நறுக்குன்னு நாலு வார்த்த

ரூ.100 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும்!: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்பு

அதுதான் மணல அள்ளியே, அங்கங்கே அணை தோண்டியாச்சே, அப்புறம் எதுக்குங்க புதுசா!?

                                                 ^^^^^^^^^^^^ 

பிரபாகரன் தாயாரை திருப்பி அனுப்பியது ஏன்?: பார்லி.யில் தி.மு.க. கேள்வி

அட... இந்த மெத்தட் நல்லாயிருக்கே!

                                                 ^^^^^^^^^^^^ 

'பார்வதி அம்மையார்'-அதிமுக மெளனம் ஏன்?: வீரமணி

ஆமா.... நீங்க மவுண்ட் ரோடுல நின்னு மறியல் பண்ணிணீங்களோ!!?

                                                 ^^^^^^^^^^^^ 

பார்வதி அம்மாள்'-விவாதத்தை தவிர்த்த அதிமுக!

அட.. அடுத்த எலக்‌ஷன் வர்றப்போ பேசிக்கிலாம்னு, அந்தம்மா வழக்கம் போல லீவு உட்டுறுப்பாங்க....

                                                 ^^^^^^^^^^^^

பிரபாகரனின் தாயார் விசயத்தில் - கருணாநிதி சொல்வது நம்பக் கூடியதாக இல்லை : விஜயகாந்த்

கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்...............டன் நாலு நாளா, பேரரசு கூட சூட்டிங் போயிட்டீங்களா!!!??

                                                 ^^^^^^^^^^^^ 

பிரபாகரன் தாயாரின் சிகிச்சைக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதத் தயார் : கருணாநிதி அறிவிப்பு

அய்யா... புறா எதுனாச்சும் வேணும்ங்ளா...

                                                 ^^^^^^^^^^^^

சேலம் மாநகராட்சியில் கிடா வெட்டி பரிகார பூஜை!

கிடாவுக்கு கெட்ட நேரம் போல.... வாழ்க நாத்திகம்

                                                 ^^^^^^^^^^^^ 

ஐ.பி.எல்.: குற்றவாளிகள் தப்ப முடியாது!: அரசு உறுதி

அட... பாத்து வெட்ட வேண்டியத வெட்டுங்க... அதுதான் டைம் குடுத்துருக்காங்கள்ள

                                                 ^^^^^^^^^^^^ 

தோண்ட தோண்ட ஊழல்: வெளுக்கிறது ஐ.பி.எல்., முகம்

புல்டோசர் வச்சு தோண்டி, 501 சோப்பு போட்டு வெளுக்கறாங்களோ என்னவோ!!??

                                                 ^^^^^^^^^^^^ 

சட்டசபையில் பாத்ரூமில் சிக்கிக்கொண்டேன் - அதிமுக எம்எல்ஏ துரைக்கண்ணு

இது ஆளுங்கட்சியின் சதின்னு சொல்லி ஒரு போராட்டத்த நடத்துங்க

                                                 ^^^^^^^^^^^^ 

செம்மொழி மாநாட்டுப் பாடல் வெளியிடப்பட்டு, தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் இந்தப் பாடலை ஒளி, ஒலிபரப்ப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அட.... பாட்டு போடூவீங்க....... சரி ஒலி, ஒளி பரப்ப கரண்ட் வுடுவீங்களா!!??

                                                 ^^^^^^^^^^^^

40 comments:

ஈரோடு கதிர் said...

நீண்ட நாட்களா ’நறுக்’ எழுதாத வானம்பாடிகளை எச்சரிக்கவே இந்த ’நறுக்’

பொறுப்பி : தலைப்பு திருட்டு - பாமரன் பக்கங்கள்

வானம்பாடிகள் said...

/அதுதான் மணல அள்ளியே, அங்கங்கே அணை தோண்டியாச்சே, அப்புறம் எதுக்குங்க புதுசா!?/

அட கட்டிங் போட்டு கட்சி தாவாம இருக்க சொல்ற அணைங்க.

/கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்...............டன் நாலு நாளா, பேரரசு கூட சூட்டிங் போயிட்டீங்களா!!!??/

தெளிய வாணாமா?

/கிடாவுக்கு கெட்ட நேரம் போ.... வாழ்க நாத்திகம் /

அட காசுக்கு பதில் ஆடா வாங்க்யிருப்பாங்க

/அட... பாத்து வெட்ட வேண்டியத வெட்டுங்க... அதுதான் டைம் குடுத்துருக்காங்கள்ள/

cattle நின்னு கொன்றுச்சே:))

/பாத்ரூமில் சிக்கிக்கொண்டேன்-அதிமுக எம்எல்ஏ துரைக்கண்ணு/

இதுக்குதான் சாமியாரா இருக்கணும். பெட்ரூம்ல சிக்கினதுக்கே கம்னு இருக்கான். இவரு ஏன் கூவுறாரு.

/அட.... பாட்டு போடூவீங்க....... சரி ஒலி, ஒளி பரப்ப கரண்ட் வுடுவீங்களா!!??/

அய்யகோ! நாங்கள் செய்த பாவமென்ன. கூடவே மானாட..கோஷ்டியும் அனுப்புனா செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மொழி நல்லாஆஆஆஆ பரப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்புமில்ல

dheva said...

என்னடா.. கதிர் சார் ' நறுக்குன்னு நாலு வார்த்தை எழுதுறாரேனு கொஞ்சம் குழப்பமாத்தன் படிச்சேன்...முடிக்கும் போதுதான் தெரிஞ்சுது... நறுக்குன்னு நாலு வார்த்தை ... வானம்பாடிகள் சாருக்கு சொல்லறதுக்குதான் எழுதி இருக்கார்னு....

கதிர் சார்...பின்னூட்டத்திலேயே கலக்குறாரு பாருங்க.... உங்க பிளாக்க.....வெலக்கி வாங்கிரப் போராறு....உஷார்....!

வாழ்த்துக்கள்...இருவருக்கும்!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//இதுக்குதான் சாமியாரா இருக்கணும். பெட்ரூம்ல சிக்கினதுக்கே கம்னு இருக்கான். இவரு ஏன் கூவுறாரு.//

நைசா, நறுக்கிட்டாருங்கோவ்..:))

ராமலக்ஷ்மி said...

எல்லா ‘நறுக்’கும் சுருக் சுருக்.

அஹமது இர்ஷாத் said...

இவ்வளவு நச்" பதிலை சொல்லிப்புட்டு ஒட்டுப் போட பணம் வாங்கமாட்டீங்கள்'ல.....

ஹி ஹி ஹி...

Anonymous said...

நல்லா இருக்குங்க எல்லாம் நறுக்குன்ன்னு

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////சட்டசபையில் பாத்ரூமில் சிக்கிக்கொண்டேன் - அதிமுக எம்எல்ஏ துரைக்கண்ணு//////////


அட அந்த நாதாரி பயபுள்ள அதுக்குள்ள போய் எதுக்குயா கால கொடுத்துச்சு !

ஈரோடு கோடீஸ் said...

அசத்தல் கதிர், வயிறு எரியுது நாட்டு நடப்பப் பார்த்து. பேசாம இனிமே பேப்பர் பார்க்காம இருந்திடலாமானு இருக்கு.

சங்கர் said...

ஊடகங்கள் ஊனமாய் போனதாலே...
இது ஒன்றே வடிகால்....

VELU.G said...

நல்லா நறுக்கிட்டீங்க போங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))

ராஜ நடராஜன் said...

வானம்பாடிகள் கிட்ட காப்புரிமை வாங்கினீங்களான்னு கேட்க வந்தேன்.நீங்களே எச்சரிக்கை விட்டதற்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//பிரபாகரன் தாயாரின் சிகிச்சைக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதத் தயார் : கருணாநிதி அறிவிப்பு

அய்யா... புறா எதுனாச்சும் வேணும்ங்ளா...//

கடித்தோட புறா சீக்கிரம் போகுமில்ல?

