ஒரு மகிழ்ச்சியும், மிக நீண்ட நன்றிகளும்


ஒரு மகிழ்ச்சியும்......


என்னுடைய கவிதை ஒலிக்கும் கடைசிக்குரல் விகடனின் முகப்பில் வெளிவந்திருப்பதாக விகடனிலிருந்து ஒரு மின்னஞ்சல்...

இதுவரை இளமை (யூத்ஃபுல்) விகடனில் குட் பிளாக் பகுதியில் மூன்று இடுகைகள் வெளிவந்துள்ளது. அதுவும் கூட வலைப்பூ நண்பர்கள் சொல்லித்தான் தெரிய வரும்.

ஆனால் முதல் முறையாக விகடன் இணைய இதழின் முகப்பிலும், இளமை விகடனின் நீட் தலைப்பிலும் வெளியிட்டு மின்னஞ்சல் செய்தது மிகுந்த மகிழ்வை கொடுத்தது.

விகடனில் வாசிக்க
இதை அழுத்துங்கள்... விகடனில் ஒலிக்கும் கடைசிக்குரல்

விகடனில் என் கவிதை வெளிவர முக்கிய காரணம் நண்பர் ச.செந்தில்வேலன் அவர்கள் தான். விகடனுக்கு பதிவை அனுப்புங்கள் என என்னை துபாயிலிருந்து தொலைபேசி மூலம் ஊக்குவித்த ச.செந்தில்வேலன் அவர்களுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள்.

--------------------------------------------------------------------------


மிக நீண்ட நன்றிகளும்....


மனது குளிர்ந்த இந்த நேரத்தில்...

மகிழ்ச்சியோடு பகிர நினைப்பது வலைப்பூ மூலம் கிடைத்த நேசம் நிறைந்த நட்புகளைத்தான்.

என்னை எழுதுடா என அடிக்கடி தூண்டிய என் 16 வருட தோழி பேராசிரியை கவுசல்யா
தாமதாமாய் படித்தாலும் வியப்புறும் தங்கமணி தமிழரசி, “என்னப்பா அப்பிடி எழுதிவீங்க எனக் கேட்கும்” எங்க பாப்பா நதிவதனா

குறிப்பாக ஏதோ ஒரு காரணத்தின் பால் தங்கள் மனது ஈர்த்து விருதுகளை பகிர்ந்து கொண்ட பிரியமுடன் வசந்த், பழமைபேசி, வானம்பாடிகள்

படைப்பை வெளியிட்ட இளமை விகடன், குங்குமம், வலை விகடன்

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, தங்கள் இடுகைகளில் என் இடுகைகளை சுட்டி எழுதிய மிகப்பெரிய மனது படைத்த பழமைபேசி, நாடோடி இலக்கியன், ஸ்ரீ

தொலைபேசியில் அழைத்து நீண்ட நேரம் பாராட்டி மகிழும் சிங்கை பிரபாகர், “அவினாசியிலிருந்து ஆறுச்சாமிங் மாப்ள” என்று ஒரு நாள் தூக்கத்தில் என்னை அமெரிக்காவிலிருந்து எழுப்பி நீண்ட நேரம் பேசிய பழமைபேசி, விகடனுக்கு அனுப்புங்கள் என துபாயிலிருந்து அறிவுறுத்திய ச.செந்தில்வேலன், கசகஸ்தானிலிருந்து அழைத்த சம்பத்குமார்

சாட் மூலம் பேசும் பிரியமுடன் பிரபு, இரும்புத்திரை அரவிந்த், தேவன்மயம், வளைகுடாவில் இருக்கும் பவானி சண்முகசுந்தரம்


ஏற்கனவே நட்பு கொண்டிருந்தாலும் வலைப்பூ வாசிப்பு மூலம் என்னை அடையாளம் கண்டு சிலாகித்துப் பேசும் ஈரோடு நண்பர்கள் ஜாபர், ஆரூரன், சதீஸ், பிரபு, பரிமளா அக்கா, அமித், சரவணன் பெருமாள், மகேஸ்வரன், பைஜு

