யூஸ் அன்ட் த்ரோ


ஒரு காலத்தில் நாம் பயன்படுத்திய, மை நிரப்பி எழுதும் பேனாக்களை நினைவிருக்கிறதா? இப்போதும் யாராவது மைப் பேனாவை உபயோகப்படுத்துவதுண்டா? அப்படியிருந்தாலும் மிகமிகச் சொற்பமாகவே இருக்கும்.

மைப் பேனாவை பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் இருந்த கவனம், தற்போது பயன்படுத்தும் பேனாக்களிடம் இருக்கிறதா?. அந்தப் பேனாக்களை பாதுகாக்கவேண்டும் என்று இருந்த உணர்வு இப்போது உபயோகப்படுத்தும் பேனாக்களிடம் ஏன் இல்லாமல் போய்விட்டது. எதன் பொருட்டு, அதற்கான பொறுமையும் அவசியமும் இல்லாமல் போனது.

சமீப காலங்களில் எதை அதிகம் தொலைத்தீர்கள் என்று கேட்டால் அதிகப் படியான பதில் பேனா என்று வரலாம், அதுவும் குறைந்த காலத்தில். (ஹி..ஹி.. எங்கள மாதிரி யூத்துங்க முடி என்று கூடச் சொல்வோம்)

கால ஓட்டத்தின் வளர்ச்சியில், காலம்காலமாய் பயன்படுத்தி, இன்று அற்றுப்போனதில் மை பேனாவும் ஒன்று. காரணம் மிகக் குறைந்த விலைக்கு விதவிதமாய் வந்த பேனாக்கள் மை பேனாக்களை ஒட்டு மொத்தமாக கபளீகரம் செய்துவிட்டது. மிக எளிதாக அந்நியப்படுத்தப்பட்டு விட்டது.

மை வார்த்து எழுதும் பேனா மட்டும் அந்நியப்பட்டு போகவில்லை, பேனாவை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் செத்துப் போனது. போனால் போகட்டும் புதிதாய் வாங்கிக் கொள்ளலாம் என்ற மனோநிலையை யூஸ் அண்ட் த்ரோ பாலிசி மிக அழுத்தமாக நம்முள் புகுத்திவிட்டது. வியாபாரத்திற்கான மிக அற்புதக்(!!!) கண்டுபிடிப்பு, அதே சமயம் வாழ்க்கைத் தத்துவத்திற்கான மிகக் கொடிய விஷமே இந்த பயன்படுத்து, முடிந்தவுடன் தூக்கியெறி எனும் யூஸ் அன்ட் த்ரோ.

அடடா, எத்தனையெத்தனை பொருட்கள் நம்மோடு கலந்து கிடக்கிறது, மிக அழகாய், மிக எளிதாய், மிக சல்லிசாய். நம்மோடு கலந்திருந்து என்ன பயன் நம் நேசிப்பு அற்றுத் தானே நம்மோடு அந்தப் பொருட்கள் இருக்கின்றன.

இன்று நம் குழந்தைகள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பாதுகாப்பாய் வைத்து பராமரித்துக் காக்கவேண்டும் என்பது போல் எத்தனை பொருட்களை அடையாளம் காட்ட முடிகிறது. தண்ணீர்க் குடுவை, விருந்துகளில் சாப்பிடும் தட்டு, எங்கும் பருகும் குளிர்பான குடுவைகள், வாங்கிவரும் பொருட்களின் பெட்டிகள், எழுதும் பேனாக்கள், சூடும் அலங்காரப் பொருட்கள், இன்னபிற என, எல்லாமே அழகாய், கவர்ச்சியாய் இருக்கிறது. கிடைத்ததை பயன்படுத்து, பயன் முடிந்த பின் எளிதாய் தூக்கியெறிந்துவிட்டு விட்டு புதிதாய்க் கைக்கொள், இதைத்தானே நடைமுறைப் படுத்திவருகிறோம். ஒன்றை தற்காத்து பாதுகாத்து பராமரித்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கவும், அந்தப் பொருளை நேசிக்க வைக்கும் ஒன்றையும் நம் குழந்தைகளிடம் கடத்த முடியவில்லையே. குழந்தைகளிடம் கடத்தும் முன் நம்மிடமே அற்றுப் போய்விட்டதை அறிவோமா?

