ஒரு தீ பூக்குதே


கதவோரம் வீசிய செய்தித்தாளாய்
தூக்கம் வடிந்து பூவாய் மலர்ந்து

வேலை இயந்திர வாசிப்பில் வதங்கி
பூசிய பவுடர் கலைந்து கரைந்து

பசி கொஞ்சும் களைத்த முகத்தோடு
உண்ட சோம்பலில் கொஞ்சம் அமிழ்ந்து

உதித்த வியர்வைத்துளி உறைந்து
சூடிய மல்லிகையாய் சற்றே வாடி

மெலிதாய் கண் சொருகி சோம்பலாய்
மதிய உணவுக்குப் பின் சோர்ந்து

மஞ்சள் வெயிலில் மினுமினுத்து
சன்னலோர பயணத்தில் தூங்கி வழிந்து

என்னதான் பொழுது புரட்டிப்போட்டும்
புரளாமல் தளராமல் பூத்துக்குலுங்கி
கடக்கையில் கசியும் காதலில்
எல்லாச் சோர்வையும் எரிக்க
புதிதாய் ஒரு தீ பூக்குதே!
_____________________________

66 comments:

பத்மா said...

அருமை அருமை
கடக்கையில் கசியும் காதல்
ஆஹா ஆஹா

vasu balaji said...

/என்னதான் பொழுது புரட்டிப்போட்டும்புரளாமல் தளராமல் பூத்துக்குலுங்கிகடக்கையில் கசியும் காதலில்எல்லாச் சோர்வையும் எரிக்கபுதிதாய் ஒரு தீ பூக்குதே!/

அட! இது வித்தியாசம்:). பாலாசி ஸ்டார்ட் த மீஜிக்:))

ரோகிணிசிவா said...

ம்ம் ம் ம் ,அப்புறம் !!!!

SOMETHING FISHY ,
கேட்க யாரும் இல்லையா ??????

க.பாலாசி said...

//வேலை இயந்திர வாசிப்பில் வதங்கிபூசிய பவுடர் கலைந்து கரைந்து//

அட இதுவேறையா... அழகுக்கு என்னாத்துக்குங்க அழகு....

//மஞ்சள் வெயிலில் மினுமினுத்து//

மஞ்சள் வெயிலு மினுமினுக்குதாம்ல... வெளியில வந்துபாருங்க.... தெரியும்... எப்டி மினுமினுக்குதுன்னு....

//கசியும் காதலில்//

என்னாது கஸ்ஸ்ஸ்ஸ்ஸியிதா!!!!!!!!!! எதுக்கும் கேள்விக்குறியும் போட்டுவைப்பபோம்.....??????????

க.பாலாசி said...

//அட! இது வித்தியாசம்:)//

எதச்சொல்றீங்க... 34 வயசுக்கு மேல வர்ரதையா???!!!!!!!

//பாலாசி ஸ்டார்ட் த மீஜிக்:))//

தோ.... அதுக்குத்தானே உட்காந்திருக்கேன்....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

எப்படி இப்படி எல்லாம்??

அருமையா வந்திருக்கு கதிர்.

////கசியும் காதலில்//

என்னாது கஸ்ஸ்ஸ்ஸ்ஸியிதா!!!!!!!!!! எதுக்கும் கேள்விக்குறியும் போட்டுவைப்பபோம்.....??????????
//

:))

க.பாலாசி said...

//ரோகிணிசிவா said...
கேட்க யாரும் இல்லையா ??????//

அக்கா... வந்திட்டேனுங்க... நான் என்னாத்த சொல்லுவேன்....ஆங்ங்ங்...ஆ...

நான் எங்கபோயி சொல்லுவேன்.... ஆங்ங்ங்ங்...அ......

தம்பி ஒருத்தன் இங்க தவம் இருக்கும்போது இவருக்கும் மட்டும் எப்டி கசியுதுன்ன தெரியலையேயேயேயேயேயேயே.......ஆங்ங்ங்ங்...அ.......

வால்பையன் said...

அங்கிள்லாம் இப்படி கவிதை எழுதினால், நானெல்லாம் எங்கே போறது!

க.பாலாசி said...

//வால்பையன் said...
அங்கிள்லாம் இப்படி கவிதை எழுதினால், நானெல்லாம் எங்கே போறது!//

பாருங்க... நீங்களே இந்தமாதிரி சொல்றீங்க... நானெல்லாம் என்னா பண்றது... அவ்வ்வ்வ்வ்வ்வ்......

vasu balaji said...

