எ.கொ.சா.இ -1

வெளிநாடுகளில் நிலம் வாங்கி பருப்பு பயிரிட பவார் யோசனை

ங்கொய்யாலே, இங்கே இருக்கிறதையெல்லாம் பிளாட் பொட்டு வித்தா வேற என்ன பண்ணமுடியும்

____________________________________________________

முதல்வரைப் பின் பற்றி சொத்து கணக்கை வெளியிடுவார்களா அமைச்சர்கள்...! 

அந்தக் காமடியை படிச்சு வரும் வயித்து வலிக்கு ”கலைஞர் வயித்து வலி மாத்திரை” கொடுப்பாங்களா?

____________________________________________________
 
தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல் : முதல்வர் எச்சரிக்கை

தலைவருக்கு எப்பவுமே குடும்பமும் கட்சியும் ஒன்னுதான்னு திரும்ப திரும்ப சொல்றாரு பாருங்க 

____________________________________________________
 

தனியாக ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் செய்திருக்க முடியாது: முதல்வர் பேச்சு

தலைவரோட நேர்மையைப் பாராட்டி ஒரு விழா யாராவது விழா எடுப்பாங்களா!

____________________________________________________

டெல்லியில் ரம் விற்பனையில் பெரும் மந்தம்

இதுக்கும் 17வது நாளா நடக்காத பாரளுமன்றத்துக்கும் எதும் தொடர்புண்டா!

____________________________________________________

நான் வாய் திறந்தால் முலாயம் சிறையில் இருப்பார்-அமர் சிங்

பாத்துக்குங்கப்பா! வாய் திறக்காம இருக்க விலை பேசுறாராம்.

____________________________________________________

பிரிட்டன், புலிகளின் முன்னால் மண்டியிட்டாலும், மஹிந்த அடிபணிய மாட்டார்: மேர்வின் சில்வா

அடிக்கடி நம்மூருக்கு வந்து போயி, இவனுங்களும், நம்மூரு அரசியல்வாதி மாதிரியே உதார் பார்ட்டிகளாயிட்டானுங்கப்பா!

____________________________________________________

ஊழல் தடுப்பு ஆனையராக தாமஸ் ஏன் நீடிக்கவேண்டும்?-சுப்ரீம் கோர்ட்

பதவி கொடுத்த பெருசுங்க, இன்னும் நெறைய ஊழல் பண்ணனும்ல!

____________________________________________________

"வி வான்ட் ஜே.பி.சி..." எதிர்கட்சிகள் 17வது நாளாக கோசம்

அட, சோனியா, ராகுல், மன்மோகன்னு இவிங்க பேரக் குறிக்கிற மாதிரி  எஸ் / ஆர் / எம்னு எதாவது கேட்டாக்கீது குடுப்பாங்களோ?

____________________________________________________

சென்னை:மழையிலும் சூடான டிக்கெட் (கிரிக்கெட்) விற்பனை

சூடான டிக்கெட் என்ன, மசாலா, மிளாகாய்த்தூள் போட்டு வறுத்துக்கூட வாங்கலாம். ஆமா, ரமணன் சார் மேட்ச் அன்னிக்கு மழை பெய்யுமா?

____________________________________________________

எதிர்க்கட்சிகளுக்கு பிரணாப் மீண்டும் வேண்டுகோள்

இப்படியே இன்னும் கொஞ்ச நாளைக்கு மெய்ண்டெய்ன் பண்ணினா, நேரா பட்ஜெட் செசனுக்கு போய்டுலாம்னு வேண்டுகோள் விடுத்திருப்பாரோ!!

____________________________________________________

தமிழகம் முழுவதும் ஆன்லைனில் மின் கட்டண வசதி

அய்யா, காசு மட்டும் எல்லா லைன்லையும் வாங்குங்க, கரண்ட மட்டும் ரெண்டு மணி நேரத்துக்கு எந்த லைன்லயும் குடுத்துறாதிங்க

____________________________________________________


'2ஜி' நாடாளுமன்ற முடக்கம்: வீணானது ரூ.95 கோடி!

அட, விடுங்க பாஸ், எவ்வளவோ போச்சு, இதென்ன பிஸ்கோத்து!