பெரும்பாலான சாலைகளின் திருப்பங்களைக் கவனித்துப் பாருங்கள், குப்பைகள் குவிந்ந்ந்ந்ந்ந்து கிடக்கின்றன. அதில் கிடப்படவை பெரும்பாலும் யூஸ் அன்ட் த்ரோ வகைகளே. வீடுகளிலும் சரி, அலுவலங்களிலும் சரி நம் குப்பைத் தொட்டிகள் வழக்கத்திற்கும் மாறாக வேகமாய் நிரம்பி வருகின்றன.

தவிர்க்க முடியாமல் நாம் சிக்கிக்கொண்ட இந்த யூஸ் அன் த்ரோஉயிரில்லா பொருட்களோடு மட்டுமேயாவது நிற்குமா?. உயிரும் உணர்வும் கொண்ட சக மனிதர்களின் உறவோடு, உணர்வுகளோடு பரவாமல் இருக்குமா?.

ஆனாலும் சக மனிதர்களோ, பொருளோ சட்டென அணைப்பதும், அதே வேகத்தில் புறந்தள்ளுவதும் மிக மிக இயல்பாக நம்மிடம் ஆழ வேறூன்றி வருவதை மறுக்க முடியவில்லை. 

__________________________________________



69 comments:

dheva said...

நிதர்சனமான உண்மை ..கதிர்! இன்று வரை என்னால் மறக்கமுடியாக ஹீரோ பேனா...! என்னோட நட்ராஜ் ஜாமின்ரி பாக்ஸ்...பேட்டா செருப்பு (பிஞ்சாலும் பல முறை தைச்சு போட்டு இருப்போம்)... என்னோட சைக்கிள்.... பல விசயங்கள் கதிர்!

நீங்க சொல்ற மாதிரி இந்த யூஸ் & த்ரோ பழக்கம் மனோதத்துவ ரீதியாவும் பாதிப்புகளை ஏற்படுத்தி மனித உறவுகள் வரைக்கும் வந்துடுச்சுன்றது மறுக்க முடியாத உண்மை...!


அட்டகாசமான வெளிப்பாடு..... I love this article!

soundr said...

:(


http://vaarththai.wordpress.com

மாதவராஜ் said...

பகிர்வுக்கு நன்றி.
இந்த உள்ளடக்கத்தில் நான் எழுதிய இடுகை http://mathavaraj.blogspot.com/2009/06/blog-post_18.html

Madumitha said...

மிக அற்புதமான விஷயத்தைப்
பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

vasu balaji said...

மனிதனோ அவன் பயன்படுத்தும் பொருளோ ‘யூஸ் அண்ட் த்ரோ’தான் ஆகிவிட்டது. குப்பைதான்.:(

சௌந்தர் said...

எங்க தாத்தா ஹீரோ பேனா உபயோக படுத்துவார். ஆனால் நாங்க ஜெல் பேனா தான் உபயோக படுத்துகிறோம்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மாறி வரும் காலத்தில் எந்தப் பொருளுமே பாதுகாக்க வேண்டியதில்லை என்ற நிலை வந்து விட்டது.

கொடுமை...

எங்க தாத்தா மஞ்சப் பையைக் கூட பத்திரமாக வைத்திருப்பார்... இன்று??

'பரிவை' சே.குமார் said...

மிக அற்புதமான விஷயத்தைப்
பற்றி அட்டகாசமான வெளிப்பாடு.

அன்புடன் அருணா said...

/யாராவது மைப் பேனாவை உபயோகப்படுத்துவதுண்டா? அப்படியிருந்தாலும் மிகமிகச் சொற்பமாகவே இருக்கும்./
நான் இன்னும் கையெழுத்து மைப் பேனாவை உபயோகித்துப் போடுகிறேன்.!!!இதே கருத்துள்ள ஒரு பதிவு ட்ராஃப்டில்!!!

செல்வா said...

///
அடடா, எத்தனையெத்தனை பொருட்கள் நம்மோடு கலந்து கிடக்கிறது, மிக அழகாய், மிக எளிதாய், மிக சல்லிசாய். நம்மோடு கலந்திருந்து என்ன பயன் நம் நேசிப்பு அற்றுத் தானே நம்மோடு அந்தப் பொருட்கள் இருக்கின்றன.///
சிந்திக்க வச்சுட்டீங்க ..!!

r.v.saravanan said...

உயிரும் உணர்வும் கொண்ட சக மனிதர்களின் உறவோடு, உணர்வுகளோடு பரவாமல் இருக்குமா?.