ஒரு ஸ்பிலிட் ஏசி போட்டா சரியாப் போய்ராது?

RRSLM said...

நகரத்து மண்ணில் வேர் கொஞ்சம் ஆளமா தான் பாயிகின்றது போல இருக்கு! சூப்பர்!

நாடோடி இலக்கியன் said...

//புரட்டிப்போட்டும்புரளாமல் தளராமல் பூத்துக்குலுங்கிகடக்கையில் கசியும் காதலில்எல்லாச் சோர்வையும் எரிக்கபுதிதாய் ஒரு தீ பூக்குதே!_//

நல்லாயிருக்கு கதிர்.


தலைப்பு அருமை.

ரோகிணிசிவா said...

//மாலைப் பேருந்தில் கவனித்தேன்
களைத்துத் துவண்டு தூங்கிச்சென்றதை...
nandri -தெரிந்தும் தெரியாதது...//

//மஞ்சள் வெயிலில் மினுமினுத்து
சன்னலோர பயணத்தில் தூங்கி வழிந்து
nandri தீ பூக்குதே//
கண்ணு பாலாசி ,
யாருப்பா,
என்ன இது,
பஸ் ஸ்டாண்ட்ல ரோந்து ஜாஸ்தி பண்ணு எல்லா பஸ் நிறுத்தத்தில பந்தோபஸ்து ரெடி பண்ணு ,
நமக்கு தெரியாம அப்படி ஒரு பிகரு எப்படி கடக்குதுன்னு பாக்கலாம் !!!!!

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
ஒரு ஸ்பிலிட் ஏசி போட்டா சரியாப் போய்ராது?//

அப்டி போட்டா சரியாப்போயிடுங்களா? இந்தமாதிரி பூக்குறதுல்லாம்....

vasu balaji said...

அட வாடினாத்தான பூக்குது. வாடாமலே வெச்சா?

கலகலப்ரியா said...

பூக்கட்டு பூக்கட்டு...

க.பாலாசி said...

//கண்ணு பாலாசி ,
யாருப்பா,
என்ன இது,
பஸ் ஸ்டாண்ட்ல ரோந்து ஜாஸ்தி பண்ணு எல்லா பஸ் நிறுத்தத்தில பந்தோபஸ்து ரெடி பண்ணு ,
நமக்கு தெரியாம அப்படி ஒரு பிகரு எப்படி கடக்குதுன்னு பாக்கலாம் !!!!!//

அதான் எனக்கு தெரியலைங்கா... நம்மக்கண்ணுல படாம அப்டி எந்த தீ இவருக்கு மட்டும் பூக்குதுன்னு......

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
அதான் எனக்கு தெரியலைங்கா... நம்மக்கண்ணுல படாம அப்டி எந்த தீ இவருக்கு மட்டும் பூக்குதுன்னு......//

இதுக்கு யூத்தா இருக்கனும்... யூத்துமாதிர் ஆக்ட் குடுக்கக் கூடாது

க.பாலாசி said...

//கலகலப்ரியா said...
பூக்கட்டு பூக்கட்டு...//

அதாருங்க...குறுக்கால... பூக்கச்சொல்லுறது....

vasu balaji said...

/பஸ் ஸ்டாண்ட்ல ரோந்து ஜாஸ்தி பண்ணு எல்லா பஸ் நிறுத்தத்தில பந்தோபஸ்து ரெடி பண்ணு ,/

ம்கும். போயும் போயுமிதுக்கு உன்ன சொன்னாங்க பாரு பாலாசி:)). நீ எப்பவுமே பஸ் ஸ்டேண்டே பழியாக் கெடக்குற ஆளு. உனக்கே பந்தோபஸ்து வேணூம்.:))

vasu balaji said...

/இதுக்கு யூத்தா இருக்கனும்... யூத்துமாதிர் ஆக்ட் குடுக்கக் கூடாது/

மேக்கப் போட்டு ஃபோட்டோ எடுத்துட்டு ரவுசப்பாரு

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
இதுக்கு யூத்தா இருக்கனும்... யூத்துமாதிர் ஆக்ட் குடுக்கக் கூடாது//

யூத்த்த்த்த்த்த்தாம்ம்ம்மா... நல்லா கேட்டுக்குங்க சாமீகளா....... அப்டியே புரொபைல்ல உள்ள போட்டோவையும் பாத்துக்குங்க....

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
யூத்த்த்த்த்த்த்தாம்ம்ம்மா... நல்லா கேட்டுக்குங்க சாமீகளா....... அப்டியே புரொபைல்ல உள்ள போட்டோவையும் பாத்துக்குங்க....//

யோவ்.... அது கேமரா மிஸ்டேக்யா!!!

