வேப்பமரத்தைத் தழுவி சாளரத்தில் சலசலக்கும் காற்று
கதகதப்பைக் கசியவிடும் சுவர் சில்லிடும் தரை
குதறும் குடும்பச் சண்டைகளை தின்று தீர்க்கும் கதவு
இடி மழை வெப்பம் குளிர் எதையும் செரிக்கும் கூரை
களைத்து வீடடைய தாயாய் தழுவும் தாழ்வாரம்
நேசித்துக் கொண்டாட ஒன்றா ரெண்டா ஒரு வீட்டில்
சமையலறை முகப்புச்சுவர் சாவி மாட்டுமிடம்
ஓய்வெடுக்கும் கொசுவை சுவரோடு ஓங்கியடித்த இரத்தக்கறை
காற்றில் தூரியாடும் மாத நாட்காட்டியின் அடிப்பக்க பிறை
சுவற்றில் கால் வைத்து ஓய்வெடுத்ததன் சாட்சியாய் குதிகால் சுவடு
நடக்கப் பழகிய பிள்ளை தாறுமாறாய்த் தீட்டிய கிறுக்கல்கள் என
கறைகள் படியா சுவர்கள் ஆன்மாவைத் தொலைத்தவை
உறங்கவும் புழங்கவும் புணரவுமான வெற்றுக்கூடா வீடு
பிறந்த மனிதர்களை அடைகாக்கும் கருவறைதானே வீடு
-0-
-0-
14 comments:
சூப்பர்,,,,,,,
mm..nothing different.... as unusual..
super :-)
"மனிதர்களை அடைகாக்கும் கருவறைதானே வீடு" நன்றாக இருக்கு.
/உறங்கவும் புழங்கவும் புணரவுமான வெற்றுக்கூடா வீடுபிறந்த மனிதர்களை அடைகாக்கும் கருவறைதானே வீடு/
மிக அருமை.
Yeppidi irunthaalum
Home Sweet Home
really superb...
கதிரின் கவிதை எப்போதும் போல் அருமை. அதுவும் சாளரம், சுவர், தரை கதவு என ஒவ்வொன்றுக்கும் தனியாக கொடுக்கப்பட்ட வேலை ரசனை.
//உறங்கவும் புழங்கவும் புணரவுமான வெற்றுக்கூடா வீடு..//
கதிர்,
அப்பப்போ ’சாட்டை’யை உங்கள் கவிதை வரிகள் எடுத்துக் கொள்கிறது.
சூப்பருப்பு!
//உறங்கவும் புழங்கவும் புணரவுமான வெற்றுக்கூடா வீடு
பிறந்த மனிதர்களை அடைகாக்கும் கருவறைதானே வீடு//
கவிதையாய்.....
Super.
நல்ல பகிர்வு.
வீடு என்று சொல்லும்போதே மனம் தழுதழுக்கிறது.அத்தனை சக்தி இருக்கிறது அந்தக்கூட்டுக்குள் !
வீடு பற்றிய அருமையான கவிதை.வெறும் சிமெண்ட்டும் செங்கல்லும் போட்டு கட்டப்பட்டது மட்டுமேவீடு என நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு அது மனிதர்களை அடைகாக்கும்கருவறை என்பதை எடுத்துரைத்த அழகிய கவிதை.
Post a Comment