கீச்சுகள் - 47



சில தருணங்களில் மௌனம் உணர்த்துவதை, சொற்களால் உணர்த்திட இயலுவதில்லை!

-

கொதிக்கிற வெயில்ல போய், கொதிக்கிற டீ குடிக்கிறதுக்குப் பேரும்அடிமை புத்திதான்! :)

-

ரோட்ல மற்றவர்கள் எப்படி வண்டி ஓட்டக்கூடாதுனு நினைக்கிறமோ, அப்படி நாம ஓட்டாமல் இருக்கிறது ரொம்ப முக்கியம்!

-

மக்களே....
டீ கடையில அரசியல் பேசுங்க... ஆனா..... டீ மாஸ்டர்கிட்ட அரசியல் பேசாதீங்க...!

விளைவு....
த்த்த்த்தூ.... நீயெல்லாம் டீ-க்கு உப்புப் போட்டுக்குடிக்கிற மனுசனானு வரலாறு ஏசும்!


-

காதில் விழுவதும், கண்ணில் படுவதும் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை கண், காதோடு நிறுத்துவது, மூளைக்கு எடுத்துச் செல்வது, மனதிற்குள் அனுமதிப்பது நம் கட்டுப்பாட்டில் இருப்பதே!


-

பதிலளிக்கவியலா நிலையில் இருக்கையில், கேள்வி தொடுக்காமலிருப்பதும் பேரன்பின் ஒரு நிலைதான்!

-

பதட்டமாக இருக்குறதுக்குப் பேருபதட்டம்தான், அதை நீங்களாக சுறுசுறுப்புனு நெனைச்சிக்கிட்டா அதுக்கு கொம்பெனி பொறுப்பாகாது பாஸ்! :)

-

கரெண்ட் போறதுக்கு முன்ன சட்னி அரைக்கிறதிலேயும், கடை லீவுனா முந்தின நாளே சரக்கு வாங்கி ஸ்டாக் பண்றதிலேயும் தமிழன் ரொம்பவுமே முன்னேறிட்டான்

-

அவன் ஏமாளியாகத் தெரிவதில் அவனுடைய குறையோ, குற்றமோ மட்டுமல்லாது, உங்களின் அறிவுக்குருடு அல்லது பார்வைக்குறைபாடும் காரணமாய் இருக்கலாம்!

-

தன்னைக் குடிக்கச் சொல்லி என்னைக் குடிக்கிறது வெயில்! #சியர்ஸ்

-

முத்தக் காயங்களுக்கு மருந்து முத்தம்தான்! பிடி சாபம்!


 -

நேற்றைத் தொலைத்துவிட்டு நாளையைச் சேமிக்க ஓடுவது எல்லா நேரங்களிலும் புத்திசாலித்தனமல்ல!




பிசியா?” என யாராவது கேட்கும்போது, பெரும்பாலும் கேட்பவருக்கு ஏற்பஆமாம் / இல்லைஎன்பதில் எதாவது ஒரு பொய்யையே தேர்வு செய்கிறோம்!

-

வேதனையால் சிந்திடும் கண்ணீருக்குச் சற்றும் குறைவானதல்ல, உறவுகளில் அன்பின் பெயரால் சிந்தும் கண்ணீர்!

-

ஒவ்வொரு தினமும் எனக்களிக்கப்படும் 24 மணி நேரத்தை சல்லடையில் கொடுத்தால் என்ன செய்வதாம்!?

-

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இயலாமையில் பொங்கும் கோபத்தை உறவுகளிடம் கொட்டுவதை அன்பு, அக்கறைனு சொல்லி ஏமாற்றப்போகிறோம் எனத்தெரியவில்லை

-

அங்கிருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் பெண் சட்டென அம்மாவாகிட முடியுது. ஒரு ஆண் அப்படி அப்பாவாகிவிட முடிவதில்லை

-

குறை சொல்லி என்னாகப்போகிறது. இந்தக் கம்மங்கூழ், கடலைக்காகவேணும் இந்தக் கோடையைக் கொஞ்சம் கூடுதலாய் நேசிக்கலாம்!

-

அவர்கள் ஊரில் மழையென மகிழ்பவர்களுக்குத் தெரியப்போவதில்லை, இப்போது நமக்கு வயிறும் சேர்ந்து எரிவது!

