மின்னல்கள்

0


துளித் துளியாய் சேமித்து
வெஞ்சினம் புகுத்தி வெம்மை சுமக்கும்
உருவமில்லா ஊடல் மூட்டையை
ஊசியாய் கிழிக்கும் ஒற்றை முத்தம்

0

வர்ணங்கள் நீர்த்து வாடிய விழிகளில்
எதிர்பாராமல் எதிர்கொள்ளும் தருணத்தில்
இயக்கச் சக்கரம் இறுகிப் பிடிக்க
சொட்டுச் சொட்டாய் நிரம்பும் வர்ணம்

0

உதட்டு வரிகளில் மிதக்கும் கவிதையை
உதடுகளால் ஒத்தியொத்தியெடுக்க
குறும்பாய் குறுகுறுக்கும் மீசைமுடி
கிறுகிறுப்பாய் தீட்டும் ஓவியம்

0

36 comments:

http://rkguru.blogspot.com/ said...

கவிதை அருமை...

dheva said...

//உதட்டு வரிகளில் மிதக்கும் கவிதையை
உதடுகளால் ஒத்தியொத்தியெடுக்க
குறும்பாய் குறுகுறுக்கும் மீசைமுடி
கிறுகிறுப்பாய் தீட்டும் ஓவியம்
//


ரொம்ப ரொமன்டிக்கான ஒரு அட்டாக் கதிர்....! கவிதையை ஒத்தி எடுக்கும் போது இடைஞ்சலா இருக்க கூடாதுன்னு அப்போ அப்போ.. எடுத்துர்றது மீசையை....ஹா..ஹா....Wonderful explanaiton in poetic way.. about the greatest feel....!

ரொம்ப அருமை....!

விக்னேஷ்வரி said...

ஊர்ல மழை கொட்டுதோ! ;)

Katz said...

//துளித் துளியாய் சேமித்து
வெஞ்சினம் புகுத்தி வெம்மை சுமக்கும்
உருவமில்லா ஊடல் மூட்டையை
ஊசியாய் கிழிக்கும் ஒற்றை முத்தம்//

முத்தம் மிகவும் அழகானது. வலிமையானதும் கூட!

பிரபாகர் said...

மின்னலாய் தெறிக்கும் கருத்துக்களுடன்... அழகாய்...

பிரபாகர்...

vasu balaji said...

ஈரோட்ல மழைங்ளாண்ணா? இப்புடி மின்னுது?

r.v.saravanan said...

உருவமில்லா ஊடல் மூட்டையை
ஊசியாய் கிழிக்கும் ஒற்றை முத்தம்

இவ் வரிகளை ரசித்தேன் கதிர்

உதட்டு வரிகளில் மிதக்கும் கவிதையை
உதடுகளால் ஒத்தியொத்தியெடுக்க
குறும்பாய் குறுகுறுக்கும் மீசைமுடி
கிறுகிறுப்பாய் தீட்டும் ஓவியம்
அருமை கதிர்

கலகலப்ரியா said...

நல்லாருக்கு மின்னல்..

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு கதிர்.

VELU.G said...

//
துளித் துளியாய் சேமித்து
வெஞ்சினம் புகுத்தி வெம்மை சுமக்கும்
உருவமில்லா ஊடல் மூட்டையை
ஊசியாய் கிழிக்கும் ஒற்றை முத்தம்
//

classic


அந்த மூன்றாவது கவிதை உங்கள் இளமையை இன்னும் பறைசாற்றுகிறது

sakthi said...

துளித் துளியாய் சேமித்து
வெஞ்சினம் புகுத்தி வெம்மை சுமக்கும்
உருவமில்லா ஊடல் மூட்டையை
ஊசியாய் கிழிக்கும் ஒற்றை முத்தம்


solla varthai illai alagu

sakthi said...

வர்ணங்கள் நீர்த்து வாடிய விழிகளில்
எதிர்பாராமல் எதிர்கொள்ளும் தருணத்தில்
இயக்கச் சக்கரம் இறுகிப் பிடிக்க
சொட்டுச் சொட்டாய் நிரம்பும் வர்ணம்

arumai

அன்புடன் நான் said...

உதட்டு வரிகளில் மிதக்கும் கவிதையை
உதடுகளால் ஒத்தியொத்தியெடுக்க
குறும்பாய் குறுகுறுக்கும் மீசைமுடி
கிறுகிறுப்பாய் தீட்டும் ஓவியம்//

அப்படியா.....!
கவிதையால் வயதை குறைக்கின்றீர்கள்.

அன்புடன் நான் said...

வர்ணங்கள் நீர்த்து வாடிய விழிகளில்
எதிர்பாராமல் எதிர்கொள்ளும் தருணத்தில்
இயக்கச் சக்கரம் இறுகிப் பிடிக்க
சொட்டுச் சொட்டாய் நிரம்பும் வர்ணம்//

எனக்கு புரியலயே...?

