மாமனிதர் – சகாயம் ஐ.ஏ.எஸ்

மக்கள் நலனை மட்டுமே பெரிதாக கருதும், அரசு அதிகாரிகள் வரிசையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ் மிக முக்கியமான ஒரு சக்தி.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடும் புனிதமாகவும் இருக்கின்றதோ கடைசி நாளின் போதும் அதே புத்துணர்ச்சியோடும், புனிதத்தோடும் ஓய்வு பெறவேண்டும் என்ற முடிவோடு தனது பணியைத் துவங்கிய இந்த மகத்தான மனிதர், பிறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தில்.

”மற்றவர்களின் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட, அதை எடுத்து வரக் கூடாது” என்று தன் அம்மா சொன்ன வார்த்தையை வேதவாக்காகக் கொண்ட இந்த மாவட்ட ஆட்சித்தலைவரின் சொத்து எவ்வளவு தெரியுமா?

மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடும், வங்கி சேமிப்பு 7,172 ரூபாயும்

பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர் 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் இன்று தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார்.

அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு, பேருந்துகளில் திடீர் ஆய்வு என இவரைப் பற்றி அடிக்கடி படிக்கும் ஒவ்வொரு செய்தியும் மனதிற்குள் மிகப் பெரிய துள்ளலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

ஒரு உதாரண மாவட்ட ஆட்சித் தலைவரான இவர். விவசாயிகள் ஏற்கனவே ஏகப்பட்ட சிக்கலில் இருக்கிறார்கள், எனவே அவர்களிடம் தங்கள் குறைகளைச் சொல்ல இங்கே வாருங்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இழுத்தடிப்பதை விட அவர்களைத் தானே நேரில் சென்று குறைகளைக் கண்டறிந்து தீர்த்து வைத்தால் என்ன என்று, ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கேயே இரவு தங்கி விவசாய மக்களின் குறைகளை கண்டறிந்து வருகிறார்.

வெப்படை அருகே ஒரு கிராமத்தில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை கிளம்பும் வழியில், அந்தக் கிராமத்தைச் சார்ந்த ஒரு வயதான விவசாயத் தம்பதி தங்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்ததைக் கவனித்து, தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, இறங்கிச் சென்று அவர்களிடம் தன்னை அந்த ”ஜில்லாவின் கலெக்டர்” என அறிமுகம் செய்து கொண்டு, தான் வந்திருக்கும் செய்தி கேட்டும் கூட, தங்கள் நிலத்தில் உழைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு பெருமை கொள்வதாகக் கூறி அவர்களோடு ஒரு புகைப்படம் எடுத்து அதை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பெரிதாக மாட்டி வைத்திருக்கிறார்.

கிராமத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடித்து, அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ஆசிரியர்களைப் பெரிதும் ஊக்குவித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்குச் செல்லும் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி ஊக்குவிக்கிறார்.

எல்லாவற்றிக்கும் மேலாக.. புவி வெப்பத்தை குறைக்க உலகளவில் அதிகாரம் வாய்த்தவர்கள் அலட்சியம் காட்டிய போதிலும், உலகத்திற்கே உதாரணமாக தன்னுடைய மாவட்டத்தில் ஒரு கோடி மரங்கள் நட்டு வளர்த்த வேண்டும் என்ற மிகப் பெரிய கனவோடு செயல்பட்டு, இது வரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மட்டும் 25,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், நாமக்கல் நகர அரிமா சங்கம் போன்றவற்றின் உதவியோடு நெடுஞ்சாலைகளில், பள்ளி வளாகங்களில், கிராமத்தில் கிராமத் தோப்புகளில் என இது வரை நட்டு பராமரிக்கும் மரங்களில் எண்ணிக்கை ஆயிரங்களில் அல்ல.... மொத்தம் 25 லட்சம் மரங்கள்.

கிராம குறை தீர் மன்றம், மாதிரி கிராமங்கள், கிராமத் தோப்பு, ஒரு கோடி மரம் நடும் திட்டம், மாவட்ட ஆட்சியரின் கடிதங்கள் என மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்தி வருகிறார். நாமக்கல் மாவட்டத்தின் அதிகாரப் பூர்வ இணையப் பக்கத்தில் இது குறித்து நிறைய செய்திகள் உள்ளன.

