இப்போது
எதன் மேலோ
பொங்கிச்சிதறும்
கோபத்தை
எழுதித் தீர்த்திட
முனைந்தேன்!

வார்த்தைகளை
இடம் மாற்றினேன்
வார்த்தைகளின்
குணம் மாற்றினேன்
வலிக்க வலிக்க
அடித்து எழுதினேன்
மென்னியைத் திருகி
திருத்தி எழுதினேன்
ஓங்கியடித்துச்
செதுக்கினேன்

திருப்தியுறாமல்
சலிப்புற்றேன்
மீண்டும்…
மாற்றி
அடித்து
திருத்தி
சலிப்புற்று

இப்போது கோபம்
என்மேல் திரும்பியிருந்தது
மீண்டும் துவங்கினேன்-

8 comments:

CHARLES said...

கோபத்தின் உச்சத்தை வார்த்தைகளில் மெல்ல பயணிக்க செய்து உள்ளீர்கள் அண்ணா ..,

Rathnavel Natarajan said...

அருமை சார்.
என்னவென்று தெரியவில்லை.

kirthi said...

மிக அருமை..எழுத்தாளரின் கோபம் பேனாவில் அழகாக வடிந்து இப்போது வார்த்தைகளில் தெறிக்கிறது.அருமை.

Amudha Murugesan said...

அருமை....ஆனால் நான் பேனாவினால் காட்ட மாட்டேன்.....எதார்த்தம்!

Prem s said...

அவ்வளவு கோபமா கவி நன்று

அருணா செல்வம் said...

பேனாவின் மேல் தான் உங்களின் கோபமோ....

ஆதிரா said...

அருமை..கோபம் பேனாவின் மீதா எழுத்துக்களின் மீதா என்று எனக்கு புரியவில்லை..

சே. குமார் said...

எப்பவும் போல கதிர் அண்ணனின் கலக்கல் கவிதை