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
மேக்கப் போட்டு ஃபோட்டோ எடுத்துட்டு ரவுசப்பாரு//

அதான் பாருங்களேன்... நம்மள மாதிரி ஒரிஜினல் யூத்த்த்த்துங்களுக்கு காலமே இல்லைங்க........

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
யோவ்.... அது கேமரா மிஸ்டேக்யா!!!//

அதெப்படிங்க... கேமரா டாப்புல மட்டும் மிஸ்டேக் பண்ணுது.....

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
அதெப்படிங்க... கேமரா டாப்புல மட்டும் மிஸ்டேக் பண்ணுது.....//

இதுக்கு என்னோடா அருமைத் தம்பி வானம்பாடி பதில் ஜொல்வார்... சாரி ... சொல்வார்

vasu balaji said...

அட எண்ணெய் கொஞ்சம் அதிகமா போச்சு தம்பி:))

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
ம்கும். போயும் போயுமிதுக்கு உன்ன சொன்னாங்க பாரு பாலாசி:)). நீ எப்பவுமே பஸ் ஸ்டேண்டே பழியாக் கெடக்குற ஆளு. உனக்கே பந்தோபஸ்து வேணூம்.:))//

அதுவொன்னுமில்ல.. நான் இந்த பஸ்லாம் கரெக்டான டைத்துக்குதான் வருதான்னு செக் பண்ணிகிட்டு இருந்தேன்... நம்மளாட்டமாதிரி மனுஷங்க செய்யுற ஒரு பொது சேவைதான்...

ஈரோடு கதிர் said...

// ரோகிணிசிவா said...
நாளைக்கு நீ அப்படீக்க டீச்சர்ஸ் காலனி போய் வத்தி பெட்டி வாங்கிட்டு வா, அப்புறம் தெரியும் தீ பூக்குதா ,
எரியுதா ன்னு ?????//

எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!

டாக்டர் ஈரோடு வந்துதானே ஆகனும்...

அப்ப இருக்கு உங்களுக்கு

vasu balaji said...

/இதுக்கு என்னோடா அருமைத் தம்பி வானம்பாடி பதில் ஜொல்வார்... சாரி ... சொல்வார்/

அட விடுங்கண்ணே. இருக்கிற முடிய கோந்து தடவி பரத்திவிட்டவன் யூத்தா

க.பாலாசி said...

//ரோகிணிசிவா said...
கண்ணு,
நாளைக்கு நீ அப்படீக்க டீச்சர்ஸ் காலனி போய் வத்தி பெட்டி வாங்கிட்டு வா ,
அப்புறம் தெரியும் தீ பூக்குதா ,
எரியுதா ன்னு ?????//

ம்ம்ம்... ஆமா அந்த டீச்சர் காலனி பக்கம் ஏதுனாச்சும் ஃபிகர்ஸ் இருக்குங்களா?? ஏன்னா எனக்கு ஃபிகர்ஸ்னாலே அலர்ஜி....அதான்...

ஈரோடு கதிர் said...

//dheva said...
தலைப்பே....கொல்லுது சார்....சூப்பர்.....எங்கே இருந்து உங்களுக்கு வார்த்தைகள் கிடைக்கிறது சார்...! வாழ்த்துக்கள்!//

பாருங்க... தேவா...
நீங்க ஒன்னுதான் சரியா புரிஞ்சிருக்கீங்க

இந்த பாலாசிக்கு எதுவுமே புரியல

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
அட எண்ணெய் கொஞ்சம் அதிகமா போச்சு தம்பி:))//

ஓ... அதுதான் அந்த மஞ்சள் வெயில் ‘மினுமினு’ப்புக்கு காரணமா?

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
ம்ம்ம்... ஆமா அந்த டீச்சர் காலனி பக்கம் ஏதுனாச்சும் ஃபிகர்ஸ் இருக்குங்களா?? //

ஹ்கும்... ஏற்கனவே.. நீ ஃபிகரோட அம்மா பத்தி கவிதை எழுதினவன்தானே!!!

vasu balaji said...

/ஏன்னா எனக்கு ஃபிகர்ஸ்னாலே அலர்ஜி....அதான்.../

யாரு? நிய்யி. என்ன அலர்ஜி ராசா?

