வாட்டர் மார்க் செய்யப் படியுங்கள்:)!
:-)
அட்டகாசம்.
Nice photos and anecdotes.
"தென்னமரத்தடியில்
உட்கார்ந்து
தேநீரும்
குடிக்கலாம்!!!!"
தான் சமைச்ச உணவை தனக்கே பிடிக்காதுன்னு சொல்ற மாதிரி
இளநீர் வெட்டிர ஆளுக்கு இளநீரெல்லாம் அவ்வ்வ்வவ்வ்வ்வ் !
நயம்!
கலக்கிட்டிங்க நண்பரே !!!
எல்லாக்கவிதைகளுக்கும் நான் உடனடி ரசிகனாகிவிட்டேன்.குறிப்பாக பழய்ய நாணயம்.படங்கள் அற்புதம் கதிர்.
கவிதையும் அதற்கேற்ற படமும் அருமை
அருமை நன்பா...
Post a Comment