____________________________________________________

இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் : கிருஷ்ணா கடிதம்

இவருக்கும் கடிதப் பழக்கம் தொத்திக்கிச்சா. கிர்ர்ர்ர்ச்ச்ச்சனா சார் நீங்க ஆணிய்ய்ய்ய புடுங்க வேணாம். 
____________________________________________________

கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா

அப்பப்ப கடை நல்லபடியா ஓடுதான்னு இன்ஸ்பெக்ட் பண்ண வருவாங்களோ! 
_____________________________________________________


2ஜி விவகாரத்தில் ஜே.பி.சி. தேவையில்லை: கபில் சிபல்

3ஜி, 4ஜி, 5ஜி எதுக்கும் வம்பு வரக்கூடாதுன்னு அட்வான்ஸ் புக்கிங் போல

______________________________________________________

25 comments:

ஈரோடு கதிர் said...

என்னைப் பார்த்து காப்பியடிச்சு நறுக்குனு நாலு வார்த்தை எழுதும் வானம்பாடியை என்ன செய்யலாம்! :)))

போனப்போகுதுன்னு ஒரு நன்றி சொல்லிருவமா!!!!? அண்ணே நன்றின்னே!

cheena (சீனா) said...

aakaa aaakka - நல்லாவே இருக்கு - நச்சுன்னு கமெண்ட்ஸ்

இளங்கோ said...

//'2ஜி' நாடாளுமன்ற முடக்கம்: வீணானது ரூ.95 கோடி!

அட, விடுங்க பாஸ், எவ்வளவோ போச்சு, இதென்ன பிஸ்கோத்து!//
:)

a said...

//
என்னைப் பார்த்து காப்பியடிச்சு நறுக்குனு நாலு வார்த்தை எழுதும் வானம்பாடியை என்ன செய்யலாம்! :)))
//
ஐயயோ......... நான் இந்த விளாட்டுக்கு வல்லப்பா........

Chitra said...

எல்லாமே சரவெடி!

Ahamed irshad said...

அருமைண்ணே..

வான‌ம்பாடிக‌ள் உங்க‌ வ‌ம்புக்கு வெயிட்டிங்........

shammi's blog said...

இப்படி எல்லாம் எழுதினா மட்டும் இந்த அரசியல் வாதிங்க திருந்திட போறாங்களா ? எங்க ஊர்க்கு துணை முதல்வர் வர்றாராம் ரோடு எல்லாம் கூட கூட்டறாங்க , முதல் முறையா....

அகல்விளக்கு said...

ahaa...

Naan kooda area maari vanthudomaannu ninaichen....

Super...

சத்ரியன் said...

//என்னைப் பார்த்து காப்பியடிச்சு நறுக்குனு நாலு வார்த்தை எழுதும் வானம்பாடியை என்ன செய்யலாம்! :)))

போனப்போகுதுன்னு ஒரு நன்றி சொல்லிருவமா!!!!? அண்ணே நன்றின்னே!...//

பாலா அண்ணே,

இது எதிர்க்கட்சிகளோட திட்டமிட்ட சதி.

இந்த அறிக்கைக்கும், கதிருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

பவள சங்கரி said...

ஓ....அவுகளா.......நீங்க.....இருக்கட்டும்.....இருகட்டும்....வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

நச்சுன்னு கமெண்ட்ஸ்

ராமலக்ஷ்மி said...

நைஸ் நறுக்ஸ்:))!

Thenammai Lakshmanan said...

எதிர்க்கட்சிகளுக்கு பிரணாப் மீண்டும் வேண்டுகோள்


இப்படியே இன்னும் கொஞ்ச நாளைக்கு மெய்ண்டெய்ன் பண்ணினா, நேரா பட்ஜெட் செசனுக்கு போய்டுலாம்னு வேண்டுகோள் விடுத்திருப்பாரோ!!//

:-))

அதென்ன வானம்பாடி சாரை இழுக்குறீங்க.. அந்த கிண்டலுக்கு முன்னாடி இதெல்லாம் ஒறை போடக் காணாது.. ஹாஹாஹ

T.V.ராதாகிருஷ்ணன் said...

superb

பழமைபேசி said...

நச்! அருமை!!


(எத்தினி பேர்யா கிளம்பி இருங்கீங்கன்னு கேக்கப்படாது பாருங்க!!)

hariharan said...

