சில நேரங்களில் பெருத்த ஏமாற்றத்தைத் தருவது எதிர்பார்த்த நபர்களை சந்திக்க முடியாமல் போவது, அதேபோல் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் விதவிதமாய்த் தருவது எதிர்பாராத நபர்களை பொருந்தாத தருணங்களில் சந்திப்பது.
நம்மைச் சுற்றி மனிதர்களாக குவிந்து கிடக்கும் தேசத்தில், நம்மை எத்தனை பேருக்குத் தெரியும், நமக்கு எத்தனை பேரை நேரிடையாக அடையாளம் தெரியும்?/ எங்கும் மனிதர்களாகத்தானே வியாபித்துக் கிடக்கின்றனர். ஆனாலும் அதில் எத்தனை சதவிகிதம் நமக்கு அவர்களையும், அவர்களுக்கு நம்மையும் பரிச்சயம் இருக்கின்றது. நம் வீட்டின் அருகில் இருப்பவர்கள், வீதியின் முதல் திருப்பம் திரும்பும் வரையில் இருக்கும் வீடுகளில் அதிகப் படியாக வீதியில் புழங்கும் நபர்கள் மட்டுமே. அதைத் தாண்டி பெரிய வீதிக்கோ, முக்கிய சாலைக்கோ வரும் போது, அதில் இருப்பவர்களில் பெரும்பாலும் நாம் முன்பின் அறியாத நபர்களாக இருக்கின்றனர்.
தொடர்ந்து மனிதர்களைச் சந்திப்பது, மனிதர்களே இல்லாத நிசப்த தனிமை இதில் எது சுகம்? தெரிந்தவர்களைச் சந்திப்பதைக் காட்டிலும், காணும் இடம்தோறும் பல மடங்கு தெரியாத நபர்களையே புதிதாக சந்தித்துக் கொண்டேயிருக்கின்றோம். முன்பின் பார்த்திராத ஒரு மனிதரை புதிதாய் பார்க்கும் சுவாரசியத்திற்கு இணை ஏது?
நீண்ட காலமாய் நேரம் வாய்க்கும் போதெல்லாம் அலுவலக வாசலில் நின்று வேகமாய் இயங்கும் சாலையில் பார்வையை ஏதோவொரு சுவாரசியம் தேடி மிதக்க விட்டுப்பார்ப்பதுண்டு. காலை நேரத்தில் கடக்கும் பல ஆயிரம்பேரில் ஓரிரண்டு பேர் மட்டும் ஏற்கனவே அறிந்த முகங்களாய்த் தோன்றும், அது தவிர்த்த நேரங்களில் புதிய புதிய முகங்கள் கண்களுக்குள் கலந்து.... கலைந்து போகின்றன. அதில் ஒரு முகம் போல் இன்னொரு முகம் இருப்பதில்லை என்பது சுவாரசியமான ஆச்சரியம், அதிகபட்சம் முக்கால் சதுர அடிக்குள் அடங்கிப் போகும் முகத்திற்குள் எத்தனையெத்தனை வகைகள், வடிவங்கள்.
நெட்டையோ குட்டையோ, பருமனோ ஒல்லியோ, சிவப்போ கருப்போ பார்க்கும் விநாடியே கண்கள் அந்த நபரிடம் இருக்கும் குறிப்பிட்ட சிலவற்றை திருடி மூளைக்கு கடத்தி, அதனடிப்படையில் மனதிற்குள் ”இவர் இப்படிப் பட்டவராக இருக்கலாம்” என வேகவேகமாய் ஒரு ஓவியம் படியும். சில நேரம் மிகத் தெளிவாக, சில சமயம் கலங்கலாக.
முடி, காது, மூக்கு, கண்ணாடி, நரை, கன்னக் கதுப்பு, கழுத்து, பருத்த-வதங்கிய வயிறு, கைக்கடிகாரம், செல்போன், உடையணிந்த விதம், வெட்டப்பட்ட(படாத) நகம், காலுக்கு பொருந்தாத செருப்பு என எதையாவது மனதிற்குள் பதித்து அதையொட்டி ஒரு கணக்கு உள்ளுக்குள் மிக மிக வேகமாக எழுதப்பட்டு, பெரும்பாலும் பதிவு செய்யப்படாமலே அழிந்து போகும். ஆனாலும், அந்தக் கண நேர சுவாரசியம் ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருக்கும்.
மனிதர்களே இல்லாத நாட்களும், வீதிகளும், சாலைகளும், பயணங்களும் சிறிது நேரம் மனதிற்குள் அமைதியை பரவச் செய்யலாம். ஆனால் அந்த அமைதி கெட்டிப்படும் நேரத்தில், அமைதி அளித்த சுகம் நீர்த்துப்போய், மனிதர்களைச் சந்திக்காத தனிமை ஒருவித வெற்றிடத்தை மனதிற்குள் கருவாக்கும். அந்த வெற்றிடம் கனமாக உருவெடுக்கும், அந்தக் கனமான தனிமை ஏதோ ஒரு இனம் புரியா பயத்தை மனதிற்குள் தோற்றுவிக்கும்.
