முக - வரிகள்



செழித்த கன்னத்தில்
சில வரிகள் தீட்டி
கொஞ்சும் கவிதைகள்
கொஞ்சம் எழுதிடவா...!

கூர்ந்து துளைக்கும்
கூரிய விழிகளில்
ஒரு கூடைக்
கவிதைகளைக் கொட்டிடவா...!

கிறங்கிமூடும் இமைமுடிகளில்
தொய்வாய் ஒரு தொட்டில்கட்டி
உறங்கத் துவளும்
கவிதைகளைத் தாலாட்டிடவா...!

ஈரம் தோய்ந்த
சில கவிதைகளை
ஏக்கப் பெருமூச்சின்
வெதுவெதுப்பில் உலர்த்திடவா...!

கிறங்கிச் சுழிக்கும்
இதழ்களின் வரிகளில்
மிதக்கும் கவிதைகளை
இதழ்களால் அள்ளிடவா...!

-0-

12 comments:

Anonymous said...

எழுதவா, கொட்டவா, தாலாட்டவா, உலர்த்தவா அள்ளவா, வா வா வான்னு கேட்டு எல்லாம் செய்கிறது கவிதை...அந்த கண்கள் அத்தனை ஈர்க்கவில்லை கவிதை மட்டும் அள்ளித்தின்னுது கதிர்..மிக இலகுவான வார்த்தைகள் கவிதை கண்களை கொஞ்சுதா கண்களை கவிதை கொஞ்சுகிறதா? லவ்லி ஒன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள...

அழகிய கவிதை

settaikkaran said...

கதிர், தலீவர் படத்துலே வந்த….

”தொட்டுக்கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா?”

பாட்டை சமீபத்துலே கேட்டீங்களோ?

இருந்தாலும், உங்க வார்த்தைகளில், எளிமையாய், இளமையாய் நல்லாயிருக்கு! :-)

சத்ரியன் said...

கதிர் அண்ணே!

ஏக்கமும், கேள்விகளும் ஓகே தான்!

அப்படியே,
வீட்டுக்கு போன் போட்டு “அன்ணி”யிடம் சொல்லி மாட்டி(வி)டவா?

கவிதை அருமையா இருக்கு.

Baiju said...

Hello காலையிலேயெ full form-ல இருப்பீங்க போல.. நடதுங்க நடதுங்க..

vasu balaji said...

பழயை நினைப்புதான்
பேராண்டி
பழைய நினைப்புதான்:)))

Unknown said...

ஒரு நல்ல சினிமாப் பாடலுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியுள்ள கவிதை...

இரசிகை said...

vaa
vaa..

yena....azhaikkirathu!

Marimuthu Murugan said...

"எழுதிடவா?" என்று படித்தால் ஒரு அர்த்தம்.
"எழுதிட வா!" என்று படித்தால் ஒரு அர்த்தம்.

அருமை.

மாதேவி said...

அழகிய கவிதை.

ஓலை said...

Nice

ஸ்ரீராம். said...

இமைகளின் முடியில் இலகுவாய் ஊஞ்சலாடும் இற்குக் கவிதைகளுக்கு தலைப்பும் பிரமாதம்.