இடுங்கிய‌ க‌ண்ணை இன்னும் கூடுத‌லாக‌ இருளாக்கிய‌து...
வீதியோரம் நின்று
விழிகள் வீதியில் மேய
நண்பனோடு அரட்டையில்
ஆழ்ந்திருந்த அந்தி நேரம்...

காலையில் எடுத்துச்சென்று...
இன்னும் விற்காத முறுக்கு
பாறாங்க‌ல்லாய் கூடைக்குள்
கிழ‌வியின் த‌லைமேல்....

"சாமீ....
கொஞ்சம் முறுக்கெடுங்கப்பா..
ந‌ல்ல‌ முறுக்கப்பா.."
ஒடுங்கிய‌ க‌ண்ணில்
ஒரு நம்பிக்கை ஒளி


என் நாக‌ரீக‌ வெளிச்ச‌ம்
இடுங்கிய‌ க‌ண்ணை இன்னும்
கூடுத‌லாக‌ இருளாக்கிய‌து...

தளராத நம்பிக்கையோடு
தளர்ந்த நடையோடு நகர்கிறாள்....

கிழவியின் கூடையில்
விற்காத முறுக்கு அப்ப‌டியே..

வாங்காத‌ முறுக்கு
என் மனதில் பிசுபிசுப்பாய்
செரிமானம் ஆகாமல்...

11 comments:

வால்பையன் said...

//என் மனதில் பிசுபிசுப்பாய்
நிறைய முறுக்கு
செரிமானம் ஆகாமல்...//

நமக்கும் தாத்தா, பாட்டி இருக்காங்கன்னு ஞாபகம் வந்தாலே செரிமானம் ஆகிறும்!

Anonymous said...

val paiyan comment super

Anonymous said...

excellent. It is true. Lot of the time we will do like this. Ehat we do. Always we response our prestege only

நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...

உண்மையை யதார்த்தமாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் ... அருமை !!!

கவி ரூபன் said...

தொடாத பகுதிகளைத் தொட்டுச் செல்கிறது....

*இயற்கை ராஜி* said...

//என் நாக‌ரீக‌ வெளிச்ச‌ம்//

பல முன்னெடுப்புகளைத் தடுப்பதே இதுதான்

kirthi said...

அருமை..இனி வாங்கி திங்க சொல்லும் வரிகள்..அதுவரை அக்கிழவி இருப்பாளா ? :(

Amudha Murugesan said...

வாங்காத‌ முறுக்கு
என் மனதில் பிசுபிசுப்பாய்
செரிமானம் ஆகாமல்... \\

பல நேரங்களில் இப்படித்தான்...எதுவும் தாமதமாய்த்தான் தோன்றும்! :-)

lakshmi indiran said...

மனிதாபிமானம் உள்ளவர்கள் போல் பேசிக்கொள்ளும் நம்மால் நிறைய நேரங்களில் நடக்கவிடுவதில்லை இந்த மனமும்,சமூகமும்........

lakshmi indiran said...

மனிதாபிமானம் உள்ளவர்கள் போல் பேசிக்கொள்ளும் நம்மால் நிறைய நேரங்களில் நடக்கவிடுவதில்லை இந்த மனமும்,சமூகமும்........

lakshmi indiran said...

மனிதாபிமானம் உள்ளவர்கள் போல் பேசிக்கொள்ளும் நம்மால் நிறைய நேரங்களில் நடக்கவிடுவதில்லை இந்த மனமும்,சமூகமும்........