சாபம்

பழுப்பேறிய
வெள்ளை வேட்டி
சாயம் போன
கசங்கிய சட்டை
தடித்த முண்டாசு
நரைத்த முள்தாடி
பளபளக்கும்
நகரத்து சந்திப்புகளில்
தட்டுத் தடுமாறும்
கிராமத்தானை
”சாவு கிராக்கி”
என கடக்கும்
நகத்தில் அழுக்குச்சேரா
நகரத்தானின்
அடுத்த வேளை
சோற்றிலாவது
அந்தச் சாவுகிராக்கி
சிந்திய வியர்வையின்
உப்பு கொஞ்சம்
கரிக்கட்டும்!


_______________________

46 comments:

அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு.. said...

நகரம் எனும் நரகத்திலே... மனிதாபிமானம்... செய்யுங்கள்... எதிர்பார்க்காதீர்...

dheva said...

சோற்று...உப்பு கரிக்கும் போது எல்லம் உங்கள் கவிதைதான் எல்லாருக்கும் ஞாபகம் வரப்போகிறது. அருமை கதிர்.

dheva said...

சோற்று...உப்பு கரிக்கும் போது எல்லம் உங்கள் கவிதைதான் எல்லாருக்கும் ஞாபகம் வரப்போகிறது. அருமை கதிர்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வார்த்தைகளிலே அறையப்பட்டுவிட்டான் அவன் .
மிகவும் அருமை .

ரோகிணிசிவா said...

//நகரத்தானின்
அடுத்த வேளை
சோற்றிலாவது
அந்தச் சாவுகிராக்கி
சிந்திய வியர்வையின்
உப்பு கொஞ்சம்
கரிக்கட்டும்!//
நறுக்குன்னு சொல்லிருக்கீங்க
கதிர் சூப்பர் ,
இனிமேல் கிராமத்தானை பார்க்கும் பொழுது என் பார்வை மாறும்

அகல்விளக்கு said...

நெற்றிப்பொட்டில் அடித்தது உங்கள் வார்த்தைகள்...

பிரபாகர் said...

ஆம் கதிர்... சாவுகிராக்கி சொல்லப்பட்டவர் அல்ல, சொன்னவன் தான்.

பிரபாகர்.

வானம்பாடிகள் said...

பழுப்பு நிறக்
கால்சட்டை
சாயம் போன
கசங்கிய சட்டை
கலைந்த தலைமுடி
நரைத்த முள்தாடி
பளபளக்கும்
விழிப்பார்வையில்
சரி வேணாம் விடுங்க
கவிதை சூப்பர் கதிர்:)

க‌ரிச‌ல்கார‌ன் said...

ச‌வுக்க‌டி

க.பாலாசி said...

நச்சென்று........

சத்ரியன் said...

அண்ணா,

உப்பு ஒறைக்குமா?

ராஜன் said...

சூப்பர் ! டூ இட் ! டூ இட் !

VELU.G said...

//அந்தச் சாவுகிராக்கி
சிந்திய வியர்வையின்
உப்பு கொஞ்சம்
கரிக்கட்டும்!
//

நன்றாகவே கரிக்க வேண்டும்

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு கதிர் அண்ணா.

பிரேமா மகள் said...

பின்னிருக்கீங்க அங்கிள்... கிராமத்தான்னாவே, ஒண்ணும் தெரியாதவங்ககிற எண்ணம் இருக்கு... சிட்டி‍ல பாதி பேருக்கு, விண்வெளியில் இருந்து குதிச்ச நினைப்புதான்... என்ன, எத்தனை தடவை பட்டாலும் திருந்த மாட்டாங்க..

கலகலப்ரியா said...

நல்லாருக்கு கதிர்...

அக்பர் said...

அருமை சார்.

அன்புடன் அருணா said...

அருமை!

ராஜ்குமார் said...

திருந்த மாட்டானூக. சொன்னவந்தான் சாவூ கிராக்கி.

தாமோதர் சந்துரு said...

நல்ல கவிதை

r.v.saravanan kudandhai said...

அருமை கதிர்

நசரேயன் said...

ம்ம்ம் ... பாலா அண்ணே கொஞ்சம் வந்து என்னனு கேளுங்க

ஈரோடு கதிர் said...

நன்றி

@@ அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு..