அகல்விளக்கு said...

இடம் மாறி வந்துட்டேனா....

:-)

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

அகல்விளக்கு said...

நறுக்குக்கே நறுக் போடுவாருல்ல நம்ம ஆளு.....

:)

ராஜ நடராஜன் said...

//அய்யகோ! நாங்கள் செய்த பாவமென்ன. கூடவே மானாட..கோஷ்டியும் அனுப்புனா செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மொழி நல்லாஆஆஆஆ பரப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்புமில்ல//

செம்மொழி மானாடு ஸ்பெசலே இதுதானா?

ஆமா!இங்க ஒருத்தரு உங்க கோழிய திருடி வித்துகிட்டு இருக்கிறாரு.நீங்க அவ்ர்கிட்டேயே கோழி விலை என்னன்னு கேட்டுகிட்டிருக்கீங்க:)

க.பாலாசி said...

//ரூ.100 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும்!: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்பு
அதுதான் மணல அள்ளியே, அங்கங்கே அணை தோண்டியாச்சே, அப்புறம் எதுக்குங்க புதுசா!?//

ம்ம்.... அள்ளின மணலுக்கு வீடு கட்டவேண்டாமா?....

//பிரபாகரன் தாயாரை திருப்பி அனுப்பியது ஏன்?: பார்லி.யில் தி.மு.க. கேள்வி
அட... இந்த மெத்தட் நல்லாயிருக்கே!//

ம்ம்... அம்மண தேசத்துல கோவணம் கட்டினவல்லாம் பைத்தியக்காரனாம்... அந்த கதையால்ல இருக்கு....

//'பார்வதி அம்மையார்'-அதிமுக மெளனம் ஏன்?: வீரமணி
ஆமா.... நீங்க மவுண்ட் ரோடுல நின்னு மறியல் பண்ணிணீங்களோ!!?//

அப்டியே நின்னுட்டாலும்......


//பார்வதி அம்மாள்'-விவாதத்தை தவிர்த்த அதிமுக!
அட.. அடுத்த எலக்‌ஷன் வர்றப்போ பேசிக்கிலாம்னு, அந்தம்மா வழக்கம் போல லீவு உட்டுறுப்பாங்க....//

க்கும்.... இவங்க கிழிக்கிற கிழிதான் உலகம் அறிஞ்சதாச்சே... பெறவு என்ன....

//பிரபாகரனின் தாயார் விசயத்தில் - கருணாநிதி சொல்வது நம்பக் கூடியதாக இல்லை : விஜயகாந்த்
கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்...............டன் நாலு நாளா, பேரரசு கூட சூட்டிங் போயிட்டீங்களா!!!??//

க்க்கும்....ஊத்திகொடுத்த அம்மாவுக்குதான தெரியும்...


//பிரபாகரன் தாயாரின் சிகிச்சைக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதத் தயார் : கருணாநிதி அறிவிப்பு
அய்யா... புறா எதுனாச்சும் வேணும்ங்ளா...//

இதுவரைக்கும் எழுதுன கடுதாசில்லாம் அன்னையோட கொசுவத்துல தொங்கிகிட்டு இருக்காம்ல... அதுக்கு என்ன சொல்றீங்க...??

Yoga said...

பாத்து! அப்புறம் வயசானவங்களுக்கு புறா சூப்பு நல்லதுன்னு புறாவ....................................!

கலகலப்ரியா said...

ஆகா சூப்பரப்பு.... தமிழிஷ் காணோம்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-))

பிரபாகர் said...

அவரு ஒளக சினிமா! இவரு நாலு வார்த்த! என்ன நடக்குது இங்க! ரெண்டுமே அருமை. இந்த நறுக் அருமையா இருந்தாலும், அய்யாவோடது சீனி மிளகாய கடிச்ச காரம் இருக்கும், அது இங்க மிஸ்ஸிங்....

பிரபாகர்...

r.v.saravanan kudandhai said...