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
அட விடுங்கண்ணே. இருக்கிற முடிய கோந்து தடவி பரத்திவிட்டவன் யூத்தா//

நீங்க சேம் சைடுலயே கோல் போடுறீங்களே... ரைட்டு.... இப்டித்தான் கவுக்கணும்..யூத்துன்னு சொல்றவங்கள......

Unknown said...

//ம்ம்ம்... ஆமா அந்த டீச்சர் காலனி பக்கம் ஏதுனாச்சும் ஃபிகர்ஸ் இருக்குங்களா?? ஏன்னா எனக்கு ஃபிகர்ஸ்னாலே அலர்ஜி....அதான்.//

இப்ப தெரியுது சாமீ, எதுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
ஹ்கும்... ஏற்கனவே.. நீ ஃபிகரோட அம்மா பத்தி கவிதை எழுதினவன்தானே!!!//

எதுவாயிருந்தா என்னங்க.... ஃபிகர்தான் முக்கியம்....

Unknown said...

//ஹ்கும்... ஏற்கனவே.. நீ ஃபிகரோட அம்மா பத்தி கவிதை எழுதினவன்தானே!!//

இது வேறயா?

Unknown said...

//எதுவாயிருந்தா என்னங்க.... ஃபிகர்தான் முக்கியம்..//

இங்க ஃபிகர்னு சொன்னது யாரை? கவிதைப் பொருளையா இல்லை அவங்க பொண்ணையா/

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
யாரு? நிய்யி. என்ன அலர்ஜி ராசா?//

அது ஒன்னுமில்லைங்க... ஒரு கண்ணு மட்டும் படபடன்னு அடிச்சிக்கும்... வாயிலேர்ந்து விசில் சத்தம் மட்டும் வரும்... கையெல்லாம் லவ் லெட்டரா எழுதும்... அந்த அலர்ஜிதான்...ஹி...ஹி......

க.பாலாசி said...

//முகிலன் said...
இப்ப தெரியுது சாமீ, எதுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு//

அதுயில்லைங்க... ‘அது’ ஒரு வெரிய..சாரி...பெரிய கதை.....

க.பாலாசி said...

//முகிலன் said...
இது வேறயா?//

என்னங்க பண்றது பழக்கதோஷத்துல அப்டி பண்ணிட்டேன்...

//Blogger முகிலன் said...
இங்க ஃபிகர்னு சொன்னது யாரை? கவிதைப் பொருளையா இல்லை அவங்க பொண்ணையா//

ஏதோவொன்னு... மொத்தத்துல ஃஃஃஃஃஃப்ப்ப்பிகர்........

Unknown said...

//ஏதோவொன்னு... மொத்தத்துல ஃஃஃஃஃஃப்ப்ப்பிகர்//

அம்மா இல்லாத பொண்ணாத்தான் தேடோணும் போலயே?

'பரிவை' சே.குமார் said...

அருமை..!
அருமை..!!

அருமையா வந்திருக்கு கதிர்.

Unknown said...

கதிரண்ணே,

கும்மி மும்முரத்துல ஓட்டுப் போடவும் உங்க கவிதையப் பத்தி சொல்லவும் உட்டுட்டேன்..

அருமையா இருக்கு கவித..

//கதவோரம் வீசிய செய்தித்தாளாய்தூக்கம் வடிந்து பூவாய் மலர்ந்து
வேலை இயந்திர வாசிப்பில் வதங்கிபூசிய பவுடர் கலைந்து கரைந்து//

நல்ல உவமை

சீமான்கனி said...

//என்னதான் பொழுது புரட்டிப்போட்டும்
புரளாமல் தளராமல் பூத்துக்குலுங்கி
கடக்கையில் கசியும் காதலில்
எல்லாச் சோர்வையும் எரிக்க
புதிதாய் ஒரு தீ பூக்குதே!//

புருவம் தூக்கி பூரித்து விட்டேன் அடடா...அழகான கவிவரி வாழ்த்துகள் அண்ணே...

Chitra said...

கசியும் மௌனம், காதல் பேசியதே......!!!

தாராபுரத்தான் said...

வெயிலுக்கு வேற என்னதான் செய்யுறது, ஐில் கவிதை.

புலவன் புலிகேசி said...

சூப்பர்ணே....

*இயற்கை ராஜி* said...

இது ஒண்ணும் எனக்கு சரியாப்பட‌லீங்கோவ்..... கேக்க ஆள் இல்லாத தைரியம்..ஹ்ம்ம்ம்ம்.. நடக்கட்டும்..

*இயற்கை ராஜி* said...