@@ dheva

@@ பனித்துளி சங்கர்

@@ ரோகிணிசிவா
@@ அகல்விளக்கு

@@ பிரபாகர்

@@ வானம்பாடிகள்
(யாருக்குங்கங்ணா இந்த கவிதை)

@@ க‌ரிச‌ல்கார‌ன்

@@ க.பாலாசி

@@ சத்ரியன்

@@ ராஜன்
(டன்)

@@ VELU.G

@@ செ.சரவணக்குமார்

@@ பிரேமா மகள்

@@ கலகலப்ரியா

@@ அக்பர்

@@ தாமோதர் சந்துரு

@@ ராஜ்குமார்

@@ r.v.saravanan kudandhai

@@ நசரேயன்
(எனி உள் குத்து!!!)

~~Romeo~~ said...

நேற்றுதான் எனது அலுவலக நண்பனிடம் விவசாயம் பற்றி பேசிக்கொண்டு இருந்தேன். அருமையான சவுக்கடி தலைவரே ..

Sangkavi said...

சரியான சாட்டையடி........

ராஜ நடராஜன் said...

மீண்டும் எழுந்து நின்னீட்டீங்க போல இருக்குது.வாழ்த்துக்கள்.

இராமசாமி கண்ணண் said...

நன்று.

வால்பையன் said...

ரொம்ப உப்பு கரிச்சா பொண்டாட்டிக்கும் அதே திட்டு விழும்!
அவசர உலகில் அப்பனையே சாவுகிராக்கின்னு தான் திட்டுறானுங்க!

ச.செந்தில்வேலன் said...

நல்ல பதிவு கதிர்.

seemangani said...

என்ன சொல்ல்றதுனே தெரியல அண்ணே...அற்புதமா இருக்கு...கவிதை..

ஆதிமூலகிருஷ்ணன் said...

கவிதை ரசம் கொஞ்சம் கம்மியாக இருப்பினும் நல்ல கருத்து.

Chitra said...

நச்.

ஹேமா said...

உறைக்கிற அளவுக்கு உணர்வு வேணுமே கதிர் !

Madumitha said...

ஓடும் வேகத்தில்
கரிப்பை உணரும்
சுரணையையும்
இழந்தாச்சு
நகரவாசிகள்.

யாசவி said...

தல

நல்லா வந்திருக்கு :)

ஈரோடு கதிர் said...

நன்றி

@@ ~~Romeo~~

@@ Sangkavi

@@ ராஜ நடராஜன்
(ஆஹா)


@@ இராமசாமி கண்ணண்

@@ வால்பையன்

@@ ச.செந்தில்வேலன்

@@ seemangani

@@ ஆதிமூலகிருஷ்ணன்

@@ Chitra

@@ ஹேமா

@@ Madumitha

@@ யாசவி

தாராபுரத்தான் said...

சாவுகிராக்கிகள்...

சே.குமார் said...

மிகவும் அருமை.

K.B.JANARTHANAN said...

வாழ்வைக் கிராக்கியாக்கி வைத்திருப்பவர்களுக்கு நல்ல பாடம்! கவிதை அருமை!

இரசிகை said...

saaram!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

அன்பரசன் said...

பிரமாதம் ஸார்

ஈரோடு கதிர் said...

நன்றி
@@ தாராபுரத்தான்

@@ சே.குமார்

@@ K.B.JANARTHANAN

@@ இரசிகை

@@ T.V.ராதாகிருஷ்ணன்

@@ அன்பரசன்

thenammailakshmanan said...

நாங்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது என்ற கவிதை ஞாபகம் வந்தது கதிர்

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

கவிதை அருமை - சிந்தனை நன்று - எளிமையான இயல்பான சொற்கள் - வாழ்க

இருப்பினும் கிராமம் இல்லையேல் நகரம் இல்லை என்பது நூற்றுக்கு நூறு சரியான வாதமல்ல - கிராமத்தில் சேற்றில் கை வைத்தால் தான் நகரத்தில் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பழங்கதை - கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வருகின்றன - சாவுகிராக்கி எனப்ப்ட்டவன் - கிராமத்தான் - நகரத்துக்கு வர ஆரம்பித்து விட்டான். இயற்கை வளம் அழிக்கப்படுகிறது - வயல்காடுகள் வாழ்விடங்களாக மாறுகின்றன - இயற்கை பொய்க்கிறது - நீர்வளம் - எரிசக்தி - மின்சாரம் அனைத்தும் கிராமப்புறங்களில் தேவையான அளவு கிடைப்பதில்லை - மெல்ல மெல்ல கிராமத்தான் நகரம் நோக்கி நக்ருகிறான். இதுதான் உண்மை நிலை.

எனவே இக் கவிதை சொல்லும் செய்தியினை ஏற்றுக் கொள்வது சற்றே கடினம் தான்.

படிப்பதற்கும் இரசிப்பதற்கும் சிறந்த கவிதை.

நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா

ஈரோடு கதிர் said...

நன்றி

@@ thenammailakshmanan

@@ cheena (சீனா)