சென்னையிலிருந்து மகிழ்வோடு பேசிய தமிழன் வேணு, ரேகா ராகவன்

புத்தகத் திருவிழாவிற்கு வந்து நட்பு வட்டத்தை இறுக்கிய கார்த்திகை பாண்டியன், ஸ்ரீ, இரா.வசந்த்குமார்

அவருடை அழகிய எழுத்து நடையில் சொக்கிப்போய் தொடர்பு கொண்டு பேசிய அடர்கருப்பு காமராஜ்

ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து, கருத்துப் போட்டு, எதிர் கவுஜ போட்டு, மிக இயல்பாய் பழகிய வால்பையன்

தினமும் ஒருமுறையாவது பேசும், என் இனிய இளவல் பாலாஜி

பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கும்...
பிரியமுடன் வசந்த, பாலாஜி, பழமை பேசி, ச.செந்தில்வேலன், வால்பையன், சக்தி, தமிழரசி, நாகா, ஜோதி, காமராஜ், ராமலஷ்மி, சந்தனமுல்லை, திகழ்மிளிர், ராஜாகேவிஆர், குடந்தை அன்புமணி, சீனா, நாடோடி இலக்கியன், மதி இண்டியா, நாஞ்சில்நாதம், முத்துலட்சுமி, அனுஜன்யா, நேசமித்ரன், தண்டோரா, சின்ன அம்மிணி, தீபா, தமிழன் வேணு, இயற்கை, கலையரசன், வானம்பாடிகள், இரும்புத்திரை அரவிந்த், கவிக்கிழவன், யாதவன், யாசவி, தேவன்மயம், குசும்பன், கோவி.கண்ணன், அமுதா கிருஷ்ணன், அப்பாவி முரு, அன்புடன் அருணா, சுவாமி ஓம்கார், நாமக்கல் சிபி, லோகு, ராசுக்குட்டி, சூரியன், நிலா, ஆர்.செல்வராஜ், திருமதி ஜெயசீலன், டவுசர் பாண்டி, ராம், நிகழ்காலத்தில், கார்த்திகைபாண்டியன், ஸ்ரீ, செல்வநாயகி, ஆரூரன், கிருஷ்ணா, குப்பன்_யாஹு, ஜீவன், பிரியமுடன் பிரபு, நட்புடன் ஜமால், துபாய் ராஜா, வே.ராதாகிருஷ்ணன், உமர், தி கிங், புரூனோ, உமா, யோகன்பாரிஸ், சுப்பு, வந்தியத்தேவன், ஜான் பீட்டர், உடன்பிறப்பு, சூர்யா, இண்டி, நிலாமதி, ஜெகநாதன், முரளிக்கண்ணன், டக்ளஸ், ரோஸ்விக், எதிர் வீட்டு ஜன்னல், மன்சூர் ராஜா, மணிஜீ, ஹேமா, முனியப்பன் பக்கங்கள், பட்டிக்காட்டான், வெண்தாடிவேந்தர், ஊர்சுற்றி, தியா, ரேடி சதீஷ், ஆர்.எஸ்.பிரபு, குறையொன்றும் இல்லை, அழகன், சம்பத்குமார், நிலாமதி, சுலோச்சனா, நிழல், குமார், குரு, அகல்விளக்கு, மாதவராஜ், ஆதிமூலகிருஷ்ணன், இது நம்ம ஆளு, சி, கீர்த்தி, ஜெர்ரி ஈசானந்தா, மேக்சிமம் இந்தியா, ஆர்.ஞானசேகரன், வெங்கடேசன், பிரபா, பாலகுமார், ஹரிஹரன், ஜோசப்பால்ராஜ், சேன், பித்தன், சங்கர்89... (யாராவது விடுபட்டிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்)

நீங்கள் கொடுத்த ஊக்கம்தான்..
வலைப்பூ தொடங்கி முதல் எட்டு மாதத்தில் 19 இடுகை மற்றும் 2700 வருகையாளர்கள், 19 பின் தொடர்பவர்கள் என இருந்த என்னை, அடுத்த இரண்டே மாதங்களில் 51 இடுகைகள், 12400 வருகையாளர்கள், 55 பின் தொடர்பவர்கள் ஒரு உயரத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

நன்றி என்ற வார்த்தையை என் அனைத்து உணர்வுகளையும் ஒன்று திரட்டி தங்கள் முன் சமர்பிக்கிறேன்.