எதன் பொருட்டேனும் அவ்வப்போது துளிர்க்கும் சுவாரசியமே மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறது.
-0-
31 comments:
//எதன் பொருட்டேனும் அவ்வப்போது துளிர்க்கும் சுவாரசியமே மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறது. //
எபபடிங்கன்னா இதல்லாம் வருது :). கரக்டா சொல்லிருக்கீங்க.
//தொடர்ந்து மனிதர்களைச் சந்திப்பது, மனிதர்களே இல்லாத நிசப்த தனிமை இதில் எது சுகம்? //
இது சந்தர்பத்த பொருத்துங்கனா
சில நேரங்களில் பெருத்த ஏமாற்றத்தைத் தருவது எதிர்பார்த்த நபர்களை சந்திக்க முடியாமல் போவது, அதே போல் மிகப் பெரிய ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் விதவிதமாய்த் தருவது எதிர்பாராத நபர்களை பொருந்தாத தருணங்களில் சந்திப்பது.
...... ஒவ்வொன்றையும் ஆழமாக யோசித்து, சுவாரசியமாக தொகுத்து தந்து இருக்கீங்க. casual ஆ எடுத்துக் கொள்ளப்படும் சின்ன சின்ன விஷயங்கள் தானே, வாழ்க்கையில் சுவாரசியத்தை கூட்டுது. உண்மை.
வாஸ்தவம்... விஷயம் நல்லாருக்கு... தலைப்பு ரொம்ப நல்லாருக்கு...
//நம்மைச் சுற்றி மனிதர்களாக குவிந்து கிடக்கும் தேசத்தில், நம்மை எத்தனை பேருக்குத் தெரியும், நமக்கு எத்தனை பேரை நேரிடையாக அடையாளம் தெரியும்.//
இதைப்பற்றி நானும் ஒருமுறை சிந்தித்தேன் அண்ணே...எனக்கு தெரிந்தவர்களின் பெயர்கள் எழுதி அம்மா அப்பா உட்பட அனைவரின் முகங்கள் எனக்கு நியாபகம் இருக்கா என்று பார்த்ததில் பாதிபேரின் முகம் நினைவுக்கே வரவில்லை...அழகான சிந்தனை அண்ணே...வாழ்த்துகள்...
Ethir idugai please!!!
//பழமைபேசி said...
Ethir idugai please!!!//
பாலா அண்ணே போடுவாரு ?
கதிர்......
தெளிந்த சிந்தனை, தேர்ந்த எழுத்துக்கள்........
வாழ்த்துக்கள்
எதிர் இடுகை போட்டாச்சு... நீங்க பாக்கலையா...
http://paamaranpakkangal.blogspot.com/2010/07/blog-post_23.html
என்மனதுக்குள்ளம் அடிக்கடி எழுந்த உணர்வுப்பதிவுகளின் நீட்சியான பதிவு
அருமை. தொடருங்கள்
மனிதர்களே இல்லாத நாட்களும், வீதிகளும், சாலைகளும், பயணங்களும் சிறிது நேரம் மனதிற்குள் அமைதியை பரவச் செய்யலாம், அந்த அமைதி கெட்டிப்படும் நேரத்தில், அமைதி அளித்த சுகம் நீர்த்துப்போய், மனிதர்களைச் சந்திக்காத தனிமை ஒரு வித வெற்றிடத்தை மனதிற்குள் கருவாக்கும், அந்த வெற்றிடம் கனமாக உருவெடுக்கும், அந்தக் கனமான தனிமை ஏதோ ஒரு இனம் புரியா பயத்தை மனதிற்குள் தோற்றுவிக்கும்.
உண்மை..
Present Kathir
எதார்த்தங்களின் உணர்வுகளை அற்புதமான மொழிநடையுடன் தந்திருக்கிறீர்கள்...
Good Feelings..
ஒரு மழையில் நனைந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது இந்த கட்டுரை கதிர். இன்னும் சொல்லப் போனல் உங்களின் கவிதைகளை விட இது போன்ற கட்டுரைகளுக்கு நன் பரம விசிறி. உங்கள் புது பதிவு என்றால் ஓடோடி வந்து பார்ப்பேன் காதலோடு என்னை கட்டிப் போடும் உங்களின் வார்தைகளுகாக...
