வெட்க ஆறு


புழுதி கிளம்பும் பெருங்காற்றில்
உதிரும் புளியம்பழம் போல்
கொட்டுகிறது முத்தம்

தீராப் பசியோடு
இரை கொத்தும் பறவைபோல்
இதழ்கள் இதழ்களைக் கொத்த

மல்லிகைப்பந்தல் கடந்த காற்றில்
கசியும் வாசமாய்
கமழ்கிறது கலந்த மூச்சுக்காற்று

அப்போதுதான் ஓய்ந்த மழையில்
வழியும் இலை நுனி நீராய்
அவளிடம் சொட்டுகிறது வெட்கம்

வெட்கச் சொட்டுகளில் நனையும்
அவன் தலையை அவள் துவட்டுகையில்
அவனுள்ளும் ஒரு வெட்க ஆறு!

-

2 comments:

சே. குமார் said...

வெட்க ஆறு... காவேரி போல் நிரம்பி ஓடுகிறது...

வீரக்குமார் said...

அருமைான கவிதை...

-வீரா