தமிழகத்தின் தலைசிறந்த பத்துப் பேரில் ஆனந்த விகடன் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பது கூடுதல் பெருமையும் கொண்டவர்

வருங்கால சமுதாயம் கொண்டாட வேண்டியது மினுமினுக்கும் சினிமா நடசத்திரங்களையும், பளபளக்கும் விளையாட்டு வீரர்களையும் அல்ல, இந்த தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.

_______________________________________

இந்தத் தளத்தையும் வாசித்துப் பாருங்கள். நன்றி  ஆல்பர்ட் ஃபெர்ணாண்டோ

_______________________________________

52 comments:

ராமலக்ஷ்மி said...

//மொத்தம் 25 லட்சம் மரங்கள்.//

பிரமிக்க வைக்கிறார்.

//தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.//

நிச்சயமாக. நல்ல பகிர்வு.

அன்புடன் நான் said...

வியக்க வைக்கிறார் மாவட்ட ஆட்சியர்..,
அவர்களுக்கு வாழ்த்தும்...
உங்களுக்கு நன்றியும்.

vasu balaji said...

பிரமிப்பாய் இருக்கிறது. பகிர்தலுக்கு நன்றி.

சென்ஷி said...

மிகச்சிறப்பான மனிதர்களைப் பற்றிய பதிவுகள் உங்களிடமிருந்து தொடர்வது மகிழ்வைத் தருகிறது கதிர். மிக்க நன்றி..

க ரா said...

நல்ல பகிர்வு. நன்றி.

சென்ஷி said...

//வருங்கால சமுதாயம் கொண்டாட வேண்டியது மினுமினுக்கும் சினிமா நடசத்திரங்களையும், பளபளக்கும் விளையாட்டு வீரர்களையும் அல்ல, இந்த தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.//

வழிமொழிகின்றேன்...

Albert Fernando said...

அன்பின் கதிர்,

கூடுதலாக சில‌ தகவல்.
பொதுமக்களிடமிருந்து இணையம் மூலம் புகாரை,கோரிக்கைகளைப்
பெற்று அவர்கள் முகம் பார்க்காமலே அவர் செய்த உதவிகளை
இங்கு காணலாம்.

http://namakkalcollector.net/
திடீரென்று முன்னறிவிப்பில்லாமல் எந்த அதிகாரிகளும் இல்லாமல் ஒரு கிராமத்துக்கு இரவு சென்று
அந்த ஊரில் தங்கி, இரவில் ஊரிலுள்ளவர்களிடம் பிரச்னைகளை
விசாரித்தறிந்துகொள்கிறார். யார் வீட்டிலும் தங்காமல் பொது இடத்தில்
ஒரு கட்டிலைக் கொண்டுவரச்சொல்லி படுத்துக்கொள்கிறார்.

காலையில் பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து இரவு எடுத்த குறிப்பைவைத்து
தொடர்புடைய அதிகாரிகளை அங்கே வரவழைத்து தீர்க்கக்கூடிய பிரச்னைகளை
அங்கேயே தீர்த்துவிட்டு மறுநாள் அலுவலகம் செல்கிறார். இன்னும் எவ்வளவோ
செய்கிறார்.ஒரு புத்தகமே போடலாம்.

அரசு மட்டும் ஒத்துழைத்தால் நாமக்கல் மாவட்டத்தை மிகச் சிறந்த
மாவட்டமாகக் கொண்டுவந்துவிடுவார்.ம்ம்ம்ம்ம்ம்...!

நேசமித்ரன் said...

அதிமானுடத்தனம் என்பது நேர்மையாய் உழைத்தல் என்றிருக்கும் நாளில் இத்தகைய ஆத்மாக்களின் இருப்பு கொண்டாடப் பட வேண்டியது

மிக்க நன்றி கதிர் சார்

ஒரு சின்ன திருத்தம் :)

//உலகலவில்//

ள’ கரம் சரி பாருங்கள்

நன்றி !!

AkashSankar said...

மனதார வாழ்த்துகிறேன்...அந்த மாமனிதரை...

பழமைபேசி said...

அவர் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்!

பிரபாகர் said...

இது போன்ற விஷயங்களை எழுதி அசத்துகிறிர்கள் நண்பா!

எண்ணம்போல் வாழ்வு.... இத்தகைய எண்ணம் உங்களை மேன்மேலும் உயர்வான இடத்துக்கு கொண்டு செல்லும்.

பிரபாகர்...

