அடர்த்தியாய்.....

பேசும் மௌனம் 
விடிந்தது கல்யாண வீடு
அடுக்கும் நாற்காலிகளில்
கனமாய் உட்கார்ந்திருந்தது
பேசித்தீர்த்த கேலியும், கிண்டலும்


காயும் நிழல்
கொதிக்கும் வெயிலில்
குதித்தோடும் குழந்தைகள்
சீண்டப்படாத மரத்தின் கண்ணீர்
தேங்கிக் கிடக்கிறது நிழலாய்.....


முரண்
பசித்தவன் வாரிக்கொள்கிறான்
மிஞ்சியவன் வீசிய சோற்றை
காலியாகிறது குப்பைத் தொட்டி
குப்பையாகிறது சமத்துவம்


எச்சில் வாசம்
பிதுங்கி வழியும் பேருந்தில்
மடிமேல் இருத்தி பின் பறித்துச்சென்ற
மழலை வழியவிட்ட எச்சில்
பயணிக்கிறது காயாமலே

____________________________________

38 comments:

vasu balaji said...

ஆஹா ஆஹா 4,3,2,1 நம்ம வரிசை.

எச்சில் வாசம் அருமை:))

Rajan said...

எச்சில் வாசம் நல்லா இருக்கு

கலகலப்ரியா said...

நல்லாருக்கு கதிர்..

ரோகிணிசிவா said...

பேசும் மௌனம்,காயும் நிழல்-
முரண்பாடுகள் ஆனாலும் கவிதையாய் இனிக்கிறது!!!

dheva said...

//பேசும் மௌனம்
விடிந்தது கல்யாண வீடு
அடுக்கும் நாற்காலிகளில்
கனமாய் உட்கார்ந்திருந்தது
பேசித்தீர்த்த கேலியும், கிண்டலும்//

உணர்வு பூர்வமான வரிகள் சார்! மிக அருமை!

அன்பேசிவம் said...

முரண்-ல கொன்னுடிங்க தல

மாதேவி said...

"பேசித்தீர்த்த கேலியும், கிண்டலும்" "குப்பையாகிறது சமத்துவம்"

"மழலை வழியவிட்ட எச்சில்"
"சீண்டப்படாத மரத்தின் கண்ணீர்"
அனைத்தும் அடர்த்தியாய் அழகாய் பேசுகின்றன.

Chitra said...

முரண்
பசித்தவன் வாரிக்கொள்கிறான்
மிஞ்சியவன் வீசிய சோற்றை
காலியாகிறது குப்பைத் தொட்டி
குப்பையாகிறது சமத்துவம்


..... சான்சே இல்லை. அடர்த்தியான வரிகள், கவிதைகள் முழுவதும்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//பசித்தவன் வாரிக்கொள்கிறான்
மிஞ்சியவன் வீசிய சோற்றை
காலியாகிறது குப்பைத் தொட்டி
குப்பையாகிறது சமத்துவம்//

அழுத்தம்

-ப்ரியமுடன்
சேரல்

Ahamed irshad said...

1,4.

கவிதை அருமை...

அகல்விளக்கு said...

///பசித்தவன் வாரிக்கொள்கிறான்
மிஞ்சியவன் வீசிய சோற்றை
காலியாகிறது குப்பைத் தொட்டி
குப்பையாகிறது சமத்துவம்///

மனதில் அழுந்திப்பயணிக்கிறது...

க.பாலாசி said...

//பேசும் மௌனம்//

குழந்தைகள் பறித்திட்ட ஒரு நாற்காலியின் இரு(க்)கைகளும்கூட....

//காயும் நிழல்//

ஆதரவில்லாமல் காயும் அன்புடனும்...

//முரண்//

பசியற்றவனின் பணக்காரத்தனமும்....

//எச்சில் வாசம்//

ஒரு மலடியின் வயிற்றில்...

மிக நல்ல கவிதைகள்...யதார்த்தங்கள் குழைத்திட்ட வார்த்தைகள்...

Anonymous said...

சார்.. உங்களோடத நான் தொடர்ந்து படிச்சிகிட்டு இருக்கேன். கவிதைகளும் சரி.. கட்டுரைகளும் சரி... அருமையா இருக்குங்க... நீங்க எழுதுற எல்லாமே மனிதநேயத்தோட இருக்கு... தொடர்ந்து இதுமாதிரி எழுதுங்க....

நன்றி
சிவா...

சத்ரியன் said...

கதிர்,

எப்படி படிச்சாலும், இங்கிருந்து விலகிப் போகவே முடியவில்லை.

ரொம்ப அருமை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர்..

முரண்... இன்றைய சமத்துவத்தைக் கூறிய விதம்.... நன்று.

எச்சில் வாசம்... இதம்..

காயும் நிழல்.. கொதிக்கிறது.

தொடருங்கள்..

பிரபாகர் said...

கதிர்,

என்ன சொல்ல, எனது வரிசை 1,2,3,4,.....4,3,2,1....

