இன்னைக்கு காலைலே.... ஒரு 11 மணியிருக்கும்...
நம்ம வடிவேலு கணக்கா தேமேனு வேலையப்பார்த்துக் கிட்டிருந்தேன். ஒரு போனு வந்துதேனு நாம்பாட்டுக்கு பேசிக்கிட்டிருந்தேன். கொஞ்சம் டிப் டாப்பான ஒரு ஆளு வந்து கண்ணாடி கதவ தட்டி "எக்ஸ்கியூஸ் மீ சார்" னான். நானும் டிப் டாப்பா இருக்கானே, நல்லவனாத்தான் இருப்பானோன்னு நம்பி "உள்ள வா" னு தலைய ஆட்டிட்டேன். சடக்குனு உள்ள வந்தவன், படக்குனு என் கைய புடிச்சு குலுக்கிப்புட்டு, "குட்மார்னிங் சார்" னான். அவன் படக்குனு கைய புடிச்சதுல டபுக்குனு எஞ்செல்போனு கீழ உளுந்துடுச்சு....
நாமதான் கோவப்படக் கூடாதுனு பதிவு போட்டிருக்கமேனு.... பல்லு, நாக்கு எல்லாத்தையும் கடிச்சிக்கிட்டு...
"என்ன" என்றேன்...
திரும்பவும்.... "எக்ஸ்கியூஸ் மீ சார்..... என்று ஆரம்பித்தான்...
அடங்கொய்யால... திரும்பவும் ஆரம்பிக்கிறானேனு நினைச்சுக்கிட்டே..
"ம்... என்ன சொல்லு" னேன்
"நாங்க பென்டகன் கம்பெனியிலிருந்து வர்றோம்... ஒரு ஸ்பெசல் ஆஃப்பருக்கு உங்கள சூஸ் பண்ணியிருக்கோம், பார்த்தீங்கனா சார்... இந்த புக்க 70 சத ரேட்ட குறைச்சு உங்களுக்கு 2300 ரூபாக்கு தர்றோம், அதுவும் நீங்க ஏற்கனவே ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி (ஏற்கனவே ஏமாந்து போயி வாங்கி அலமாரியில வச்சிருந்தத பயபுள்ள அதுக்குள்ள எப்படி பார்த்தானோ?) வச்சிருக்கிறதனாலே உங்களுக்கு இன்னொரு 37 ரூபாய் 40 காசு தள்ளுபடி கெடைக்கும் சார்" னு தெளிவா தான் கத்து கிட்ட மேட்டரை எங்கிட்ட விவசாயம் பண்ணிப் பார்க்க ஆரம்பித்தான்....
"கைப்புள்ள... கன்ட்ரோலா இரு, ஏமாந்திராத" னு நானும் ஆன வரைக்கும் சமாளிச்சு.... போராடி கடைசியா அந்த புக்க வாங்காமலேயே திருப்பியனுப்பிச்சிட்டு... அப்பாடானு நிம்மதியா உட்கார்ந்தா
போன் அடிச்சது, எடுத்துப்பார்த்தா தங்கமணி. எடுத்து என்னனு கேட்டா... "எப்போ சாப்பிட வருவீங்கனு" ரொம்ப அக்கரையா கேட்டுது அம்மணி... என்னடா என்னைக்குமில்லாமா இன்னைக்கு புதுசானு நினைச்சிகிட்டே பதில் சொல்லும் போதே...
அந்த பக்கம் "ஏங்க... நான் ஒன்னு வாங்கியிருக்கேனே"னு ரொம்ப சந்தோசமா சொல்லுச்சு. லேசான பயத்தோட "என்ன" னு கேட்டேன்.
"ஒன்னுமில்லீங்க... நம்ம ஏரியால ஒரு பொண்ணு புக்ஸ் எல்லாம் சேல்ஸ்க்காக கொண்டு வந்திருந்துச்சு, பக்கத்தில எல்லாரும் வாங்கினாங்க.... நானும், நீங்க துணியெடுக்க குடுத்த பணத்தில... ரொம்ப யூஸ்புல்லா இருக்குமேனு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி ஒன்னு வாங்கியிருக்கனுங்க"
11 comments:
நான் இது மாதிரி சேல்ஸ்மென் காலிங் பெல் அடித்தால் கதவை திறப்பதே இல்லை. என்னிடம் எல்லாமிருக்குனு சொல்லி அனுப்பி விடுவேன்.
சகாதேவன்
i am having lot of book. Give your home address or ur wife's phone number please. Nanum unkal thayaval pilaithukolkirane
ஹா ஹா ஹா
அதான் விதி ..ஒட்டகத்து மேல உக்காந்தாலும் நாய் கடிக்கும்...
சுவாரஸ்யமா எழுதுறீங்க. தொடருங்கள். அவ்வப்போது வருகிறேன்.
இந்த கதை குங்குமம் வார இதழில் வெளி வந்ததில் மிக்க மகிழ்ச்சி...
அருமையான நகைச்சுவை கதை
குங்குமம் வார இதழிலா!!!???
என்ன சார் இப்படி கேட்டுடீங்க கார்க்கியின் பதிவு ஒன்று ராஜா சந்திரசேகரின் கவிதையொன்றுடன் இந்த பதிவும் வெளியாகியிருந்தது ஜீலை முதல் வார குங்குமம் இதழில் கிடைத்தால் வாங்கி படியுங்கள் சகோதரரே
மிக்க நன்றி சக்தி
நல்ல கதை:)!
nee ninacha nanga seivomilla
ha ha ha! :-)
Post a Comment