மின்னுது மின்னல் said...

ஆச்சரியமாக இருக்கிறது !!

sathishsangkavi.blogspot.com said...

இந்த மாதிரி எல்லா மாவட்ட ஆட்சியரும் இருந்தால் நம் நாட்டின் முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது....

இவரைப்பற்றி நான் ஒரு வார இதழில் படித்த செய்தி... அந்த மாவட்டத்தில் இருக்கும் ஒருவர் துனை முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர் நாங்க சொல்வதை செய்வதில்லை என்று புகார் சொன்னாராம் அதற்கு துணை முதல்வர் சகாயத்தை எனக்கு நன்றாக தெரியும் நீங்கள் முதலில் சரியாக இருங்கள் என்று துணை முதல்வர் கூறியதாக படித்த ஞாபகம்...

இவரைப் போல் நேர்மையான அதிகரிகளை அரசு ஊக்குவிக்கவேண்டும்...

சத்ரியன் said...

//இவரைப் போல் நேர்மையான அதிகரிகளை அரசு ஊக்குவிக்கவேண்டும்..//

அரசு என்பதே பொதுமக்களாகிய நாம்தானே நண்பா? (அது ஒரு குடும்பத்துக்கு தாரை வார்த்து குடுத்துட்டோம் ..அது வேற கதை)

ஆக, திரு.சகாயம் போன்றவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நாமும் செயல் படணும், நம் குழந்தைகளையும் வளர்க்க வேண்டும்.

இதுதான் “அவர்” போன்ற உயரியவர்க்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

பதிவிற்கு நன்றிங்க கதிர்.

க.பாலாசி said...

எத்தனைமுறை இவரைப்பற்றி கேள்விப்பட்டாலும் படித்தாலும் ஒரு பிரமிப்பையும், மனமகிழ்வையும் தருகிற மிகச்சிறந்த அரசு அதிகாரியாகவே இருக்கிறார். அரசாங்கம் இவருக்கு எந்த இடையூரும் தராமலிருந்தால் இன்னும் தனது பணியை சிறப்புடன் செய்வார்.

Thenammai Lakshmanan said...

இவரை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் முன்னேற வேண்டும்..

dheva said...

மிக நல்ல விசயம். பகிர்தலுக்கு நன்றி....!

Chitra said...

Very impressive! May God bless him!

Sabarinathan Arthanari said...

வாழ்த்துகள் திரு.சகாயம்

பகிர்தலுக்கு நன்றி @கதிர்.

VELU.G said...

மிக முக்கியமான தகவல்

பகிர்வுக்கு நன்றி

அவருடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி said...

மிக நல்ல பகிர்வு கதிர்.

Paleo God said...

இது போன்ற நல்ல அதிகாரிகளை நிம்மதியாய் வேலை செய்ய விட்டாலே போதும்.

//சகாயத்தை எனக்கு நன்றாக தெரியும் நீங்கள் முதலில் சரியாக இருங்கள் என்று துணை முதல்வர் கூறியதாக படித்த ஞாபகம்..//

துணை முதல்வருக்கு பாராட்டுக்கள். :)

r.v.saravanan said...

சிறப்பான மனிதர்களை கண்டு அவர்களை பற்றி இடுகையிடும் உங்கள் பணி

மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

butterfly Surya said...

நன்றி கதிர்.

மாமனிதர் என்பதில் ஐயமில்லை.அவர் நீண்ட நாள் வாழ வேண்டும். அவரது சேவை தொடர வேண்டும்.

ஷர்புதீன் said...

மாமனிதர்

யுக கோபிகா said...

//ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கேயே இரவு தங்கி விவசாய மக்களின் குறைகளை கண்டறிந்து வருகிறார். //

நானும் கூட கேள்வி பட்டுள்ளேன்..

//இது வரை நட்டு பராமரிக்கும் மரங்களில் எண்ணிக்கை ஆயிரங்களில் அல்ல.... மொத்தம் 25 லட்சம் மரங்கள்.//

அருமை...

பிரேமா மகள் said...

சகாயத்திற்கு சல்யூட்..


நல்ல பதிவு தந்த கதிர் அங்கிளுக்கு நன்றிகள்..

வால்பையன் said...

பல மாமா மனிதர்கள் முன்னாள் இந்த மாமனிதர் உயர்ந்து நிற்க வாழ்த்துக்கள்!, இவரை பார்த்தாவது மற்ற கலைக்ட்டர்களுக்கு புத்தி வராதா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான மனிதர்; உண்மையிலே வியக்கவைக்கிறார். இவரைப் போல எல்லோரும் இருக்கமாட்டார்களா என்று ஏங்க வைக்கிறார். நன்றி கதிர் சார்.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு. அனைவருக்கும் ஒரு ரோல் மாடல்.

அம்பிகா said...

//தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.//

நிச்சயமாக. நல்ல பகிர்வு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
This comment has been removed by the author.
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பாரதியின் ‘தேடிச் சோறு நிதம் தின்று’
என்ற பாடலின் மஹா புருஷராய் மனத்துள் நிற்கிறார், அந்த நாமக்கல் மாமனிதர். தகவலுக்கு நன்றி,கதிர்!

அ.முத்து பிரகாஷ் said...

திரு சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு பூங்கொத்துக்கள் ....

// எத்தனைமுறை இவரைப்பற்றி கேள்விப்பட்டாலும் படித்தாலும் ஒரு பிரமிப்பையும், மனமகிழ்வையும் தருகிற மிகச்சிறந்த அரசு அதிகாரியாகவே இருக்கிறார்... //
ஆமாம் தோழர் !

கதிர் , இந்த பதிவின் லிங்கை தயவு செய்து மாமனிதருக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் ; மேலும் மகிழ்வார் .

தேசாந்திரி-பழமை விரும்பி said...

பகிர்வுக்கு நன்றி..
:)

கலகலப்ரியா said...

மாமனிதர்தான்..

பா.ராஜாராம் said...

மிக அருமையான பகிர்வு.

இப்படியெல்லாம் மனசில் இருந்து செய்ய ஒரு மனசு வேணும் சகாயம் சார்.

சல்யுட்!

இப்படியெல்லாம் மனிதர்களை அறிமுகம் செய்ய ஒரு மனசு வேணும் கதிர்.

சல்யுட்!

Unknown said...

இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

தாறுமாறு said...

I visited his website and was a bit disappointed to see this following entry,
"காந்தி கனவு கண்ட கிராம இராஜ்யம் உருவாக, கிராமப்புற
மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட தமிழக முதல்வர் எடுத்து
வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு "

Why not just say "thamizhaga arasu eduththu varum palveru ..."?

If even honest officers like him have to put jaalra to CM then what is the point? I must say that I was a bit disappointed.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சகாயத்திற்கு எனது சல்யூட்..

குடுகுடுப்பை said...

சகாயம் எதிர்பார்க்காத சகாயம் தொண்டு தொடரட்டும்.

Anonymous said...

MAA MANITHAR...thalaipey sollivittadhu....

priyamudanprabu said...

நல்ல பகிர்வு.

hariharan said...

நாமக்கல் மாவட்ட மக்கள் மனதில் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாமல் தமிழக மக்களையே திரும்பி பார்க்க வைத்தார்.

இன்னமும் உள்ள நேர்மையான அரசு அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அறிமுகம் செய்யுங்கள்.

ஈரோடு கதிர் said...

கருத்துகளை, வாழ்த்துகளை, மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

kavisiva said...

மாமனிதருக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள்!

கே. பி. ஜனா... said...

மிக நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.

ரசிகன்! said...

excellent post sir...

worth reading!!!

Rangan Kandaswamy said...

எனக்கு டிசம்பர் முதல் வேலை இல்லை. வருமானம் கிடையாது. எப்படி உதவி பெறுவது?

goma said...

”மற்றவர்களின் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட, அதை எடுத்து வரக் கூடாது” என்று தன் அம்மா சொன்ன வார்த்தையை வேதவாக்காகக் கொண்ட இந்த மாவட்ட ஆட்சித்தலைவரின் சொத்து எவ்வளவு தெரியுமா?

எத்தனை சக்தி வாய்ந்த அறிவுரை.இது போல் அறிவுரைகளை பாலோடு சேர்த்து ஊட்டி,மகனை,பார் புகழ வாழவைத்துக் கொண்டிருக்கும் அந்தத் தாய்க்கு நான் தலை வணங்குகிறேன்.

goma said...

நாமக்கல்லில் ஒரு கடமை வீரர் .சின்னக் காமராசர்.

வசூல்ராஜாmbbs said...

wish you all the best Mr. sagayam...