பகிர்தல் (18.12.2010)


தூவும் நன்றி விதைகள்:
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் வேண்டுகோளுக்கிணங்க நடத்தவுள்ள சங்கமம் 2010 நிகழ்ச்சி இலைச்சினையை முகப்பில் வெளியிட்டு, சுட்டி கொடுத்துள்ள தமிழ்மணம், தமிழ்வெளி, சங்கமம் திரட்டிகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டு, பங்களிப்போடு இணைந்து நடத்தவுள்ள சங்கமம் திரட்டிக்கு நன்றிகள்.

சங்கமம்-2010 நிகழ்ச்சி குறித்து, தங்கள் வலைப்பக்கத்தில் இடுகை எழுதி, இலச்சினையை வெளியிட்டுள்ள சேர்தளம் குழுமம், பதிவுலக நட்புகள், பழமைபேசி, ச.செந்தில்வேலன், சீனா, வானம்பாடி, ராமலஷ்மி, பிரபாகர், ஸ்ரீதர், கார்த்திகை பாண்டியன், சேட்டைக்காரன், காமராஜ், சே.குமார், செ.சரவணக்குமார், விஜி, முனைவர் ப.கந்தசாமி, முனைவர். குணசீலன், டி.வி.ஆர் ராதகிருஷ்ணன், தேனம்மை, ஷம்மிமுத்துவேல், தமிழ்மலர் (யார் பெயராவது விடுபட்டிருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்) மற்றும் குழுமத்தின் அனைத்து தூண்களுக்கும் நன்றி!


நினைவுக்கு வருகிறதா?
பொருளாதார வளர்ச்சி உண்ணும் உணவில் கூட ஆடம்பரத்தையும் அந்தஸ்த்தையும் திணிப்பதை தொடர்ந்து உணர முடிகிறது. விருந்துகளில் உணவு வகைகள் பரிமாறப்பட்ட உணவுகளை அதிகம் என்று வீணடிப்பதை விட, தானே எடுத்துப் போட்டு (Buffet) சாப்பிடும்போதும், விலையுயர்ந்த உணவங்களில் கேட்டு வாங்கி வீணடிக்கும் உணவுகளும்தான் மிக அதிகம்.

உணவு சாதாரண கடைகளில் வீணாவதைவிட, விலையுயர்ந்த நட்சத்திர உணவங்களில் வீணடிக்கும் உணவுகளே அதிகம். சமீபத்தில் நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ, விலையுயர்ந்த உணவகத்திற்குச் சென்று வீணடித்த உணவு எவ்வளவு என்று நினைவுக்கு வருகிறதா?

அதுவரைக்கும் உள்ளத்தை உலுக்கிப் போடும் இந்தக் குறும்படத்தைக் கொஞ்சம் பாருங்களேன்!




தமிழ்மணம் விருதுகள்:
தமிழ்மணம் அறித்துள்ள விருதுகளுக்கு…..
 
  • அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள் – பிரிவில் கோடியில் இருவர்  
  • பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்பிரிவில் ஒரு பயணமும், பெரிய பாடமும்
  • ஈழ மக்களின் வாழ்வியல், மனித உரிமை, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் – பிரிவில் வவுனியாவுக்குப் போயிருந்தேன் இடுகைகளைச் சமர்பித்துள்ளேன்.

பொறாமையிலும் பெருமை:
கொஞ்ச நாட்களாகவே நான் எழுதும் கவிதைகளுக்கு வரும் பின்னூட்டங்கள், வாக்குகளைவிட எதிர் கவிதைகள்தான் அதிகம் வருகின்றன. அதிலும் கொடுமை என்னவெனில், எதிர் கவிதைகள் எல்லாமே நேர்(!) கவிதைகளைவிட நன்றாக இருப்பதுதான். இதுக்குப் பொறாமைப்படுறதா இல்ல எதிர்கவிதைங்கிற பேர்ல நல்ல கவிஞர்களை உருவாக்கும் (!!!!நோ….நோ திட்டாதீங்க….) என்னை நினைத்து நானே பெருமைப் படுவதா (நோ….நோ…….நோ….. பேட் வேர்ட்ஸ், மீ பாவம்……) எனத் தெரியவில்லை!.