பரவாமல் இருக்க வேண்டும்
நல்ல சிந்தனை கதிர்

அகல்விளக்கு said...

நிறைய யோசிக்க வைத்து விட்டீர்கள்...

கலகலப்ரியா said...

ம்ம்...

Kumar said...

Important one!.

பழமைபேசி said...

//ஆனாலும் சக மனிதர்களோ, பொருளோ சட்டென அணைப்பதும், அதே வேகத்தில் புறந்தள்ளுவதும் மிக மிக இயல்பாக நம்மிடம் ஆழ வேறூன்றி வருவதை மறுக்க முடியவில்லை.//

ஒப்புதல் வாக்குமூலம் தந்த மாப்பு வாழ்க!!!


இவன் வொர்த்தா?? ரிட்டன் ஆஃப் இன்வெஸ்ட்மெண்ட் இருக்கா?? இஃகிஃகி.... எம்பிஏல சொல்லிக் குடுக்குறது ஊரெல்லாம் இருக்குங்ற வாக்குமூலத்தை நீங்க சொன்னதைச் சொன்னேன்.... இஃகிஃகி......

பழமைபேசி said...

எவண்டா எங்க மாப்புவைப் புறந்தள்ளினது?? எவ்வளவு உணர்ச்சிவசப்படுறார் பாருங்க....

பழமைபேசி said...

அவிங்க கிடக்குறாய்ங்க மாப்பு.... மனசைத் தேத்திகுங்க.... பசை இருந்தாதான் ஒட்டுறதுக்கு ஆவும்னு நினைக்கிறாய்ங்க போல....

பழமைபேசி said...

பாலாண்ணனுக்கு ஒரு போனைப் போடுங்க.... சரி ஆய்டும்......

vasu balaji said...

பழமைபேசி said...
எவண்டா எங்க மாப்புவைப் புறந்தள்ளினது?? எவ்வளவு உணர்ச்சிவசப்படுறார் பாருங்க....//

ஃபேஸ் புக்குல யாரோ ரிஜக்ட் பண்ணிட்டாய்ங்களாம்:))

vasu balaji said...

பழமைபேசி said...

//அவிங்க கிடக்குறாய்ங்க மாப்பு.... மனசைத் தேத்திகுங்க.... பசை இருந்தாதான் ஒட்டுறதுக்கு ஆவும்னு நினைக்கிறாய்ங்க போல....//

பசையும் யூஸ் அண்ட் த்ரோதானே இப்போல்லாம்:))

பழமைபேசி said...

// ச.செந்தில்வேலன் said...
மாறி வரும் காலத்தில் எந்தப் பொருளுமே பாதுகாக்க வேண்டியதில்லை என்ற நிலை வந்து விட்டது.

கொடுமை...

எங்க தாத்தா மஞ்சப் பையைக் கூட பத்திரமாக வைத்திருப்பார்... இன்று??

July 10, 2010 2:55 PM//

ஆமா... அமுச்சி, ஓடி ஓடி இருக்குற மழக் காய்தத்தையெல்லாம் மொகுட்டுல சொருகி வெக்கிறதை, செந்தில்த் தம்பி சொல்ல மறந்துட்டார் பாருங்க....

பழமைபேசி said...

// வானம்பாடிகள் said...
பழமைபேசி said...
எவண்டா எங்க மாப்புவைப் புறந்தள்ளினது?? எவ்வளவு உணர்ச்சிவசப்படுறார் பாருங்க....//

ஃபேஸ் புக்குல யாரோ ரிஜக்ட் பண்ணிட்டாய்ங்களாம்:))
//

அதான கேட்டேன்..... தெக்காலூரூ தெண்டபாணி சும்மா சும்மா ஏப்பம் விடுவானா??

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
பழமைபேசி said...

//அவிங்க கிடக்குறாய்ங்க மாப்பு.... மனசைத் தேத்திகுங்க.... பசை இருந்தாதான் ஒட்டுறதுக்கு ஆவும்னு நினைக்கிறாய்ங்க போல....//

பசையும் யூஸ் அண்ட் த்ரோதானே இப்போல்லாம்:))
//

இருக்குற உடம்பையும் யூஸ் அண்ட் த்ரோ கண்டிசனுக்கு கொண்டாந்துருவாய்ங்களோ?? குளோன் செய்து ஸ்டெப்னி ஒடம்பெல்லாம் ரெடி செய்துக்குவாய்ங்களோ??

