நானாகும் நான்
என்னை எனக்கு
அதிகம் பிடிக்கிறது
என்னை எனக்கு
அதிகம் பிடிக்காதபோதும்!

*

யாரோ ஏற்றிவிட்ட இடத்தில்
யாரோ இறக்கிவிட்ட இடத்தில்
எப்போதாவது என்னிடத்தில் நானும்

* 

நான் இப்படிப்பட்டவனென
நீங்கள் நினைக்கும்
அப்படிப்பட்டவனாக
இருந்திடத்தான் இத்தனையும்!

-

10 comments:

கோவி said...

இனிய வரிகள்..

பழமைபேசி said...

//அப்படிப்பட்டவனாக
இருந்திடத்தான் இத்தனையும்!//

அந்த பயம் இருந்தாச் செரி. இஃகி!!

Anonymous said...

Nice

Anonymous said...

Nice

அன்புடன் அருணா said...

Classic!

Aarva Kolaaru said...

erodela veyil jaasthiyo :P

everestdurai said...

அருமை கதிர்

சே. குமார் said...

அருமை அண்ணா.

prabha devi said...

arumai

cheena (சீனா) said...

சரி கதிர் - பழமைபேசி சொல்றத வழி மொழிகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா