சிறகை விரிக்கும் சிறை


உயிர் பெறும் துப்பாக்கி
ஒரு போதும் அறிவதில்லை
உயிர் பறிக்கத்தான் என்பதை

-0-

பள்ளி மைதானங்கள்
பசியோடு தவிக்கின்றன
விடுமுறை நாட்களில்

-0-

மௌனம் சிறகு விரிக்கிறது
அடுத்தடுத்து சிறைப்படும்
வார்த்தைகளில்

-0-

நிகழ்காலக் குற்றங்கள்
விடுதலை அடைகின்றன
நாளைய பெருங்குற்றங்களில்

-0-

25 comments:

மங்குனி அமைச்சர் said...

நிகழ்காலக் குற்றங்கள்
விடுதலை அடைகின்றன
நாளைய பெருங்குற்றங்களில் ////

இதற்காகவே பெரும் குற்றங்கள் உருவாக்கப்படுகிறது சார்

'பரிவை' சே.குமார் said...

//பள்ளி மைதானங்கள்
பசியோடு தவிக்கின்றன
விடுமுறை நாட்களில்//

WOW... Super anna...

செல்வா said...

/உயிர் பெறும் துப்பாக்கி
ஒரு போதும் அறிவதில்லை
உயிர் பறிக்கத்தான் என்பதை
//

செம செம .!! நல்லா இருக்கு அண்ணா ..

செல்வா said...

//மௌனம் சிறகு விரிக்கிறது
அடுத்தடுத்து சிறைப்படும்
வார்த்தைகளில்
//

எல்லாமே கலக்கல் அண்ணா ..!

ராமலக்ஷ்மி said...

நான்கும் நன்று.

//பள்ளி மைதானங்கள்
பசியோடு தவிக்கின்றன
விடுமுறை நாட்களில்//

மிக அருமை.

ஹேமா said...

முதலாவது ஏனோ மனதில் படிகிறது !

arasan said...

நச்னு நாலு கவிதைகள் ....

நல்லா இருக்குங்க

vasu balaji said...

/மௌனம் சிறகு விரிக்கிறதுஅடுத்தடுத்து சிறைப்படும்வார்த்தைகளில்/

இது டாப்பு

Unknown said...

உங்க சிந்தனை சிறைபடுத்தாமல் சிறகு விரித்தாடுகிறது. நன்றாக இருக்கு கதிர்.

நிறைய கவிதை போட்டு எதுக்காவது ஒத்திகை நடக்குதுங்களா! எப்ப தமிழ்மணம் சிறப்பிக்கப் போகிறது இந்த சமூக ஆர்வலர?

மாதேவி said...

சிறகை விரிக்கும்.... பள்ளி மைதானம் அருமையாக இருக்கிறது.

க.பாலாசி said...

இதுதான் பட்டாசு கிளப்புறதுங்கறதோ!!!! மைதானம், மௌனம், குற்றங்கள் ம்ம்ம்.. கலக்கல்...

Unknown said...

மூன்றும், நான்கும் பிரமாதம் ...

Anonymous said...

நச்சுன்னு நாசுக்கா நான்கு கவிதைகள்..

காமராஜ் said...

Blogger சே.குமார் said...

//பள்ளி மைதானங்கள்
பசியோடு தவிக்கின்றன
விடுமுறை நாட்களில்//

WOW... Super anna...

YESS...KUMAAR

SIMPLY SUPER.

அகல்விளக்கு said...

அருமை அண்ணா...

hariharan said...

//நிகழ்காலக் குற்றங்கள்
விடுதலை அடைகின்றன
நாளைய பெருங்குற்றங்களில் //

உண்மை தான் முதல்நாளில் நடக்கின்ற ஊழலைவிட மறுநாள் பெரிதாக ஒன்று வந்து அதை மறைத்துவிடுகிறது. மக்களை மறக்கசெய்யும் உத்தியோ என்னவோ?

சத்ரியன் said...

//பள்ளி மைதானங்கள்
பசியோடு தவிக்கின்றன
விடுமுறை நாட்களில்//

அடடடா....!

அன்புடன் நான் said...

//பள்ளி மைதானங்கள்
பசியோடு தவிக்கின்றன
விடுமுறை நாட்களில்//

உரமான கவிதைகள்.

அன்புடன் நான் said...

அவ்வபோது வர இயலாமைக்கு வருந்துகிறேன்....

மிக எளிமையான சத்தான கவிதைகள் பராட்டுக்கள்.... கதிரண்ணா.

"உழவன்" "Uzhavan" said...

கடைசி கவிதை சூப்பர்.. பள்ளி மைதானமும் அருமை

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

நாலுமே நல்லா நச்சுன்னு இருக்கு - சூப்பர் போங்க .... நல்வாழ்த்துகள் கதிர் = நட்புடன் சீனா

நாடோடி இலக்கியன் said...

nallayirukku kathir.

kavitha said...

அருமை அழகு. கவிதையின் ஆழம் எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்காமல் கவிதைக்குள் போனால் மிகப் பெரும் பிரமாண்டம் இருக்கிறது

தீபா நாகராணி said...


நிகழ்காலக் குற்றங்கள்
விடுதலை அடைகின்றன
நாளைய பெருங்குற்றங்களில் // யம்மா... என்னம்மா எழுதுறீங்க... அட்டகாசமா இருக்கு!

Unknown said...

சும்மா நச்சுன்னு இருக்குல்ல ஒவ்வொன்றும்....