33 comments:

Radhakrishnan said...

பிரமாதமான கவிதை மற்றும் இடுகை. அனைவருக்கும் நன்றி சொல்லி அசத்திவிட்டீர்கள். தங்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் தங்களுடன் சேர்ந்து நானும் சந்தோசம் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

நட்புடன் ஜமால் said...

“என்னப்பா அப்பிடி எழுதிவீங்க எனக் கேட்கும்” எங்க பாப்பா நதிவதனா]]


நெகிழ்வாய் ...

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள்! தொடர்ந்து எழுதுங்கள்! :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் கதிர்..நன்றி எல்லாம் சொல்லி அன்னியப் படுத்தாதீங்கப்பா..

க.பாலாசி said...

என்னமோ போட்டிருக்காரேன்னு வேகமா வந்தா...சுயபுராணமா...

அதையும் வல்லமையுடன் எழுதும் திறமை உங்களுஙக்கே உரித்தானது...நல்ல இடுகைகள் நாலுபேருக்கு தெரியறது இயல்புதானே...படிப்பவர்கள் மகிழ இன்னும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம்....

இடையில உடன்பிறப்பு வேறா...நடக்கட்டும...

வால்பையன் said...

//என்னை அடையாளம் கண்டு சிலாகித்துப் பேசும் ஈரோடு நண்பர்கள் ஜாபர், ஆரூரன், சதீஸ், பிரபு, பரிமளா அக்கா, அமித், சரவணன் பெருமாள், மகேஸ்வரன், பைஜு//

ஈரோட்ல இத்தனை பேர் இருக்குறதே நீங்க சொல்லிதான் எனக்கு தெரியுது!
எனக்கு ஜாஃபர் மட்டுமே நீங்கள் அறிமுகப்படுத்தியது!

00

யூத்ஃபுல் விகடன் சில நாட்களாக திறக்கமுடியாமல் இருந்தது! அதனால் அந்த பக்கம் போகவில்லை!
தகவலுக்கு நன்றி

00

மேன்மேலும் சிகரங்கள் உங்களை தொட வாழ்த்துக்கள்!
(நன்றி:பரிசல்)

00

இரும்புத்திரை said...

வாழ்த்துகள் கதிர்..

vasu balaji said...

மிக மிக மகிழ்ச்சி நண்பரே! உணர்ச்சி பூர்வமான இடுகைக்கு உயர்ந்த பாராட்டு.

பழமைபேசி said...

வாழ்த்துகள் மாப்பு!

குடந்தை அன்புமணி said...

வாழ்த்துகள் தோழரே. வெற்றிப் பயணம் தொடரட்டும்.

நிலாமதி said...

வாழ்த்துக்கள். வெற்றி பயணம் நீண்டு செல்லட்டும் என் பெயரை (பின்னூட்டம் இடுபவர்கள் ) இரண்டு தடவை எழுதி இருக்கிறீர்கள்.நிலாவில் (வானத்து )அத்தனை பிரியமா ? சும்மா ஜோக்குங்க . பாராடுக்கள்

Raju said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கதிர்.

அன்புடன் அருணா said...

மேலும் வளர பூங்கொத்துக்ளுடன் வாழ்ததுக்கள்!!

காமராஜ் said...