ஈரோட்டுல எதுவும் சாத்தியம்!!

vasu balaji said...

பழமைபேசி said...
// வானம்பாடிகள் said...
பழமைபேசி said...
எவண்டா எங்க மாப்புவைப் புறந்தள்ளினது?? எவ்வளவு உணர்ச்சிவசப்படுறார் பாருங்க....//

ஃபேஸ் புக்குல யாரோ ரிஜக்ட் பண்ணிட்டாய்ங்களாம்:))
//

அதான கேட்டேன்..... தெக்காலூரூ தெண்டபாணி சும்மா சும்மா ஏப்பம் விடுவானா??//

அட இது பசி ஏப்பமுங்க:))

பழமைபேசி said...

//அட இது பசி ஏப்பமுங்க:))//

ஓகோ.... பசிய ஆத்தாமப் புறந்தள்ளிட்டாய்ங்கன்னு சொல்றீங்களா பாலாண்ணே??

இது எத்தினி நாளா நடக்குது கடைச் சாப்பாடு??

பழமைபேசி said...

பாலாண்ணே.... ஊர்ல இருக்குறீங்க.... கொஞ்சம் எதுக்கும் பார்த்துகுங்க... சரியா... புகையிரதம் மட்டும் தன்னோட பாதையில பிறழாமப் போனாப் பத்தாது.... ஆம்மாஆஆஆஆஆ

vasu balaji said...

பழமைபேசி said...
//அட இது பசி ஏப்பமுங்க:))//

ஓகோ.... பசிய ஆத்தாமப் புறந்தள்ளிட்டாய்ங்கன்னு சொல்றீங்களா பாலாண்ணே??

இது எத்தினி நாளா நடக்குது கடைச் சாப்பாடு??//

மாப்பு ஸ்டேடஸ்ல பாட்டு இருந்தா கடைச்சாப்பாடுதான்:)))

பழமைபேசி said...

// வானம்பாடிகள் said...


இது எத்தினி நாளா நடக்குது கடைச் சாப்பாடு??//

மாப்பு ஸ்டேடஸ்ல பாட்டு இருந்தா கடைச்சாப்பாடுதான்:)))
//

என்னாண்ணே... இப்படிச் சொல்லுதீக?? ஜூலை 22 விமானத்தை முன்கூட்டியே கிளப்பச் சொல்லணும் போல இருக்கே??

எங்க வீட்டு ஆளுக இதையெல்லாம் கவனிக்காம என்ன செய்யுறாக??

பழமைபேசி said...

ஏ...புகையிரதம் இல்லயாம்ப்பா.... மின்தொடர் ரதமாம்.....

பழமைபேசி said...

வலையிலதான் ஈரோட்டுக்காரங்க நெம்பன்னு பார்த்தா.... அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவுலயும் அவிங்கதான் இருக்காய்ங்க.....

கோயம்பத்தூர் மாவட்டத்தைப் பிரிச்சி... எதோ சதி செய்துட்டாய்ங்க போல.... இப்பப் போதாக்குறைக்கு.... அதையும் ஏத்துக்க மாட்டேய்ங்குறாய்ங்க.... திலுப்பூர் மாவட்டமாம்... என்ன காலக் கொடுமைடா சாமி... விட்டா, நீ ஒரு அனாதைன்னு சொல்லிடுவாய்ங்க போல!!

க ரா said...
This comment has been removed by the author.
vasu balaji said...

ஈரோட்டுக்காரய்ங்க ஏமாற்ரதிலையும் இப்ப போட்டிக்கு வாராய்ங்க. எம்புட்டு கோடி லவட்டினான் மாப்பு:))

பிரபாகர் said...

பேனாவுக்கு இன்க் வாங்கி, அதை குழைந்தைபோல் பராமரித்து கசியாமல்(கதிர் இடுகையல்லவா, அதற்காகவே இந்த வார்த்தை) சட்டைப்பையில் செருகி... ஆகா, இழந்த விசயங்கள். இதெல்லாம் விஞ்ஞான வளர்ச்சிக்கு நாம் தரும் பலிகள் கதிர்!

பிரபாகர்...

பழமைபேசி said...

//Comment deleted
This post has been removed by the author.//

இப்படி ஒன்னைப் போட்டு, வர்றவிங்க எல்லாம் சிண்டைப் பிச்சிக்கணுமா??