எரியும் விலைவாசியில் ஊற்றிய பெட்ரோல்:
இது வரை இல்லாத அளவாக ஒரே தடவையில் மூன்று ரூபாய் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்ட விடியலில்தான், மத்திய புலனாய்வுத்துறை வரலாற்றுச் சாதனையாக 34 இடங்களில் சோதனை போட்டு சாதனை படைத்துக் கொண்டிருந்தது. (இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ!). எது நடந்தாலும், பொத்திக் கொண்டு மௌனமாக கடந்து போகும் இந்திய மனோபாவம் பெரு முதலாளிகளுக்கும், இந்தியாவை குருதி, வியர்வை சிந்தி கட்டமைத்து(!) வரும் அரசியல்வாதிகளுக்கும் வெகு வசதியாகப் போய்விட்டது! (கொசுறு: எட்டிப்பிடிக்கிற தூரத்துல இருக்கிற இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நம்மூர் காசுல 45 ரூபாய்தான் என நினைக்கிறேன்)

-0-

27 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பகிர்தலிற்கு நன்றி.

உண்மை தான். நட்சத்திர மற்றும் அசைவ உணவகங்களில் தான் வீணாக்குப் போக்கு பரவலாகப் பார்க்க முடிகிறது.

சங்கமம் நிகழ்ச்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

காணொளி கலங்கடிக்கிறது :(

'பரிவை' சே.குமார் said...

காணொளி பகிர்தலிற்கு நன்றி.


சங்கமம் நிகழ்ச்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நிகழ்ச்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

Unknown said...

சங்கமம் சிறப்பாக நடக்க என் வாழ்த்துக்கள்..

அந்த குறும்படத்தை கண்களில் நீர் வழிய பார்த்திருக்கிறேன் ..

நீங்க கவிதை நன்றாகத்தான் எழுதுகிறீர்கள்..

பெட்ரோல் விலை மூன்று ரூபாய் என்ன? முப்பது ரூபாய் ஏற்றினாலும் பொருத்துகொள்ளும் அளவுக்கு சொரணை கேட்டுபோய்விட்டோம் நாம்....

தேவன் மாயம் said...

உணவை வீணடிப்பது மிகவும் கொடுமை!

தேவன் மாயம் said...

7/7 டன்!

r.v.saravanan said...

நிகழ்ச்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

Chitra said...

பொறாமையிலும் பெருமை ....நீங்க ரொம்ப நல்லவங்க! :-)

Indian said...

//இது வரை இல்லாத அளவாக ஒரே தடவையில் மூன்று ரூபாய் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்ட விடியலில்தான், மத்திய புலனாய்வுத்துறை வரலாற்றுச் சாதனையாக 34 இடங்களில் சோதனை போட்டு சாதனை படைத்துக் கொண்டிருந்தது. (இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ!). எது நடந்தாலும், பொத்திக் கொண்டு மௌனமாக கடந்து போகும் இந்திய மனோபாவம் பெரு முதலாளிகளுக்கும், இந்தியாவை குருதி, வியர்வை சிந்தி கட்டமைத்து(!) வரும் அரசியல்வாதிகளுக்கும் வெகு வசதியாகப் போய்விட்டது! (கொசுறு: எட்டிப்பிடிக்கிற தூரத்துல இருக்கிற இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நம்மூர் காசுல 45 ரூபாய்தான் என நினைக்கிறேன்)
//

With help of various internet sites...

Petroleum price break-up:

If the cost price (as paid by end-user) of petrol per litre is Rs 58.90, following is the break up of cost calculated by the government.

Basic Price: Rs 28.93
Excise duty: Rs 14.35
Education Tax: Rs 0.43
Dealer commission: Rs 1.05
VAT: Rs 5.5
Crude Oil Custom duty: Rs 1.1
Petrol Custom: Rs 1.54
Transportation Charge: Rs 6.00
Total price: Rs 58.90

Company Basic Price calculation

Let us consider the price of crude oil as US$107 (on September 22) per barell.

Cost of per barrel in INR = 107*45.40(1$=Rs45.40) = Rs 4858.

One barell consists of approximately 160 litres.

So, price of crude oil per litre will be 4858/160 = Rs. 30.36.

Now Indian Oil Company loses 1.44 Rs per litre + cost of transportation of crude oil and refining the price.

Indian said...

There are several variables that influence the end price.

Until recently, government protected the consumer by absorbing the fluctuations in variables through a static administered price mechanism.

Government is forced to pass the additional cost burden to consumer due to it's inability to absorb this burden anymore.

Variables that influence petrol price.

1. Crude price in international market - Major influencer.

Whenever crude price goes high (say a swing from $80 per barell to $130 per barell), Oil Marketing Companies (OMCs like HP, BP, IOL) cannot get enough INR to buy US$ to purchase crude in international market. So, it asks for reserve bank to release dollar. Reserve bank asks union government. Union government issues 10 year or 20 year bonds, and ask reserve bank to release dollar. Which means today's loan is postponed to a future date. Do you see how a present day government pass the buck to a future government. This adds to the fiscal deficit of India. Since there is a fiscal discipline law enacted sometime back (that fiscal deficit should always be < 4 or 5% of GDP), this lever is somewhat restricted. Hence the need to pass any fluctuation in internal crude price directly to consumer.