'பார்வதி அம்மையார்'-அதிமுக மெளனம் ஏன்?: வீரமணி

ஆமா.... நீங்க மவுண்ட் ரோடுல நின்னு மறியல் பண்ணிணீங்களோ

ha... ha...

Anonymous said...

உலகத் தமிழ்ச்செம்மொழிமகாநாட்டையும் ஒன்பதாவது தமிழ் இணையமகாநாட்டினையும் புறக்கணிப்போம்
http://tinyurl.com/y853e5r
http://tinyurl.com/y3qreyn

காமராஜ் said...

நல்ல நக்கல்.தூள் கதிர்.

சத்ரியன் said...

பிரபாகரன் தாயாரின் சிகிச்சைக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதத் தயார் : கருணாநிதி அறிவிப்பு

அய்யா... புறா எதுனாச்சும் வேணும்ங்களா...?//

கதிர்,

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.

இந்தாளு எதுக்கு கடிதம் அனுப்பறானாம்? (இப்பல்லாம் கடிதம் பேப்பர்லதானே எழுதி அனுப்பறானுக!)

மத்திய அரசாங்கம் நடத்துற
அந்தம்மா வூட்டு டாய்லெட்ல தண்ணி வரலியாமா?

☀நான் ஆதவன்☀ said...

//
பிரபாகரன் தாயாரை திருப்பி அனுப்பியது ஏன்?: பார்லி.யில் தி.மு.க. கேள்வி//

பிரபாகரன் தாயாரை திருப்பி அனுப்பியது ஏன்?: பார்லி.யில் தி.மு.கவிடம் திருப்பி அதே கேள்விய கேட்ட மத்திய அரசு!

கும்க்கி said...

:))

நிஜமா நல்லவன் said...

:)))))))))))

அன்புடன் அருணா said...

நச்!

நசரேயன் said...

//நீண்ட நாட்களா ’நறுக்’ எழுதாத வானம்பாடிகளை எச்சரிக்கவே இந்த ’நறுக்’//

தூங்கி கிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பிடீங்க

இராமசாமி கண்ணண் said...

ஆகா. அவரோட ஒளக திரைப்பட விமர்சனம் இதுநாலதானா ?

செ.சரவணக்குமார் said...

அசத்தல் கதிர் அண்ணா.

வானம்பாடிகள் said...

275kku வாழ்த்துகள்:)

முகிலன் said...

நறுக், நறுக்குன்னு இருக்கு...

அடுத்ததா நான் கொங்குத் தமிழ்ல ஒரு பழமொழிப் பதிவு போடலாம்னு இருக்கேன்.. இல்லைன்னா ஒரு கவுஜ..

சூஸ் தி பெஸ்ட் ஆன்ஸர்..

தீபக் வாசுதேவன் said...

>>அணை தோண்டியாச்சே
தண்ணீரே இல்ல. அணை எதுக்கு.

>>அட... இந்த மெத்தட் நல்லாயிருக்கே!
"குழந்தையை கிள்ளி விட்டு விட்டு தொட்டிலையும் ஆட்டும் கதை.". இது குறித்து இன்னொரு நகைச்சுவை ஒன்றினை சில வாரம் முன் எனது பதிவில் போட்டுள்ளேன்: http://thamizhththendral.blogspot.com/2010/04/blog-post_5703.html

>>அய்யா... புறா எதுனாச்சும் வேணும்ங்ளா...
BSNL strike. telephone கூட work பண்ணல. :) :)

தீபக் வாசுதேவன் said...

'பார்வதி அம்மாள்' நிகழ்ச்சிக்கு ஆதரவாக; திருப்பி அனுப்பிய அரசுக்கு கண்டனம் தெரிவுக்கும் எனது பதிவு:

http://thamizhththendral.blogspot.com/2010/04/blog-post_1587.html

Chitra said...

நறுக் நறுக்னு நறுக்கிட்டீங்க.....

shortfilmindia.com said...

:))))

கேபிள் சங்கர்

இரசிகை said...

:))