அது என்னவா இருக்கும்?? அது என்னவா இருக்கும்னு??

நல்லாக் காமிக்கிறாய்ங்க விளையாட்டு!!

க ரா said...

சரிதான்னே நீங்க சொல்லிருக்கிறது அத்தனயும்.

பழமைபேசி said...

//இதெல்லாம் விஞ்ஞான வளர்ச்சிக்கு நாம் தரும் பலிகள் கதிர்!

பிரபாகர்..//

சிவபூசையில கரடியா??

பிரபாகருத் தம்பி, வாங்க வாங்க...

பிரபாகர் said...

//
பழமைபேசி said...
வலையிலதான் ஈரோட்டுக்காரங்க நெம்பன்னு பார்த்தா.... அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவுலயும் அவிங்கதான் இருக்காய்ங்க.....

கோயம்பத்தூர் மாவட்டத்தைப் பிரிச்சி... எதோ சதி செய்துட்டாய்ங்க போல
//
நிர்வாக வசதி என்ற பெயரில் பிரித்து, தெளிவாய் சம்பாதிக்கத்தான் அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள் அண்ணே!...

பிரபாகர்...

பழமைபேசி said...

//இராமசாமி கண்ணண் said...
சரிதான்னே நீங்க சொல்லிருக்கிறது அத்தனயும்//

எது சரியில்லன்னு கொஞ்சம் சொல்லுங்கண்ணே!! ஆமா, நீங்க காவேரி ஆத்துக்கு கெழக்காலயா?? மேக்காலயா??

பிரபாகர் said...

அண்ணே, ஏற்கனவே என் ஆசான் ஸ்னேக் ஆக்கியிருக்காரு, இப்போ நீர் கரடியாக்கிட்டீரு...

பிரபாகர்...

பழமைபேசி said...

வாசிங்டன் கிளம்புறேன்... விமானத்துல ஏறச் சொல்லிட்டாய்ங்க....

கும்மி அடிக்க இடங்கொடுத்த மாப்பு வாழ்க!!

பிரபாகர் said...

//பழமைபேசி said...
//இராமசாமி கண்ணண் said...
சரிதான்னே நீங்க சொல்லிருக்கிறது அத்தனயும்//

எது சரியில்லன்னு கொஞ்சம் சொல்லுங்கண்ணே!! ஆமா, நீங்க காவேரி ஆத்துக்கு கெழக்காலயா?? மேக்காலயா??
//

ஆறு கிழக்கமா போகுமே, எப்படி பதில் சொல்றது?

vasu balaji said...

//சட்டென அணைப்பதும், அதே வேகத்தில் புறந்தள்ளுவதும்.//

இதுக்குத்தான் கால்கேட் பேஸ்ட் இல்லைன்னா ஃப்ரெஷ்மிண்ட் யூஸ் பண்ணனும்:))

ஹேமா said...

கதிர்...உண்மையாக நான் இப்போதும் பாவிக்கிறேன்.
வழுக்காத எழுத்து அழகாக வரும்.ஆனால் எழுத்து
வேலைதான் குறைந்துவிட்டது.

அருள் said...

நல்ல பதிவு, இந்த படத்தைப் பாருங்க:

http://www.storyofstuff.com

ராமலக்ஷ்மி said...

பள்ளி இறுதியிலிருந்து கல்லூரி முடிக்கும் வரை பயன்படுத்திய கருப்பு ஹீரோ பேனா நினைவுக்கு வருகிறது.

யூஸ் அண்ட் த்ரோ.. உண்மைதான், காலத்தின் கட்டாயமாகி நம்மையும் அதற்கு பழகச் செய்து விட்டது.

//உயிரும் உணர்வும் கொண்ட சக மனிதர்களின் உறவோடு, உணர்வுகளோடு பரவாமல் இருக்குமா?.
ஆனாலும் சக மனிதர்களோ, பொருளோ சட்டென அணைப்பதும், அதே வேகத்தில் புறந்தள்ளுவதும் மிக மிக இயல்பாக நம்மிடம் ஆழ வேறூன்றி வருவதை மறுக்க முடியவில்லை. //

நிலையில்லா வாழ்விலே நிலையற்ற பொருட்கள் மேல் சிலநேரம் சென்டிமென்ட் பார்த்தோ, பிடித்துப் போயோ பற்று வைப்பது விட்டு, சக மனிதர் மேல் பற்று வைக்க நினைப்போம். நல்ல பதிவு.