என் இனிய கவிஞன்,
சமூக மனிதன்,
எழுத்தின் காதலன்,
அன்புத்தோழன், எங்கள் கதிருக்கு
மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டும்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் கதிர்,

எனது கட்டுரைகளை யூத்ஃபுல் விகடன் வெளியிட்ட போது நான் பெற்ற இன்பம், என் நண்பரும் பெற வேண்டும் என நினைத்ததைத் தவிர வேறொன்றும் நான் செய்யவில்லை :))

தொடருங்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் கதிர் .....

சீமான்கனி said...

மகிழ்ச்சி கதிர்..
வாழ்த்துகள்.......... தொடர்ந்து எழுதுங்கள்!

கலகலப்ரியா said...

வாழ்த்துக்கள்!

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வெ.இராதாகிருஷ்ணன்

நன்றி @@ நட்புடன் ஜமால் said...

நன்றி @@ சந்தனமுல்லை said...

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்

நன்றி @@ க. பாலாஜி said...

நன்றி @@ வால்பையன்

நன்றி @@ இரும்புத்திரை அரவிந்த்

நன்றி @@ வானம்பாடிகள்

நன்றி @@ பழமைபேசி

நன்றி @@ sakthi said...

நன்றி @@ குடந்தை அன்புமணி

நன்றி @@ நிலாமதி

நன்றி @@ டக்ளஸ்

நன்றி @@ அன்புடன் அருணா

நன்றி @@ காமராஜ்

நன்றி @@ ச.செந்தில்வேலன்

நன்றி @@ பிரியமுடன்...வசந்த்

நன்றி @@ seemangani

நன்றி @@ கலகலப்ரியா

Jerry Eshananda said...

மனசு நிறைஞ்சுவாழ்த்துகிறேன்,இன்னும் உயரங்களை எட்ட.
இந்த எளியவனையும் நினைவு கொண்டதற்கு என் நட்பை பரிசாக தருகிறேன்.
நீங்கள் மதுரை வரும் நாளை மறக்காமல் சொல்லவும். நன்றி.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள் கதிர்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ jerry eshananda

நன்றி @@ ஸ்ரீ

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் தோழரே,..

என் பெயரும் இருக்கு.. மிக்க நன்றி

நிகழ்காலத்தில்... said...

\\நன்றி என்ற வார்த்தையை என் அனைத்து உணர்வுகளையும் ஒன்று திரட்டி தங்கள் முன் சமர்பிக்கிறேன்.\\

நன்றி என்ற வார்த்தைக்கு உண்டான முழு பொருளையும் இடுகையாக வெளியிட்டு விட்டீர்கள்

வாழ்த்துக்கள் கதிர்..

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஆ.ஞானசேகரன்

நன்றி @@ நிகழ்காலத்தில்

நாகராஜன் said...

வாழ்த்துக்களும் பாராட்டுகளும் கதிர். எல்லோரையும் நினைவு கூர்ந்த விதம் அருமை.

ஆரூரன் விசுவநாதன் said...

இத்தனை பேர்களையும் நினைவில் நிறுத்தி நன்றி சொன்ன விதம் நினைவில் நிற்கிறது. வாழ்த்துக்கள் கதிர்
அன்புடன்
ஆரூரன்

Several tips said...

அருமையான பதிவு

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ராசுக்குட்டி

நன்றி @@ ஆரூரன் விசுவநாதன்

நன்றி @@ Several tips

தேவன் மாயம் said...

மேன்மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள்!!

Unknown said...

வாழ்த்துகள்..

என்னங்க திடீர்னு நன்றி நவிழல்(சரியா.?)..??!!

goma said...

உங்கள் மகிழ்ச்சியை மகிழ்ச்சியுடன் வாசித்தோம்.
இன்றுவரை சாதனைக்கு பாராட்டுகள்,இனி தொடரப் போகும் சாதனைகளுக்கு
வாழ்த்துக்கள்

Unknown said...

தொடர்ந்து உங்க எழுத்து எட்டுதிக்கும் வலம்வர வேண்டும் என வேண்டுகிறேன்