நானுமற்ற தனிமை!
எவர் கனவிலோ நான்
என் கனவில் எவரோ
எவர்களில் சில அவர்கள்!

***

ஏக்கமாய் கூவும் குயில்
எப்போதும் அறிவதில்லை
ஏக்கப்பிணி ஒரு தொற்றென!

***

உதிர்ந்து கிடக்கும் இறகில்
வரிவரியாய் வாசிக்கிறேன்
உழைப்பின் வரலாற்றை

***

செயல்களில்
உணர்த்திடாத
நேசிப்பையா

கவிதைகளில்
உணர்த்திடப் 
போகிறோம்

***

அவசரத் தேவை
யாருமற்ற தனிமை
அது நானுமற்றதாய்!

***

சுமந்து திரியும் 
மௌனங்களை
எந்த வார்த்தைக்குள்
இறக்கி வைக்க!


-0-

8 comments:

Amudha Murugesan said...

Nice!

செய்தாலி said...

அருமையான கவிதைகள் சார்

shanmugam said...

ஏக்கப்பிணி ஒரு தொற்றென!// அழகான வரி!

கவியாழி கண்ணதாசன் said...

சுமந்து திரியும்
மௌனங்களை
எந்த வார்த்தைக்குள்
இறக்கி வைக்க!//உண்மைதான் முடியாது

Guru pala mathesu said...

கவி அருமை

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - கவிதை அருமை - செயல்களீல் உணர்த்த இயலாதவைகளையா நாம் கவிதையில் உணர்த்திடப் போகிறோம் - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சே. குமார் said...

அருமையான கவிதைகள் அண்ணா.

காமராஜ் said...

எல்லாக்கவிதைகளுமே அருமை.
அதுதானே ?
செயல்களில் உணர்த்த முடியாததையா.