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பதிவு ..........வாழ்த்துகள்

sakthi said...

ஒரு அழகிய ஹீரோ பேனா அப்பா பரிசாய் தந்தது எத்தனையோ நாட்களாய் வைத்திருந்தேன் இப்போது எங்கே என்றே தெரியவில்லை

என்னவோ ரொம்ப யோசிக்கவைத்துவிட்டீர்கள்!!!

ராம்ஜி_யாஹூ said...

பழையன கழிதலும் புதியன புகுதலும் இருந்தால் தான் நாம் பொருள் சாந்த உலகில் முன்னேறி செல்ல முடியும்.

பேனாவே இல்லாத காலம் இது

சிநேகிதன் அக்பர் said...

உண்மைதான். இங்கு சவுதியில் குடித்த பெப்சி, கோக் பாட்டில் முதல்ற்கொண்டு தூர எறிந்து விடுவார்கள். கை துடைக்கப்பயன்படுத்துவதும் டிஷ்யூப்பேப்பர்தான். இப்போது எல்லாமே பயன்படுத்து தூக்கி எறி பாலிசிதான்.

காமராஜ் said...

சுற்றியிருக்கிற எல்லாவற்றையும் உபயோகித்துதூக்கி எறிந்த பின்னர்.அடுத்த படியாக மனிதர்களையும் தூக்கி எறிய கை பரபரக்கும்.இதுதான் அயலுக்கும்,இந்தியாவுக்குமுள்ள வித்யாசம். படிக்கையில் சாதாரணமாக தெரியும் இந்த விடயம் சிந்திக்க,சிந்திக்க நடுக்கமாக இருக்கு கதிர். மிகச்சின்ன விசயம் போலத்தெரியும் பெரிய எச்சரிக்கை.சல்யூட் கதிர்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையா சொல்லிருக்கீங்க கதிர் சார். எங்கு பார்த்தாலும் யூஸ் அன்ட் த்ரோ தான் மலிந்து கிடக்கிறது. நான் உபயோகப்படுத்திய மைப்பேனா கண்முன்னாடி வந்துட்டு போகிறது.

நல்ல பகிர்வு கதிர் சார்.

Thenammai Lakshmanan said...

சக மனிதர்களோ, பொருளோ சட்டென அணைப்பதும், அதே வேகத்தில் புறந்தள்ளுவதும் மிக மிக இயல்பாக நம்மிடம் ஆழ வேறூன்றி வருவதை மறுக்க முடியவில்லை. //

உண்மை கதிர்..

priyamudanprabu said...

ஹி..ஹி.. எங்கள மாதிரி யூத்துங்க ’முடி’ என்று கூடச் சொல்வோம்)

//////////////

ha ha அனுபவம்

priyamudanprabu said...

ஹி..ஹி.. எங்கள மாதிரி யூத்துங்க ’முடி’ என்று கூடச் சொல்வோம்)

//////////////

ha ha அனுபவம்

priyamudanprabu said...

ஆனாலும் சக மனிதர்களோ, பொருளோ சட்டென அணைப்பதும், அதே வேகத்தில் புறந்தள்ளுவதும் மிக மிக இயல்பாக நம்மிடம் ஆழ வேறூன்றி வருவதை மறுக்க முடியவில்லை.
................

உண்மை

ஈரோடு கதிர் said...

நன்றி @@ dheva

நன்றி @@ Chidambaram Soundrapandian

நன்றி @@ மாதவராஜ்

நன்றி @@ Madumitha

நன்றி @@ வானம்பாடிகள்

நன்றி @@ சௌந்தர்

நன்றி @@ ச.செந்தில்வேலன்

நன்றி @@ சே.குமார்

நன்றி @@ அன்புடன் அருணா

நன்றி @@ ப.செல்வக்குமார்

நன்றி @@ r.v.saravanan

நன்றி @@ அகல்விளக்கு

நன்றி @@ கலகலப்ரியா

நன்றி @@ Kumar

நன்றி @@ பழமைபேசி
நன்றி @@ இராமசாமி கண்ணண்

நன்றி @@ பிரபாகர்

நன்றி @@ ஹேமா

நன்றி @@ அருள்

நன்றி @@ ராமலக்ஷ்மி

நன்றி @@ rk guru

நன்றி @@ sakthi

நன்றி @@ ராம்ஜி_யாஹூ

நன்றி @@ அக்பர்

நன்றி @@ காமராஜ்

நன்றி @@ Starjan ( ஸ்டார்ஜன் )

