பொய் வாசம்

அவர்கள் இருவருமே
தனித்தனியாக அழைத்தார்கள்

கேட்டிருக்க வேண்டியதில்லை
ஆனாலும் கேட்டார்கள்

சொல்லியிருக்க வேண்டியதில்லை
ஆனாலும் சொன்னேன்

கேட்கவேண்டுமே எனக் கேட்டார்கள்
சொல்லவேண்டுமே எனச் சொன்னேன்

உண்மையா பொய்யாவென ஆராயும்
அவசியம் அவர்களுக்கில்லை

உண்மையைக் கொன்றேன்
பிணமாய் உயிர்ந்தெழுந்தது பொய்

ஊர்ந்து வந்த பொய்
ஓரமாய் பாய் விரித்தது மனதில்

நேரம் நகர நெருங்கிப் படுத்த
பொய்யின் கனம் பிணமாய் கனத்தது!

எட்டிப்பார்க்க மயக்கம் சூடியது
ஏராளமாய்க்கிடந்த பொய்களின் வீச்சத்தில்

பிணமாய் அலையும் பொய்களைக் கொல்ல
பிறிதொரு ஆயுதம் தயாரிக்க வேண்டும்.

-

6 comments:

chinnapiyan said...

அருமை. வாழ்த்துகள். நன்றி

ராமலக்ஷ்மி said...

மிக நன்று.

வானம்பாடிகள் said...

nice one

பழமைபேசி said...

//பிணமாய் அலையும் பொய்களைக் கொல்ல
பிறிதொரு ஆயுதம் தயாரிக்க வேண்டும்.//

Nice! but for now, let's have a quarter!!

koodal bala said...

இதுதான் மன சாட்சி!

சீதாம்மா said...

நல்ல சொல்லாட்சி
அருமை