மரணம் கொய்துபோன நண்பன்
உயிர்த்தெழுந்து வருகிறான்
அதேபெயரைச் சொல்லி
யாரோ அழைக்கும்போது!
-0-
அடிக்குத்தப்பிய கொசு
கடிபட்ட அரிப்போடு
கூடவே தோல்வியையும்
சுமத்திவிட்டுச் செல்கிறது!
-0-
யாரோ கற்றுத்தந்த வார்த்தைகளால்
கட்டமைக்கும் கவிதைகளில்
யாரோ ஒருவரின் வாடை
வீசத்தான் செய்கிறது!
-0-
வெறுத்துப் பிரிந்தவர்கள்
பெயர் மாற்றி புனைப்பெயர்களால்
சந்திக்கும்போது துளிர்க்கிறது
புதிதாய் ஒரு உறவு!
-0-
13 comments:
ஆஹா! கொசுக்கும் கவிதையா கவிஞரே. ஒரு சீரியஸ் ஒரு லொள்ளு கவிதை மிக்ஸ்:)
முதல் கவிதை மனதை தொடுகிறது. இந்த அனுபவம் அனைவருக்குமே இருக்கும்
முதல் கவிதை ரசனையை தாண்டி ஒரு சோகத்தை சுமத்துகிறது.
இரண்டாவது சோகமான மனசையும் கிச்சு கிச்சி மூட்டுகிறது.
மூன்றும் நான்கும் ....
ஆஹா...
கொசுக்கும்கவிதை....புதிய வார்த்தை நன்றாக இருக்கிறதே...
வர வர ட்விட்டுகள் நன்றாக இருக்கிறது மேயர்...
கொசுக்கடியையும் சுவையாக்கிட்டீங்களே வரிகளில் :)
எல்லாமே யதார்த்தம்தான்.ஆனாலும் கவியாக்கிய சாமர்த்தியம் அழகு !
மூன்றும் நான்கும் டாப்.
மரணம் கொய்துபோன நண்பன்
உயிர்த்தெழுந்து வருகிறான்
அதேபெயரைச் சொல்லி
யாரோ அழைக்கும்போது!
.... Very touching!
யதார்த்தத்தை யதார்த்தமாய் சொல்லிச் செல்கின்றன வரிகள். முதலாவது நெகிழ்வு.
செம கதிர்!
போற போக்குல அப்படியே சொல்லிட்டுப் போன மாதிரி எதார்த்தமாவே இருக்கு.
முதல் கவிதை ரொம்பப் பிடிச்சிருக்கு.
யாரோ கற்றுத்தந்த வார்த்தைகளால்கட்டமைக்கும் கவிதைகளில்யாரோ ஒருவரின் வாடைவீசத்தான் செய்கிறது!
நல்ல வரிகள்
//யாரோ கற்றுத்தந்த வார்த்தைகளால்
கட்டமைக்கும் கவிதைகளில்
யாரோ ஒருவரின் வாடை
வீசத்தான் செய்கிறது!//
கவிதை கூட கற்றுக்கொடுத்தேனே
நன்றி சொல்லத்தெரியாதா என
யாராவது ஓடு வந்துடப் போறாங்க...
yathartham ...
Post a Comment