-

அடிக்கிற வெயில்ல கொதிக்கிற டீயைக் குடிக்கிறதெல்லாம் இந்தஜென் நிலை சேராதா!?

-

100 ரூவாக்கு வேலை கொடுத்துட்டு 150 வாட்டி போன் பண்ணி படுத்துறவங்களைச் சமாளிக்க ஒரே வழி அடுத்த பில்லுல அதை 200 ரூபாயாக்கிடறதான்! :) Cheers

-

தேர்தல் வந்தா எல்லா ஊர்லயும் ரோடு போடுவாங்க, பாலம் கட்டுவாங்க எங்கூர்ல கொசு மருந்துனு புகை போட்டு வீதில இருந்தத வீட்டுக்கு முடுக்குறாங்க!

-

கண்கள் கிறங்கியவாறு, பித்துகொண்ட நிலையில்...
காதலித்துக்கொண்டே செத்துடனுங்ண்ணாஎன்பவனிடம் சொன்னேன்..... ”காதலித்துக்கொண்டே வாழ்ந்துடேன்

மைண்ட் வாய்ஸ் :
பயபுள்ள.... இவம் மட்டும் எப்படி நல்லாருக்கலாம்..... நல்லா படட்டும்!”

-

எதைப் பார்த்தாலும் எனக்குள் கவிதை சுரக்குது. வெயிலில் உச்சி காயும்போது இப்படியும் சுரந்து தொலைக்கும் போல! :)

-

 
மழலைகளை அடிப்பதுபோல் நாம் பாவனை செய்து கை ஓங்கும்போது 'பளார்'னு ஒன்னுவிடுமே, அதுதான் நாம வாங்குறதிலேயே மிகப்பெரிய "பல்பு"



-

பின்னிரவுகளில் மட்டுமல்ல, நல்ல கசகசக்கும் வெயில் பொழுதிலும் இளையராஜாவின் 80s-90s பாடல்களைக் கேட்க இனிக்கவே செய்கின்றது!

-

உறவுகள் மலர்வதும், உதிர்வதும் நிதர்சனம் என்றாலும், சில உறவுகள் அழுத்தமாய் மனதில் சிம்மாசனமிட்டு காலம் முழுதும் அமர்ந்திருக்கும்!




அரசியல் கட்சிகளுக்கு நிரந்தரமாக ஒரு சின்னத்தை அளிக்காமல், தேர்தலுக்குத் தேர்தல் புதிது புதிதாக சின்னம் கொடுத்தால் என்ன!?

-

யாராச்சும் நம்மகிட்ட இந்தியில பேசும்போது இந்தி தெரியாதுங்கிறதஹிந்தி மாலும் நஹினு சொல்றது தெனாவட்டா பாஸ்!?



குழந்தைகளால் அவர்கள் நினைத்த நேரத்தில் நம்மைக் குழந்தையாக மாற்றவும், தங்களைப் பெரியவர்களாக மாற்றிக்கொள்ளவும் முடிகிறது.



-

எத்தன டெக்னாலஜி வந்து என்ன புண்ணியம், போன் நெம்பர், மெயில் ஐடியை SMS செய்யமாட்டோம், சொல்றேன் எழுதிக்கோங்ற மக்கள்தான் நிறைய இருக்காங்க!

-


7 comments:

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - கிச்சுகள் அனைத்துமே அருமை - நாங்கல்லாம் ஹிந்தி நை மாலும் னுதான் சொல்லுவோம் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

Indian said...

//அங்கிருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் பெண் சட்டென அம்மாவாகிட முடியுது. //

அமெரிக்காவில் பணிபுரிந்தபோது வார விடுமுறை தேசி பாட்லக் விருந்துகளில் வெவ்வேறான மாநிலங்களைச் சேர்ந்த மழலைகள் மற்றும் அம்மாக்களிடம் இப்பண்பைக் கண்டதுண்டு. நினைவூட்டியதற்கு நன்றி.

Anonymous said...

http://vovalpaarvai.blogspot.in/2014/04/mh-370the-mystery.html

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை:).

Kripa said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

நக்கல்,சிந்தனை,லொள்ளு,யதார்த்தம், என அத்தனையும் அழகு....என்னமா வேல செய்யுது மூளை....அது என்ன கீச்சுகள்? தலைப்பின் அர்த்தம் புரியல

kaanchan said...

nice kathir....