நன்றி @@ thenammailakshmanan

நன்றி @@ பிரியமுடன் பிரபு

அனைவருக்கும் நன்றி

@@ மாப்பு / வானம்பாடி...
இருங்க நேரம் கிடைக்கும் போது வாலில் சூடு வைக்கிறேன்

@@ ராம்ஜி_யாஹு
அண்ணே காமடி பண்ணலையே

@@ சிலருக்கு மைப் பேனா குறித்து கொசுவத்தி சுத்தவைத்துவிட்டேனோ எனத் தோன்றுகிறது.

அனைவருக்கும் நன்றி

சீமான்கனி said...

நானும் பள்ளி காலங்களில் மை பேனாவை பொக்கிஷமாய் பாதுகாப்பேன்.இன்னும் ரெம்ப பாதுகாப்பா ஒரு ஹிரோ பேனா இருக்கு அது சாதாரன பேனாவை விட கொஞ்சம் இல்ல ரெம்பவே வித்யாசமா இருக்கும். நல்ல பகிர்வு அண்ணே....

தேசாந்திரி-பழமை விரும்பி said...
This comment has been removed by the author.
தேசாந்திரி-பழமை விரும்பி said...

அருமை...
இந்த பதிவுடன் தொடர்புடைய (துன்னு நெனைக்கிறேன்.. !) எனது இடுகை...

இப்போ உங்களுக்கு வயசு 13... நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?


கொஞ்சம் இதையும் வந்து பாருங்க...

ரோஸ்விக் said...

மனிதர்களும் "யூஸ் அன்ட் த்ரோ" லிஸ்ட்-ல வந்து ரொம்ப நாளாச்சு கதிர். :-(

க ரா said...

////இராமசாமி கண்ணண் said...
சரிதான்னே நீங்க சொல்லிருக்கிறது அத்தனயும்//

எது சரியில்லன்னு கொஞ்சம் சொல்லுங்கண்ணே!! ஆமா, நீங்க காவேரி ஆத்துக்கு கெழக்காலயா?? மேக்காலயா??//

பழமைபேசி அண்ணண் நான் சாத்தூருங்க, விருதுநகர் பக்கம். நம்ம காமராஜ் சார், மாதவ் சார் ஊரு நானும்.

Mahi_Granny said...

தங்களிடம் எனக்கு பிடித்தது இது தான். எல்லோருக்கும் உபயோகமான ஒரு செய்தியுடன் கூடிய பதிவு நன்றி கதிர்

*இயற்கை ராஜி* said...

mmmmmmmm

ஈரோடு கதிர் said...

நன்றி @@ seemangani

நன்றி @@ தேசாந்திரி-பழமை விரும்பி

நன்றி @@ ரோஸ்விக்

நன்றி @@ Mahi_Granny

நன்றி @@ ராஜி

பழமைபேசி said...

பாலாண்ணே, நாம இந்த மனித சாதி அல்லவாம்.... அய்ய்... யூஸ் அண்ட் த்ரோ செய்யுற இழி சாதி நாங்க அல்லவாம்..... மகிழ்ச்சி; மகிழ்ச்சி; மகிழ்ச்சி!!!

க.பாலாசி said...

ரொம்ப நாளா எங்கப்பா பயன்படுத்துகிற பேனாவுக்குகூட ஒரு முக்கியத்துவம் கொடுத்து வச்சிருக்காரு. இன்னைக்கு எனக்கது இல்ல. ஒண்ணு போனா இன்னொண்ணு. இந்த மனப்பான்மை வேறூன்ற காரணமே இந்த யூஸ் அன் த்ரோ பொருட்களின் வளர்ச்சிதான்.

என்ன பண்றது...

ஈரோடு கதிர் said...

@@ பழமைபேசி

மாப்பு செம கிக்-ல இருக்காரு போல
@@ க.பாலாசி
நன்றி பாலாசி

Thamira said...

முடிவில் சிந்திக்கத்தகுந்த ஒரு விஷயத்தை வைத்து கட்டுரைக்கு கனம் சேர்த்திருக்கிறீர்கள்.

ILA (a) இளா said...
This comment has been removed by the author.