இப்போ கொஞ்சம் ஒரு இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் ஒரு வெளிப்பாடு அதாவது கட்டுரை இது சரியா கதிர்? ப்ளீஸ் இடை இடையே நிறைய கட்டுரைகள் எழுதுங்கள் கதிர் ....இது எனது அன்பான வேண்டுகோள்.
மனம் தனித்திருக்கும் போது வேடிக்கைப் பார்த்து அந்த அலாதியை வார்த்தைகளுக்குள் கொண்டு வந்து இருக்கிறார்கள். நீங்கல் உணர்ந்த சுகத்தை நானும் உணர்ந்திருகிறேன். உங்கள் இன் வார்த்தை பிரவோயகத்துக்குள் நுழைந்து வெளிவரும் போது ஒரு குளிரான மேகத்துக்குள் நுழைந்து வெளியே வந்தது மாதிரி இருக்கு.....
ப்ளிஸ் கதிர்.... இடை இடையே உங்களின் கட்டுரைகள் எழுதுங்கள்.... ( ஒரு இரவு நேர நகரத்தை 11 மணிக்கு கடை பூட்டும் நேரத்தில் சொல்லி இருந்தீங்களே...இது எல்லாம் சுகமா மனசு ஓரத்துல மிதந்து கிட்டே இருக்கு இன்னும்)
காத்திருப்பகளுடன்............
ஊன்றி அனுபவித்து வாசிக்கச் செய்தது. ஒவ்வொரு இடுகையும் இன்னும் உயரத்துக்கு கொண்டுபோகிறது. வாழ்த்துக்கள் கதிர்
முகம் படிப்பதென்பது அநேகமாக அனைவரும் தனிச்சையாய் செய்யும் ஒன்று. அதன் தாக்கத்தை பின்மன ஓட்டத்தின் வெளிப்பாட்டை பிரசவித்தது சுவாரசியம் மட்டுமல்ல. படித்தவர்கள் இனிவரும் நாட்களில் முகம் பார்க்கையில் உங்கள் இடுகையும் பிம்பமாக தோன்றும். நல்ல இடுகை.
இதன் தாக்கம் உணர்ந்துதான் கைதிகளுக்கு தனிமைச்சிறை கொடுப்பார்கள் போலிருக்கிறது. ஹென்றி கேரியரின் ‘பாபிலான்’ படிக்கும்போது தெரியும். வேறுமுகம் பார்க்காமல் பைத்தியம் பிடித்துவிடும். சூப்பர்ப்:)
சமூகத்தின் மீதான அக்கறையும், மனிதத்தில் இருக்கும் ஈடுபாடும் சொல்லும் சுவாரஸ்யமாகவே கொள்ளலாம் இதை. அருமை கதிர்.
அந்தக் கண நேர சுவாரசியம் ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருக்கும்.
Your post is also different one
nice !!!
டைட்டில் அட்டகாசம்!
நல்ல இடுகை
தலைப்பு நல்லாருக்கு
பூங்கொத்து!தலைப்புக்குத் தனியாக ஒரு பூ!
தலைப்பு அருமை
எல்லோரும் உணரும் விடயம்தான் அதை அழகாக தொகுத்து எழுதுவது எல்லோராலும் இயலாது
தொடருங்கள்
நிறைய நீங்களும் சிந்திச்சு வாசிக்கிறவங்களையும் சிந்திக்க வைக்கிற பதிவு.
தலைப்பு ரொம்ப நல்லாருக்கு.
இத பாரப்பா! வானம்பாடியார் இங்கு எவ்வளவு அழகா வெளிபடித்துயிருக்கார்! அவரோட இடத்தில நையாண்டி அறுவடை பண்ணியிருக்கார். இதுக்கு கூட ஒரு ப்ரோடோகோல் வச்சிருக்காரு.
உங்க friendship உக்கு ஒரு வணக்கமுங்க.
குப்பண்ணா பக்கத்தில சைக்கிள் வச்சு தடுமாறிகிட்டு இருந்த பதிவு வரும்னு எதிர்பார்த்தேன்!
விஷயம் நல்லாருக்கு...
அஙகே படித்து போட்டு இஙகே வருகிறேன்..நோகாம நோம்பி கூப்பிடறாரு..
.பிம்பங்கள் பிரசவிக்கும் சுவாரசியம் _ மிக அருமையான தலைப்பு. ஆழ்ந்த சிந்தனை. ஆன்மாவையும் பார்க்க முடிந்தால் எப்படியிருக்கும்? அந்த பிம்பங்களின் உண்மையான முகம் தெரிந்து விடும் தானே ! ஆம் அப்படி முடியுமானால் எந்த முகமும் காணச்சகிக்காததாகிவிடுமோ?
யோசிக்க வைத்து விட்டீர்கள்..
பதிவும் எழுத்தும் சுவாரசியம் கதிர்.
அருமை.
Post a Comment