உறக்கம் திருடும் குளிர் தோய்ந்த நடுநிசிக்கு என்ன பெரிதாய்
தேவையிருக்கப் போகிறது ஏதோ ஒரு நிறைவின் கொண்டாட்டமோ குறைவின் பசியோ தவிர்த்து
-
தை மாத விடியலில் வந்திருக்கும் மழைத்தூறல் நம்பும்படியாக
இல்லை என்பதைவிட நல்லதுக்கு அல்ல என்று மட்டும் புரிகிறது!
-
”நான் சொல்றத
புரிஞ்சுக்க, சரியா?”என நாம்
சொல்லும்போதே புரிந்துகொள்ளவே இயலாத அண்டவெளிக்கு அவர்கள் சென்றுவிட்டனர்
என்பதையும் புரிந்துகொள்வோம்
-
காணும் ஒவ்வொரு குழந்தையின்
முகத்திலும் ‘அது அந்தக் குழந்தையின் முகம்’ என ஒப்புக்கொள்ளாமல் யாரோ ஒருவரைத் தேடி,
யாரோ போல் இருப்பதாய் சொல்கிறோம்!
-
இப்பவே கேலண்டரை எடுத்துப்
பார்த்துட்டு ”அடச்சே
தீவாளி சனிக்கிழமை வருது”னு ஸ்கூலுக்கு போற புள்ளைய என்ன
சொல்றது!
-
கொம்பில்லா கலப்பின மாடுகளுக்கு பூ, பொட்டு வச்சு பொங்கல்
கொண்டாடுறது, எமி ஜாக்சனுக்கு பாவாடை தாவணி போட்டு
தமிழ்ப்பொண்ணா வேசம் கட்டுன மாதிரி
-
மாடுகள் ஏதுமில்லை எஞ்சியிருக்கும் அதன் வாசனையோடு வந்து
குவியும் கிராஃபிக்ஸ் மாடுகளின் வாழ்த்துகளோடுதான்... இந்த நாளைக் கடக்க வேண்டும்!
-
வேட்டி தினம் என்பது அன்றைக்கு மட்டும்
வேட்டி கட்டி போட்டோ போடுவதற்காக அல்ல... அவ்வப்போது வேட்டி கட்ட வேண்டும் என
நினைவூட்டுவதற்காக!
-
வேண்டாம், முடியாது
என்பதை வேண்டாம், முடியாது என நயமாகச் சொல்வதுதான்
இருவருக்கும் நல்லது!
-
பிரியத்தின் முத்தம் கதகதப்பாகவும், கோபத்தின் முத்தம் குளிர் சூடியதாயும்!
-
50 பைசா காசும் அருங்காட்சியகத்துக்குப் போயிடுச்சா? மார்வாடி டீக் கடைக்காரன் 1 ரூ கேட்டப்போ 2
அம்பது பைசா கொடுத்ததுக்கு அல்பமா பாக்குறான்!
-
புது வருசத்துக்கு எதும் கெட்ட பழக்கத்தை விடணும் நினைச்சா
வருசா வருசம் சபதம் எடுக்கிற கெட்ட பழக்கத்தை விடுங்க! :)
-
”இருக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை!” ”So..!?” ”அதனுடைய நீள,
அகலத்துக்கும் மகிழ்ச்சியா இருந்துடணும்”
-
பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில்
குற்றம்தான்
-
ஒரு குழந்தையின் வார்ப்பு அந்தக்
குழந்தைக்காக மட்டுமே செய்யப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றது. இன்னொரு குழந்தை
என்பது இன்னொன்றுதான்.
-
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த உலகத்தை சன்னல்
வழியே மட்டும் பார்ப்பீர்கள்!
-
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் வயதாகவில்லை என மனம் நினைப்பது பிரியமன்றி வேறென்ன!?
-
பொங்கல், கிருஸ்துமஸ், தீபாவளியை
முன்கூட்டியே கொண்டாடும் (கல்வி) நிறுவனங்கள் ஏன் விவசாயிகள் தினத்தை அப்படியாகக்
கொண்டாடுவதில்லை
-
இருக்கும் பதில்களுக்கு கேள்விகளைத்
தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.
-
கிளைகளில் வைத்தியம் செய்கின்றோம்...
சிக்கல் வேர்களில் இருக்கின்றது!
-
டிசம்பர்ல குளிக்கிறவன் வீரன்! அதுவும்
பச்சத் தண்ணில குளிக்கிறவன் மாவீரன்!
-
பல்வேறு கதாபாத்திரங்களை வாழ்க்கை
வழங்கினாலும், அதில்
பிடித்ததாக நினைத்துக்கொள்வதை மட்டுமே சலித்துப்போகுமளவிற்கு திரும்பத்திரும்ப
ஏற்கிறோம்.
-
கிடைத்தால் இறக்கைகளை பிய்த்து, கால்களை முறித்து
வீசும் அளவிற்கான வன்மத்தை கொசுக்கள் ஏற்படுத்தியிருக்கின்றன!
-
கேரிபேக் வேணாமென மறுக்கையில் கருவம் ஓங்கி வளருதடி!
-
வெளியேறும் வழி தெரியாத எல்லா உள் நுழைவும் சூதாட்டமே!
-
இந்த ”வரலாறு
காணாத”ங்கிற வார்த்தையை நிறுத்தச்சொல்லனும். வரலாறு அப்படியே
எதையாச்சும் கண்டிருந்தாலும், இப்ப பிரச்சனை இப்போதைக்கு
பெருசுதான்
-
'வாழ்ந்திட' தினம்தோறும்
கற்றுக் கொள்வதும், மறப்பதும் அவசியமென்பதே ஆகச்சிறந்த
சுவாரஸ்யம்தான்!
-
No comments:
Post a Comment