//முதல்வரைப் பின் பற்றி சொத்து கணக்கை வெளியிடுவார்களா அமைச்சர்கள்...!
அந்தக் காமடியை படிச்சு வரும் வயித்து வலிக்கு ”கலைஞர் வயித்து வலி மாத்திரை” கொடுப்பாங்களா?//

இன்னும் உடன்பிறப்புகளுக்கு சிரிப்பு வரலயா? மன்சுக்குள் சிரிக்கிறார்களோ?

vasu balaji said...

/ஈரோடு கதிர் said...

என்னைப் பார்த்து காப்பியடிச்சு நறுக்குனு நாலு வார்த்தை எழுதும் வானம்பாடியை என்ன செய்யலாம்! :)))/

அவ்வ்வ்வ். மன்னிச்சி விட்றுங்கண்ணா. :))

/வெளிநாடுகளில் நிலம் வாங்கி பருப்பு பயிரிட பவார் யோசனை/

உள்ளூர்ல ஊழல் செஞ்சா பருப்பு வேகாதுன்னு பயமோ?

/தனியாக ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் செய்திருக்க முடியாது: முதல்வர் பேச்சு/

அடங்கொன்னியா! அப்ப கூட்டுக் களவாணியா இது.

/டெல்லியில் ரம் விற்பனையில் பெரும் மந்தம்/

மனுசன் எத்தினி ஊழல்தான் தாங்குறது. துக்கம் தாளாம மூக்குமுட்ட குடிச்சி மந்தமாயிருப்பாய்ங்க

/ஊழல் தடுப்பு ஆனையராக தாமஸ் ஏன் நீடிக்கவேண்டும்?-சுப்ரீம் கோர்ட் /

ஒரு வேளை திருடன் கையில பொட்டிச் சாவியைக் கொடுங்கற சொல்வடைய ப்ரூவ் பண்றதுக்கோ?

/பிரிட்டன், புலிகளின் முன்னால் மண்டியிட்டாலும், மஹிந்த அடிபணிய மாட்டார்: மேர்வின் சில்வா/

இப்புடியே ஏத்திவிட்டு கைப்புள்ளையாக்கிடுவானுவோ.

vasu balaji said...

//"வி வான்ட் ஜே.பி.சி..." எதிர்கட்சிகள் 17வது நாளாக கோசம்//

ஓஹ். ஜே.பி.சி.ன்னா ஜாயிண்ட் ப்ராஃபிட் கமிஷனாயிருக்குமோ.

/சென்னை:மழையிலும் சூடான டிக்கெட் (கிரிக்கெட்) விற்பனை/

நனைஞ்சு போச்சுன்னு இஸ்திரி பண்ணி வித்தானுவளா?

/தமிழகம் முழுவதும் ஆன்லைனில் மின் கட்டண வசதி/

அந்நேரம் கரண்ட் போவாதுன்னு கேரண்டியிருக்கா.

/இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் : கிருஷ்ணா கடிதம்/

பண்ண உதவிலதான் பாதிக்குமேல மறுபிறவி எடுத்திருப்பாங்களே, இன்னும் உதவியாடா கிஷ்டா?

/கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா/

தலைவருக்கு கொடச்சல் குடுக்கவா.

நன்றிண்ணா. எப்புடீ

Unknown said...

நச் நச்னு இருக்கு.

எ.கொ.சா.இ - ??????

தாராபுரத்தான் said...

பாட்டு எதிர் பாட்டு எல்லாமே..பிரமாதம்ஙஙங்க.

vasan said...

வானம்பாடி, க‌திர் ப‌திவு ப‌ரிமாற‌ல்,புரித‌ல், உள்குத்து, எங்க‌ளுக்கு ரெம்ப‌ புடிச்சுருக்கு.

ரோஸ்விக் said...

உங்களோட கமெண்டு மிளகாய் பச்சின்னா... அவரோட பதில்கள் மிளகாய்பொடி போட்ட மிளகா பஜ்ஜியாவுல இருக்கு...

Thamira said...

:-)))))))

கொங்கு நாடோடி said...

கதிர் கலக்கிபுட்டிங்க போங்க!

Unknown said...

ஹா....ஹா...தூள்.அது என்ன எ.கொ.சா.இ-1?லொள்ளு தாங்கல.