அடர் வீச்சம்


வார விடுமுறையில் மூடப்பட்ட கடைக்குள்
சிக்கிக்கொண்டது வாடிக்கையாய்
வந்து பழகிய பட்டாம்பூச்சி

சுவற்றில் முத்தமிட்டு ஒரு வார்த்தை
காற்றாடி நுனியில் கால்வைத்து ஒரு வார்த்தை
கனிணித் திரைமேல் உரசி சில வரிகள்
அமர்ந்து ஆசுவாசப்படுத்தியதில் சில குறிகளென
மூடிய அறையின் இருள் காற்றில் மையெடுத்து
தீராத கவிதையை எழுதிக்கொண்டேயிருந்தது.

வார்த்தைகளால் கட்டமைத்த வரிகள் கொண்டு
மூடிய கதவின் உட்பக்கம் முட்டிமுட்டி மோதியதில்
எழுதிய கவிதையில் பாதி நசுங்கிப்போய்விழுந்தன

விடுமுறை கரைந்த ஒரு காலைப் பொழுதில்
கடைப்பையன் குப்பையெனக் கூட்டித்தள்ளினான்
பட்டாம்பூச்சியோடு சில கவிதைகளையும்

ஆனாலும் கவிதை வாசம் நுகர்ந்தவர்களுக்கு
அந்தக் கடைக்குள் அடித்துக்கொண்டிருந்தது
அடர்த்தியாய் ஒரு கவிதை வீச்சம்!

-0-


11 comments:

*இயற்கை ராஜி* said...

nice

r.v.saravanan said...

கவிதை வீச்சம்

nice kathir

ஓலை said...

Kavithai veecham is nice. Wow!

ராமலக்ஷ்மி said...

அருமை.

Unknown said...

நறுமணம்...

காமராஜ் said...

ஆஹ்ஹா அழகு கதிர்

Anonymous said...

கடைப்பையன் குப்பையெனக் கூட்டித்தள்ளினான்பட்டாம்பூச்சியோடு சில கவிதைகளையும்

varigal nenjodu....

ஷர்புதீன் said...

இந்த முறை வோட்டோடு ....

அகல்விளக்கு said...

அழகு...

பழமைபேசி said...

//கனிணித் //

கனியாக் கொட்டுதுங்ளா மாப்பு?

//ஆனாலும் கவிதை வாசம் நுகர்ந்தவர்களுக்கு
அந்தக் கடைக்குள் அடித்துக்கொண்டிருந்தது
அடர்த்தியாய் ஒரு கவிதை வீச்சம்!//

கடையில பட்டாம்பூச்சிப் பொணமுங்ளா? அவ்வ்வே.... இஃகிஃகி!!

vidivelli said...

நல்லாயிருக்குங்க

நம்ம பக்கமும் வந்திட்டு போங்களேன்.............