பிஸி பிஸின்னு சொல்லிகிட்டு இந்த வேலைதான் பண்ணிட்டு இருக்கீங்களா....இதெல்லாம் என்னங்னா தீ........படிக்க வேண்டியவங்க படிச்சதுக்கப்புறம் புடிக்கும் பாருங்க தீ..அதுதான் ரியல் தீ....( இப்போவே அவங்களுக்கு சொல்லிடறேன்.. என்ன ஏதுன்னு கேளுங்கன்னு):-))

*இயற்கை ராஜி* said...

//மினுமினுத்துசன்னலோர பயணத்தில் தூங்கி வழிந்து//


பஸ்ஸ்டாப் பக்கதுல ஆபீஸ் வச்சிருக்கறது இதுக்குதானா....

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையா வந்திருக்கு

பிரபாகர் said...

கசியும் டயர்ட்ல படுத்து தூங்கி எழுந்து பாத்தா இடுகையில இவ்ளோ கமெண்ட்டுங்க கசிஞ்சிருக்கு! மிஸ் பண்ணிட்டேன்....

நல்லாருக்கு கதிர், கவிதையும் அத்தோட அத விமர்சிச்சி வந்த கருத்துக்களும்...

பிரபாகர்...

அகல்விளக்கு said...

அக்மார்க் கதிர் அண்ணா...

VELU.G said...

யப்பா சாமி நான் இந்த விளையாட்க்கே வரலை. ஊட்ல இப்பத்தான் எனக்கு பொண் பார்த்திட்டிருக்காங்க (எம் பொண்டாட்டிதான்)

பிரேமா மகள் said...

/ரோகிணிசிவா said...
கேட்க யாரும் இல்லையா ??????//

வால்பையன் said...

அங்கிள்லாம் இப்படி கவிதை எழுதினால், நானெல்லாம் எங்கே போறது!

வானம்பாடிகள் said...

// மேக்கப் போட்டு ஃபோட்டோ எடுத்துட்டு ரவுசப்பாரு//

க.பாலாசி said...
//அதான் பாருங்களேன்... நம்மள மாதிரி ஒரிஜினல் யூத்த்த்த்துங்களுக்கு காலமே இல்லைங்க..//


யார்ப்பா அது எங்க கதிர் அங்கிளை கலாய்க்கிறது...

அவர் அழகா இருக்கார்ன்னு உங்களுக்கு எல்லாம் பொறாமை.. போங்க.. போய் வெயிலுக்கு இதமா லெமன் ஜீஸ் குடிங்க.. அதை விட்டு.. ஒரு வாலிப பையனின்(?????) காதலை குமைக்கிறீங்களே... போங்க மக்கா.... போய் வேலையைப் பாருங்க..

Paleo God said...

//யோவ்.... அது கேமரா மிஸ்டேக்யா!!//

எனி உள்குத்து?? :)))

dheva said...

கதிர்.... சார்.... பாலாசிக்கும்....வானம்பாடிகளுக்கும்...கவிதையை விட ...உங்க மேல பயங்கர காட்டம் போல..... காட்டு காட்டுன்னு காட்டுறாங்க.....! நான் சொல்றேன் சார்.... நீங்க யூத்துதான்......கவலையே படாதீங்க.....!

காமராஜ் said...

கவிதை உருக்குது, கலாட்டா தூக்குது.
நல்லாருக்கே கச்சேரி பாலாஜி,வானம்பாடி அசத்துங்க.

சத்ரியன் said...

கதிர் அண்ணா,

உங்கக்கிட்ட இருந்து இப்படியொரு ’பூ’வை எதிர்ப்பாக்கவே இல்லை.!

ஆமா, இந்த பாலாசி ‘அங்க்கிள்’ ஏன் எப்பப் பாத்தாலும் இப்படி அலையுது?

கே. பி. ஜனா... said...

வாவ்! ரொம்ப நல்லாருக்கு!

Anonymous said...

//என்னதான் பொழுது புரட்டிப்போட்டும்
புரளாமல் தளராமல் பூத்துக்குலுங்கி
கடக்கையில் கசியும் காதலில்
எல்லாச் சோர்வையும் எரிக்க
புதிதாய் ஒரு தீ பூக்குதே!//

சந்தேகமே இல்லை ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க சமீபத்தில...
தீ பூக்கும் நேரம் தித்திக்குதே....

Unknown said...

அன்பெனும் தீ பூத்தலும் அதை நுகர்தலும் சாத்தியமாகிடும் இது போன்றொரு கவிதையின் வாசத்திலே ..!

Unknown said...

கசியும் காதலா,கரைபுரளும் காதலா?