அணைப்பென்பதுஎந்த
அணைப்பிலும்
இது சரியெனச் சொல்லவியலாது

எந்த அணைப்பிலும்
இது பிழையெனச் சொல்லவியலாது

எந்த அணைப்பிலும்
இது கனமெனச் சொல்லவியலாது

எந்த அணைப்பிலும்
இது நீதியெனச் சொல்லவியலாது

எந்த அணைப்பிலும்
இது தீர்வென சொல்லவியலாது

எந்த அணைப்பிலும்
இது அதுவெனச்  சொல்லவியலாது

எந்த அணைப்பிலும்
இது ஏற்கனவே சுவைத்ததெனச் சொல்லவியலாது

ஆனாலும் சொல்லலாம்
அணைப்பென்பது
கேள்வி
அணைப்பென்பது
பதில்
அணைப்பென்பது
யுத்தம்
அணைப்பென்பது
விடுதலை

எல்லா அணைப்பும்
புதிதுதான்
மூச்சுக் காற்று போலவே!