சுத்தி சுத்தி படிக்கிற மாதிரி சூப்பரா இருக்குல்ல!

பேச்சுக்களின் மிச்சம், மரங்களின் கண்ணீர், சமூகக்குப்பை, மழலை எச்சில் என எல்லாம் அருமை கதிர்!

பிரபாகர்...

வால்பையன் said...

சுருக்! நறுக்!

Katz said...

//பசித்தவன் வாரிக்கொள்கிறான்
மிஞ்சியவன் வீசிய சோற்றை
காலியாகிறது குப்பைத் தொட்டி
குப்பையாகிறது சமத்துவம்//

அருமை!

பின்னோக்கி said...

மரத்தின் கண்ணீர். மிக அருமை

Thenammai Lakshmanan said...

அருமை கதிர் 4 1 2 3 இது என் வரிசை

Unknown said...

முரண் - டாப்..

மத்ததும் முரணுக்கு கொஞ்சமும் குறைவில்லாமலே.. :))

கே. பி. ஜனா... said...

//விடிந்தது கல்யாண வீடு
அடுக்கும் நாற்காலிகளில்
கனமாய் உட்கார்ந்திருந்தது
பேசித்தீர்த்த கேலியும், கிண்டலும்//

நல்ல பார்வை!

அம்பிகா said...

\\பசித்தவன் வாரிக்கொள்கிறான்
மிஞ்சியவன் வீசிய சோற்றை
காலியாகிறது குப்பைத் தொட்டி
குப்பையாகிறது சமத்துவம்\\
அருமை.
எச்சில் வாசமும் மணக்கிறது.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை அத்தனையும்.

ஹேமா said...

கதிர்,மழலைக்கான ஏக்கம் வரிகளில் அருமை.

சீமான்கனி said...

//கொதிக்கும் வெயிலில்
குதித்தோடும் குழந்தைகள்
சீண்டப்படாத மரத்தின் கண்ணீர்
தேங்கிக் கிடக்கிறது நிழலாய்.....//

கவிதைகள் தங்கி விடுகிறது மனதில் முரண்-ணாய்...அருமை கதிர் அண்ணே...

நிலாமதி said...

மன்னிக்கவும் .....எழுத்துப்பிழை வந்து விட்டது ...

கவிதை உள்ளத்தை தொட்டு சென்றது

செந்தில்குமார் said...

அடுக்கும் நாற்காலிகளில்
கனமாய் உட்கார்ந்திருந்தது

காலியாகிறது குப்பைத் தொட்டி
குப்பையாகிறது சமத்துவம்

ஈரம் காயாமல் பயணிக்கும் எச்சில்

அருமை........

செந்தில்குமார்.அ.வெ

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆஹா ஆஹா அருமை அருமை

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு கதிர் சார்.

Nathanjagk said...

பேசும் மௌனம்
காயும் நிழல்
முரண்
எச்சில் வாசம்

அனைத்தும் அருமை கதிர்.
முரணை வெகுவாக ரசித்தேன்.

vasan said...

ச‌ப்த‌த்தின் ம‌வுன‌ம்,க‌ண்ணீர் நிழ‌ல்,
ப‌சித்தும் புசித்தும் ச‌ம‌த்துவ‌ம்,
ப‌ய‌ண‌த்தில் வாயின் எச்சில்.
சாதா நிக‌ழ்வுகளுக்கு,
சாகாவ‌ர‌ம் த‌ந்த‌ க‌திரின் நோக்கு
நேக்கு புதிர்.

பனித்துளி சங்கர் said...

அனைத்தும் அருமை . மிகவும் சிறப்பான சிந்தனைகள் . . உங்களின் வார்த்தைகளில் சமூக அக்கறை தெரிகிறது .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

*இயற்கை ராஜி* said...

ம்ம்ம்...வழக்கம்போல தான் இருக்கு..




கலக்கலா:-)

Rekha raghavan said...

நான்கும் அழகான அளவான கவிதைகள் கதிர்.


ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து

சு.மருதா said...

மிஞ்சியவன் வீசிய சோறு வரியவனின் பசியாய் மாறுகிறது!! குப்பைத்தொட்டிகள் காலியான மாற்றம்,சமத்துவம் குப்பையாகிறது!! மாற்றங்கள் மட்டும் தான் உலகில் மாறாதது.(மாறுதல்.பிளாக்ஸ்பாட்.காம்)பெயருக்கேற்ற கவிதை மனமுவந்த எம் பாராட்டுதல்கள் உடன் சித்திரை திருநாள் வாழ்த்துக்களும்

Radhakrishnan said...

மிகவும் அழகிய கவிதைகள்.

Aathira mullai said...

//முரண்
பசித்தவன் வாரிக்கொள்கிறான்
மிஞ்சியவன் வீசிய சோற்றை
காலியாகிறது குப்பைத் தொட்டி
குப்பையாகிறது சமத்துவம்//

மிக அருமையான சமத்துவக்கவிதை.. மனதை வருத்தும் கவிதையும்...