குறியிட்ட இடம் தேடி

உறைந்துகிடக்கும்
தினமொன்றில்
பசித்தலையும் தேடலின்
பசியறுக்க
பாலும் நெய்யும் பலகாரமும்
என்னிடமில்லை

உலை பொங்கும் முன்னே
உறக்கம் தொலைத்தழ
சாபங்களைத் துடைத்து
அகப்பையில் அள்ளி
ஊதி ஊதிப் புகட்டினேன்

இறுகிக்கிடக்கும்
மார்புகளிரண்டிலும்
இரவும் பகலுமாய்
அழுத்தி அமுதூட்டி
ஓய்ந்துபோனேன்

உயிரறுக்கும்
இந்தத் தேடலை
தற்காலிகமாகத்
தொலைத்துவிட
குறியிட்ட இடமொன்றைத்
தேடத் துவங்கியிருக்கிறேன்!

-4 comments:

Umamaheswari Gopalakrishnan said...

ரொம்ப அற்புதமாக இருக்கு கதிர் ஸார்...

பரிவை சே.குமார் said...

அற்புதம் அண்ணா...

‘தளிர்’ சுரேஷ் said...

உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி!

Durga Karthik. said...

Too Good.