உயிருக்குள் ஊட்டுவது



வெள்ளி தலைக்குளியலில்
அடங்காமல் பறக்கும் முடியை
கழுத்தோரம் காதோரம் கடத்திவிட்டு
என் நாசிதேடும் உன் வாசக்காற்றும்
 
என்னுள் வேர்விட்டு கிளைபரப்பி
சொட்டுச்சொட்டாய் உயிர்திருடி
வெண்வரிகளோடு உன் புடவையில்
அடர்த்தியாய்ப் பூத்த செம்பருத்திப்பூக்களும்


கண் சிமிட்டிச் சிமிட்டி
உதடுகளைச் சுழித்துப்பிசைந்து
காதுவழியே கரைத்து ஊற்றும்
வார்த்தைக் கவிதைகளும்

என்னிடமிருந்து என்னைப்பறித்து
விடைபெறும் தருணங்களில்
வலிக்காமல் செல்லமாய்க் கிள்ளும்
நகத்தில் பிறக்கும் பிறைவடிவமும்

என்னுள் தளும்பும் சொற்கள் ஏராளம்
இருந்தும் எதுவும் அலுக்கவில்லை
உயிருக்குள் ஊட்டுவது நீ என்பதாலும்
ஏந்திக்கொள்வது நான் என்பதாலும்

-0-

15 comments:

க ரா said...

காதல்..பியார்.. பிரேமம்... நல்லா இருக்குங்ணா ! :)

Anonymous said...

கதிர் அப்படியே கரைந்து போகிறது காதல்..வரிக்கு வரி காதல்...அன்பின் பரிமாற்றம் மிக அசத்தலாய்.. நிறைய முறை படிச்சிட்டேன்..

//கடத்திவிட்டுஎன் நாசிதேடும் உன் வாசக்காற்றும்
என்னுள் வேர்விட்டு கிளைபரப்பிசொட்டுச்சொட்டாய் உயிர்திருடி//

ரொம்பவும் இரசிச்சேன் இவ்வரிகளை..

//கிள்ளும்நகத்தில் பிறக்கும் பிறைவடிவமும்
என்னுள் தளும்பும் சொற்கள் ஏராளம்இருந்தும் எதுவும் அலுக்கவில்லைஉயிருக்குள் ஊட்டுவது நீ என்பதாலும்ஏந்திக்கொள்வது நான் என்பதாலும்
//

இது தான் காதல் என்பதா? வாவ் சூப்பர் அருமை யாருக்கு எப்படியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

vasu balaji said...

நான் அப்புறம் பின்னூட்டம் போடுறேன்.:))

ஓலை said...

Wow. ! WoW !

ஹேமா said...

கிள்ளும் நகத்தில் பிறக்கும் பிறைவடிவம்...இதுதான் காதலில் அணு அணுவாய் ரசிப்பது.

preethishanmugam said...

Ultimate Love Poem!

preethishanmugam said...

Ultimate Love poem!

Kumky said...

வானம்பாடிகள் said...
நான் அப்புறம் பின்னூட்டம் போடுறேன்.:))

அதை பார்த்துட்டுத்தான் நான் பின்னூட்டம் போடுவேன்...

சத்ரியன் said...

இன்னிக்கு புதன்கிழமை தானெ ஆகுது சாமீ!

ஓஹ்ஹ்ஹ்ஹ்! போன ’வெள்ளி’யோ?

அப்பச் சரி தான்.

கவிதை அருமையா ரசனையா இருக்கு கதிர்!

சத்ரியன் said...

// கும்க்கி said...
வானம்பாடிகள் said...
நான் அப்புறம் பின்னூட்டம் போடுறேன்.:))

அதை பார்த்துட்டுத்தான் நான் பின்னூட்டம் போடுவேன்..//

இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்.

Unknown said...

இது என்ன கவிதைக் காலமா?

Veera D said...

"எதுவும் அலுக்கவில்லை
ஊட்டுவது நீ என்பதாலும்
ஏந்திக்கொள்வது நான் என்பதாலும்"

.....காதல் யாரை விட்டது..!!

கிருத்திகாதரன் said...

மனம் குழைய வரும் வார்த்தைகள்.குழைவு பரவுகிறது மெலிதாக அடுத்த மனங்களிலும்.

Unknown said...

தேனில் மூழ்கிய எறும்பாக !
உன் அன்பில் திகட்டாமலே,
இருக்கவும் ....................,
இறக்கவும் .....................!

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - வானம்பாடி இன்னும் பின்னூட்டம் போட வில்லை - ம்ம்ம் - செல்லக் கிள்ளல் - வலிக்காத கிள்ளல் - விடை பெறும் போது கிள்ளல் - பிறை வடிவம் - ம்ம்ம்ம்ம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா