படிமங்கள்












நினைவுச் சின்னம்
அழகாய் வர்ணத்தில் நிரப்பினாலும்
ஆண்டுகள் பலநூறு நகர்ந்தாலும்
ஆயிரமாயிரம் பேர் படம் பிடித்தாலும்கூட
ஆழ்ந்து நுகரும் போது அடிக்கிறது
வீழ்த்திய தலைகளில்
வழிந்த இரத்தக்கவிச்சை

@@@@@@@











குச்சி ஐஸ்
குளிர்ச்சியில் மறத்த நாக்கில்
வருடும் சேமியாவோடு
கூசும் பல்லை இறுகக்கடித்து
குழையும் நாக்கை சுழற்றி
இன்சுவை வழியும் புறங்கையில்
தேடுகிறேன் கரைந்த என்னை

@@@@@@@
 










பரிணாமம்
வசிப்பிடத்தை பறித்து
பசியாற்றிய பழமரத்தை தகர்த்து
வாகாய் ஒரு கொட்டில் அமைத்து
டீ, வடை, போண்டா என வருவோர்
பசியாற்றி வயிறு வளர்த்தான்
பறிகொடுத்தவனை பிச்சைக்காரனாக்கி
_____________________________________

37 comments:

vasu balaji said...

/ஆயிரமாயிரம் பேர் படம் பிடித்தாலும்கூடஆழ்ந்து நுகரும் போது அடிக்கிறதுவீழ்த்திய தலைகளில் வழிந்த இரத்தக்கவிச்சை/

பலே!
/குச்சி ஐஸ்குளிர்ச்சியில் மறத்த நாக்கில்வருடும் சேமியா/

கனவாச்சே..அவ்வ்வ்:((. ஆனாலும் ஊட்டில ஐஸ் ஓவர் சீனு.

/பறித்துபசியாற்றிய பழமரத்தை தகர்த்துவாகாய் ஒரு கொட்டில் அமைத்துடீ, வடை, போண்டா என வருவோர்பசியாற்றி வயிறு வளர்த்தான்பறிகொடுத்தவனை பிச்சைக்காரனாக்கி/

அந்த மேல இருக்கிற மந்தி இப்புடித்தான் திட்டிருக்கும்:)

Rekha raghavan said...

முத்தான மூன்று கவிதைகள். அனைத்து கவிதைகளும் தூள்.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

dheva said...

////குச்சி ஐஸ்
குளிர்ச்சியில் மறத்த நாக்கில்
வருடும் சேமியாவோடு
கூசும் பல்லை இறுகக்கடித்து
குலையும் நாக்கை சுழற்றி
இன்சுவை வழியும் புறங்கையில்
தேடுகிறேன் கரைந்த என்னை
///

நிஜமாவே கரைஞ்சு போய்டேன்...கதிர்....பழைய ஞாபகங்கள் எல்லாம் வருது...சூப்பர்!

பிரபாகர் said...

நினவுச்சின்னத்த (சினிமா இல்ல சாமி! நீங்க சொல்றதத்தான்) எத்தனை தடவ பாத்திருக்கோம்! எத்தனை பேர சாகடிச்சிருக்குமோன்னு யோசிச்சிருக்கோம்... இந்த மாதிரி நச்-னு எழுத தோணலையே!

ஐஸ சாப்பிட்டிருக்கோம் இந்த மாதிரி கரைஞ்சி போறத யோசிக்கலையே?

அருமை கதிர்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகான கவிதைகள்..

புகைப்படத்திற்கு கவிதைகள் அருமை..

அதுவும் அந்த குச்சி ஐசிற்கு..எழுதியுள்ள கவிதை கலக்கல்..

Chitra said...

குச்சி ஐஸ்
குளிர்ச்சியில் மறத்த நாக்கில்
வருடும் சேமியாவோடு
கூசும் பல்லை இறுகக்கடித்து
குலையும் நாக்கை சுழற்றி
இன்சுவை வழியும் புறங்கையில்
தேடுகிறேன் கரைந்த என்னை

.......I MISS IT TO THE CORE!
Even now, whenever I visit India, I hunt for it to have at least couple of them to enjoy every BIT of it - orange flavor is the best! Thank you for this wonderful kavithai. :-)

சீமான்கனி said...

//குச்சி ஐஸ்
குளிர்ச்சியில் மறத்த நாக்கில்
வருடும் சேமியாவோடு
கூசும் பல்லை இறுகக்கடித்து
குலையும் நாக்கை சுழற்றி
இன்சுவை வழியும் புறங்கையில்
தேடுகிறேன் கரைந்த என்னை//

அழகிய ரசனை வரிகள்....ரசித்தேன்...அருமை அண்ணே...

பழமைபேசி said...

குலையும் ???

kuzaiyum

கலகலப்ரியா said...

ஐ மீன்.. @குலையும்@

கலகலப்ரியா said...

எல்லாம் நல்லாருக்கு கதிர்... அது என்ன குலைத்த?

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

முதலாவது முதலாவது தான் .
நல்லாயிருக்குங்க .

தாராபுரத்தான் said...

ஐ......சக்கை.

AkashSankar said...

புகைப்படத்தோடு...கவிதையும்...ஓங்கி அடிக்கிறது மனதில்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை கதிர்

Madumitha said...

சில விஷயங்கள்
எத்தனை வருஷம்
ஆனாலும் மறக்காது.

குச்சி ஐஸ்
பழைய ஞாபகங்களைக்
கிளறியது.

Paleo God said...

பார்த்த ஒடனே படம் புடிச்சி, அப்படியே எழுதிட்டீங்களா??

அருமை. :))

--
//அந்த மேல இருக்கிற மந்தி இப்புடித்தான் திட்டிருக்கும்:)//

ஹா ஹா,,:)) கண்டிப்பா.:)

சசிகுமார் said...

நல்ல கவிதை நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

அய்யோ..... சொக்கா!

வாயிலயும் வயித்தலயும் அடிச்சிக்கிர மாதிரியாகி போச்சே!

நான் என்ன பண்ணுவேன், என்ன பண்ணுவேன்.

பாக்கறது , திங்கறது எல்லாத்தையும் கவிதையாக்கத் தெரியிலயே . நான் என்னா பண்ணுவன்.

சத்ரியன் said...

கதிர்,

மொதக்கவித மனச என்னென்னமோ செய்யுதப்பா!

அன்புடன் அருணா said...

மனதில் தங்கிய படிமங்கள்.

Baiju said...

ஊட்டி பயணத்தில் பூத்த கவிதைகள் அனைத்தும் அற்புதம்

Unknown said...

ஊட்டிக்கு போயிருந்திங்களா.. :-))

Romeoboy said...

கோடை சீசன் எப்படி இருக்கு அண்ணே ஊட்டில

ராமலக்ஷ்மி said...

மூன்றும் அருமை.

க.பாலாசி said...

//அடிக்கிறதுவீழ்த்திய தலைகளில் வழிந்த இரத்தக்கவிச்சை//

அருங்காட்சியகத்தில் இந்த கருவிகளைப் பார்க்கும்பொழுது இந்த வாடை பெருமூச்சுக்கு விலைதரும்...

//நாக்கை சுழற்றிஇன்சுவை வழியும் புறங்கையில்தேடுகிறேன் கரைந்த என்னை//

அடடா என்னே அருமையான சொல்லாடல்...

//பறிகொடுத்தவனை பிச்சைக்காரனாக்கி_//

அதுசரி... அப்டி அதுக்கு சொரணவந்து பிராண்டாம இருக்கத்தான் அப்பப்ப வாழப்பழத்த தூக்கிப்போடுறோமே....

பிரேமா மகள் said...

ஐ.. அங்கிள் கவிதை.... கவிதை.. கவிதை...

முதல் கவிதையில் போரின் உக்கிரத்தையும் வக்கிரத்தையும் நிஜமான வலிகளோடு சொல்லியிருக்கிறீர்கள்.... பின்னறீங்க...

ரோகிணிசிவா said...

ooty visit a ???
m m mm , yen thee pookalaiyaa ????

சிநேகிதன் அக்பர் said...

நல்லாயிருக்கு சார்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வானம்பாடிகள்
//ஆனாலும் ஊட்டில ஐஸ் ஓவர் சீனு.//

நெசமாலுமே... கோத்தகிரியிலருந்து மேட்டுப்பாளையம் வரும் வழியில


நன்றி @@ KALYANARAMAN RAGHAVAN சிகாகோவிலிருந்து கலக்குங்க

நன்றி @@ dheva
(நிஜமாவே கரைஞ்சு போய்டேன்)
மகிழ்ச்சி

நன்றி @@ பிரபாகர்
பிரவு... என்ன போங்க..
பத்துநிமிசத்துல பல இடுகை எழுதற நீங்களா!!

நன்றி @@ செந்தில்வேலன்
//புகைப்படத்திற்கு கவிதைகள் அருமை..//
சொல்லிட்டனா!!!??

நன்றி @@ Chitra
ரொம்ப ரசிக்கறீங்க

நன்றி @@ seemangani
நன்றி @@ பழமைபேசி

நன்றி @@ கலகலப்ரியா

நன்றி @@ நண்டு@நொரண்டு -ஈரோடு

நன்றி @@ தாராபுரத்தான்

நன்றி @@ அ...ஆ... புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு..

நன்றி @@ T.V.ராதாகிருஷ்ணன்

நன்றி @@ Madumitha

நன்றி @@ 【♫ஷங்கர்..】
//பார்த்த ஒடனே படம் புடிச்சி, அப்படியே எழுதிட்டீங்களா??//

ஆமாங்க


நன்றி @@ சசிகுமார்

நன்றி @@ ’மனவிழி’சத்ரியன்
நீங்க எதுக்கும் பிரபாகிட்ட கொஞ்சம் பயிற்சி எடுங்க

நன்றி @@ அன்புடன் அருணா

நன்றி @@ Baiju

நன்றி @@ திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்).


நன்றி @@ ~~Romeo~~

நன்றி @@ ராமலக்ஷ்மி

நன்றி @@ க.பாலாசி
//அதுசரி... அப்டி அதுக்கு சொரணவந்து பிராண்டாம இருக்கத்தான் அப்பப்ப வாழப்பழத்த தூக்கிப்போடுறோமே....//

போட்டோக்கு வேற போஸ் குடுக்காமா ஆட்டம் காட்டிடுச்சு

நன்றி @@ பிரேமா மகள்

நன்றி @@ ரோகிணிசிவா
ஒன்னும் பூக்கல

நன்றி @@ அக்பர்

அம்பிகா said...

//ஆழ்ந்து நுகரும் போது அடிக்கிறதுவீழ்த்திய தலைகளில் வழிந்த இரத்தக்கவிச்சை//

//குச்சி ஐஸ்குளிர்ச்சியில் மரத்த நாக்கில்வருடும் சேமியா//

அருமையா இருக்கு.

கே. பி. ஜனா... said...

எந்தக் கவிதையை சூப்பர்னு சொல்றது சார் அப்படி மூன்றுமே இருந்தால்?

"உழவன்" "Uzhavan" said...

குச்சி ஐஸ் சூப்பர்

Venkat M said...

அனைத்து கவிதைகளுமே அருமை.

BTW, those still are from your new digicam?

காமராஜ் said...

//கூசும் பல்லை இறுகக்கடித்து
குலையும் நாக்கை சுழற்றி
இன்சுவை வழியும் புறங்கையில்
தேடுகிறேன் கரைந்த என்னை//

நானும் வார்த்தைகளற்று இந்தக்கவிதையோடு கரைகிறேன்,அழகு கதிர் அழகு.

Thenammai Lakshmanan said...

மூன்றுமே சுழற்றி அடிக்குதுக் கதிர்...அட ஒரு ஐஸ்க்ரீம் கூட...

prince said...

/*நிஜமாய் வாழ கனவைத் தின்னு!*/
வயறு நிறைந்ததோ இல்லையோ என்மனசு நிறைஞ்சு போச்சி

ஈரோடு கதிர் said...

நன்றி @@ அம்பிகா

நன்றி @@ K.B.JANARTHANAN

நன்றி @@ "உழவன்"

நன்றி @@ Venkat M
//BTW, those still are from your new digicam?//

yes.. thanks

நன்றி @@ காமராஜ்

நன்றி @@ thenammailakshmanan

நன்றி @@ ப்ரின்ஸ்