கிழியா மௌனங்கள்


ஒவ்வொரு முறையும்
நீ அடைகாக்கும்
மௌனங்களைக் களவாட
கள்ளச்சாவிகளை தயாரிக்கிறேன்
கவிதைகளின் வாயிலாக!

-0-
உன் மௌனக்குளத்தில் நானும்
என் மௌனக்குளத்தில் நீயும்
மாறிமாறி வார்த்தைக் கல் வீசுகிறோம்…
நகரும் அலைகளில் மிதப்பது
என்னவோ நாமேதான்!

-0-
வார்த்தைகளைக் கொன்று
மௌனக்கோட்டை கட்டுகிறாய்
ஒற்றை வார்த்தை அம்பில்
துளிர்க்கிறது ஒருநூறு வார்த்தைகள்
சரிகிறது கோட்டை
தொலைகிறது மௌனம்

-0-


உன் மௌனத்தை தின்று பசியாறி
கொஞ்சம் வார்த்தைகளைச் சுமந்து வா
என்னைத் தின்னும் மௌனத்திலிருந்து
என்னைக் கொஞ்சம் மீட்க!

-0-

18 comments:

vasu balaji said...

ஊட்ல போய் இந்த பக்கத்த அம்மணி கண்ல பட்றாமாதிரி தொறந்து வச்சிட்டு, வேணுமின்னே வெள்ளத் துண்ட ஒதறி ஒதறி சமாதனக் கொடி பறக்கவிட்டு...அந்த ஒரு நிமிசம் எகிறாம இருந்தா இந்தப்பாடு தேவையா:))

ஓலை said...

பாலா சார் ! ஹா ஹா ஹா.

இது கசியும் மௌனம். அருமை.

மதுரை சரவணன் said...

mounMAAI ORU VAALTHTHUKKAL

ஹேமா said...

கிழியா மௌனங்கள் காதல் பேசுகிறதே !

காமராஜ் said...

கதிர் மௌனம் சொல்லும் அழகிய கவிதை.இவ்வளவு வார்த்தைகளைக்காட்டிலும் அந்த மௌனம் அழகியது அடர்த்தியானது.

பாலாண்ணா சொல்லுவது எப்போதுமே எதார்த்தமான நக்கல்

ஸ்ரீராம். said...

அருமை. கடைசி வரிகள் இன்னும் அருமை.

ராமலக்ஷ்மி said...

//ஒற்றை வார்த்தை அம்பில்
துளிர்க்கிறது ஒருநூறு வார்த்தைகள்//

அருமை.

கூடல் பாலா said...

அருமையான வார்த்தை ஜாலம் ..

Anonymous said...

மெளனமுன்னு சொல்லியே இவ்வளவு பேசுகிறதே கவிதை..இது தான் காதல் என்பதா? கதிர் கசியும் மெளனத்தில் கிழியா மெளனங்கள்..மொழி பெயர்க்க முடிகிறது..

அ.முத்து பிரகாஷ் said...

வார்த்தைகளின் அருமை மௌனத்தில் தெரிகிறது
மௌனத்தின் அருமை வார்த்தைகளில் தெரிகிறது
ரெட்டை தண்டவாளங்களில் போகிறது ரயில்

யோசிக்க செய்த உங்கள் வரிகளுக்கு நன்றி

உங்கள் கருத்துரைக்கு..
சாரு என்கிற கோணல் மனிதரின் தப்புத் தாளங்கள்
http://neo-periyarist.blogspot.com/2011/06/blog-post.html

kk said...

aha mounathirku ippadi oru kavithaiya super. Yar anthap pen unnka ponna

VELU.G said...

மௌனம் பேசுகிறது

Deepa said...

ரொம்ப நல்லா இருக்கு கதிர்.

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - அருமை அருமை - சிந்தனை அருமை - மௌனம் கலைய வேண்டும் என்னும் இலக்கினை நோக்கி - கள்ளச்ச்சாவி தயாரிப்பதும், கல்லெறிந்து அலைகளை உண்டாக்குவதும், ஒற்றை அம்பில் மௌனக்கோட்டையைத் தகர்ப்பதும், சரணாகதி அடைவதும் - நன்று நன்று - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நாடோடி இலக்கியன் said...

அருமை.

3ம்,4ம் ரொம்ப‌ பிடிச்சிருந்த‌து.



க‌சியும் மௌன‌ம்,க‌ள்ள‌ மௌன‌ம்,கிழியும் மௌன‌ம்,அட‌ர் மௌன‌ம் ,அப்புற‌ம்....

Unknown said...

மௌனத்தால் கசிந்த கவிதை! சிறப்பாக உள்ளது.

Gayathiry said...

///ஒவ்வொரு முறையும்
நீ அடைகாக்கும்
மௌனங்களைக் களவாட
கள்ளச்சாவிகளை தயாரிக்கிறேன்
கவிதைகளின் வாயிலாக!///

அழகிய வரிகள் !!!

பா.சதீஸ் முத்து கோபால் said...

புதுசா இருக்குங்க... நல்ல இருக்கு