2. USD exchange rate. - minor influencer. Not been a varying wildly of late. When there is a big swing, it would wildly influence final petrol price.

Why it may fluctuate in Indian context?

Unlike China, most of our forex inflow is into our capital markets. In case of a need like 2008 recession, investors can pullout their money quickly. Thus it creates higher demand for $ which in turn hurt the OMC.

3. Central/state govt. tax structure - long-term influencer.

Look at the tax structure. It is almost 100-120% of the actual petrol price. If they slash it to 20-30% of actual petrol price, it might bring big relief to consumers. But then, where will the government get the fund to plug the gap?

a. It can either impose more income-tax on lower base (as followed in 60-70s socialistic setup with 80-90% paid as income tax) or increase the taxpayer base and reduce tax-rate(as followed currently). Remember < 5% of the country's population pay income-tax currently. Let us not think of bringing the 30% BPL population. But how about raising this tax base to 30% to 40% of total population.



On top of that, effective collection of taxes from the taxpayer base. How much of tax evasion happens at personal and corporate level?

How many self-employed professionals (for e.g. doctors, lawyers, actors, engineers) declared their true income until recently when they were forced to get PAN card and were made to mandatorily file IT returns?

b. Indirect taxes.

Until recently, ever bothered of paying sales tax or service tax when you brought something like a TV/Fridge/Toor-dhal/Match-box? Or paid service tax in a restaurant?

Did you ever pay the correct stamp duty while buying land?

Did you ever declared the gold coins and biscuits and paid customs duty while you entered this country?

Does all the business correctly invoice their imported goods and pay customs tax?

c. Investing in revenue generating enterprises.

Govt should consistently invest part of the income (like 5%) every year in profitable enterprises besides spending in planned expenditures. A wise investment that generates income through dividends quarter after quarter.

Singapore govt has investment vehicle called TEMASEC. Once I believe it was the largest investor in Infy. And Infy declared dividend quarter after quarter for last 15 years.

In nutshell, we are all (I mean everyone! except for exceptionally honest ones) culprits who want to collectively cheat our government in every opportunity available to us. Also not worried/cared about our elected representatives(or their quality) and how they are running the government. And yet we want the government to somehow take care of all of our problems. Isn't it too much to ask?

Indian said...
This comment has been removed by the author.
Indian said...
This comment has been removed by the author.
Indian said...
This comment has been removed by the author.
Indian said...
This comment has been removed by the author.
செ.சரவணக்குமார் said...

பகிர்தலுக்கு நன்றி கதிர் அண்ணா. சங்கமம் 2010 வெற்றிக்கு வாழ்த்துகள்.

Kathir said...

//Now Indian Oil Company loses 1.44 Rs per litre + cost of transportation of crude oil and refining the price.//

The equation is not so simple.

Please see the link.

http://wiki.answers.com/Q/What_products_do_you_get_out_of_a_barrel_of_crude_oil

Indian said...

I don't disagree with you.

a said...

உணவு விரயம்............... கண்டிப்பாக நாம் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டிய விசயம்.,.......

சத்ரியன் said...

கதிர்,

“அந்த” குரும்படம்.


இதுக்கெல்லாம் எது காரணம் கதிர்?

சத்ரியன் said...

பொறாமையிலும் பெருமைய என்னன்னு சொல்லட்டும்...!

அன்புடன் அருணா said...

painful video.

vasu balaji said...

ங்கொய்யால ஆயீஈஈலு கம்பேனி எத்தனை இசை விழா ஸ்பான்ஸார் பண்றான். எத்தனை லஞ்சும் டின்னரும் ஸ்பான்ஸார் பண்றான். இதெல்லாம் எந்த ஆடிட்ல எப்படி போகுது. எவன் ஊட்டு காசு இது?பேரல் விலைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

மாதேவி said...

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவாழ்த்துகள்.

காணொளி கண்ணில் நீரை வரவைக்கிறது.

Butter_cutter said...

வாழ்த்துக்கள் .விழா இனிதே நடை பெற வாழ்த்துக்கள்

☀நான் ஆதவன்☀ said...

பெட்ரோல் கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு வாரிக்கொடுக்கும் சம்பளமும் சலுகைகளையும் குறைத்தாலே இந்தியன் ஆயிலுக்கு நஷ்டம் வராது. :(

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

கதிர்,
படம் கலங்கடிக்கிறது.

நான் சிக்கன் எடுத்தால் எலும்பு கூட விட்டுவைப்பதில்லை அது எந்த இடமாகிலும்.