அன்புடன் நான் said...

துளித் துளியாய் சேமித்து
வெஞ்சினம் புகுத்தி வெம்மை சுமக்கும்
உருவமில்லா ஊடல் மூட்டையை
ஊசியாய் கிழிக்கும் ஒற்றை முத்தம்//

இது உண்மை!
உணர்ந்தவர்களுக்கே புரியும்!?

Thamira said...

முதல் கவிதை ரசனை, பிடித்திருந்தது.

நிஜமா நல்லவன் said...

ஆஹா...சூப்பரா இருக்கே...இன்னுமா எதிர் கவுஜை போடலை யாரும்????

சீமான்கனி said...

மின்னல் தெறிக்க மனதை கிழித்த கவிதைகள் அழகு...

க ரா said...

எல்லா கவிதையும் ரொம்ப இளமையா இருக்குன்னா :-).

Romeoboy said...

இங்கிட்டு நல்ல மழை அங்கிட்டு எப்படி ??

ஹேமா said...

முதலும் கடைசியுமான மழை மின்னல் காதல் மின்னல்
அருமை கதிர் !

மாதேவி said...

மின்னல்களால் வந்த கவிதைகள் அழகு.

அகல்விளக்கு said...

அட்டகாசம் அண்ணா...

Anonymous said...

azhagiya varthaigalal avathariththa asathal kavithaigal...

//உதட்டு வரிகளில் மிதக்கும் கவிதையை
உதடுகளால் ஒத்தியொத்தியெடுக்க
குறும்பாய் குறுகுறுக்கும் மீசைமுடி
கிறுகிறுப்பாய் தீட்டும் ஓவியம்//

samibha kaalamai oru mathiriyai thaan erukinga appu.....eppadiyo engaluku pudhu kavithaigal kedaithal sari...

Anonymous said...

//July 6, 2010 6:01 PM

சி. கருணாகரசு said...
வர்ணங்கள் நீர்த்து வாடிய விழிகளில்
எதிர்பாராமல் எதிர்கொள்ளும் தருணத்தில்
இயக்கச் சக்கரம் இறுகிப் பிடிக்க
சொட்டுச் சொட்டாய் நிரம்பும் வர்ணம்//

எனக்கு புரியலயே...?//

karuna kathir blogla phone number eruku cal panni kettudunga....

Rajan said...

தும் ததா!

Unknown said...

//.. அந்த மூன்றாவது கவிதை உங்கள் இளமையை இன்னும் பறைசாற்றுகிறது ..//

இதற்காகத்தானே ஆசைப்பட்டீர்கள்..??!!

பழமைபேசி said...

எதிர் இடுகை போட நேரமில்லை...

அன்புடன் நான் said...

நேற்று... கருத்துரை போடும் போது ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன்....
என்னோட கருத்துரைத்தான் முதலில் இருந்தது... பிறகு கருத்துரையில் யாருஐய கருத்தும் இல்லை!

vasu balaji said...

எதிர் கவுஜையில்லைன்னு மனம் தளராதீங்க பாஸ். இதோ.

0

துளித்துளியாய் உறிந்த சரக்கின்
போதை பரவ வெம்மை சுமக்கும்
தோசைக்கல்லி உடைந்த முட்டையை
அடித்து ஊற்றும் ஆம்லட் சத்தம்!

0

நிதானமிழந்து சொருகிய விழிகளில்
எதிர்பாராமல் சிக்கிக் கொள்ளும் தருணங்களில் குழறும் நாக்கு உளற
சொட்டுச் சொட்டாய் கசியும் வியர்வை

0

உதட்டோரம் ஒட்டிய ஊறுகாயை
நாவால் வழித்தெடுத்து
மேலுதட்டு மீசையில் நனைத்த சரக்கால்
கிறுகிறுத்து ஏற்றும் போதை!

வர்ட்டா:))

Thenammai Lakshmanan said...

மூன்றும் அருமை கதிர்

க.பாலாசி said...

சரி.. ஒண்ணுக்கும் மூணுக்கும் இடையில தனி ட்ராக்கா ரெண்டாவது மின்னுதே...

1, 3 செம ஹாட்...

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

ஊடல் மூட்டையை ஊசியாய்க் கிழிக்கும் உதட்டு முத்தம்

இதழ்கள் கும்பாய் விளையாட குறுகுறுவென மீசை முடி குறிகிறுப்பாய்த் தீட்டும் ஓவியம்

கற்ப்னை நன்று நன்று கதிர்- காதல் / காமம் ரசம் சொட்டுகிறாது கதிர்.

மத்தியில் வேறு ஒரு சுவை

நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா

பிரேமா மகள் said...

அப்புறம்?

Anonymous said...

நேத்து நம்ம ஊர்ல மழை ந்னு நிறைய பேருக்கு தெரிய வெச்சிட்டீங்க பாஸு

Anonymous said...
This comment has been removed by a blog administrator.