வண்ண வெடிப்புகளுக்கிடையே


அழகான தங்கத்திருவோடு
வாங்கும் வறுமைக்கு
அட்சய பாத்திரத்தில்
மலம் கழித்த பெருமையும்…

வீச்சத்தை மறைக்க
வாசம் வழியும் பூவை
வலிக்கவலிக்க மேலும் கசக்கி
போர்தொடுக்கும் கலவியும்…

பச்சைப்பிள்ளை பசியில்வாட
பால் கனக்கும் மார்புக்காம்புகளில்
கண்ணைப்பறிக்கும் வர்ணமென
விஷம் பூசும் விபரீதமும்…

விளக்குகளில் குளிர்காய்ந்து
இரவுகளைப் பகல்களாக்கி
எலும்புகளுக்குள் நோய்புகுத்தி
இற்றுப்போகும் மனதுகளையும்...

எழுதிச் சலித்து விட்டது
வெளுத்துச் சாயமிட்ட விஷத்தில் 
மாண்டுபோன நிலங்களின் 
வண்ண வெடிப்புகளுக்கிடையே!

-0-

13 comments:

க ரா said...

என்ன பண்ணறது (:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சாட்டையடி கொடுக்கிற கவிதை..
வாழ்த்துக்களும் வாக்குகளும்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

vasu balaji said...

கழிவைத் தின்னு சாயம் குடிக்கும்போது உறைக்கும்:(

Thenammai Lakshmanan said...

பாலா சார் சொன்னதுதான்.. ஆனா அது எல்லாருக்குமா இருக்கும்னு நினைக்கிறேன்..

சீமான்கனி said...

சாயம் பேசி
சாயம் போகாத
கவிதை அண்ணா இது
காரணம் இது சாயப்பூச்சு இல்லாதது....

ஓலை said...

சுருக் சுருக் ன்னு நமக்கு உறைக்குது. நல்ல தண்ணியில சாயத்தை கலக்கிரவனுக்கு தெரியலையே. எங்க இளமைப் பருவம் ரசாயன சாலை க்ளோரின் குடிச்சே வளர்ந்த பருவம்.

ஓலை said...

கவிதை நச்ன்னு இருக்கு. அருமை.

அகல்விளக்கு said...

என்னவென்று சொல்வது...

சாயம் தோய்த்து குடிநீர் குடிக்கும் பழக்கம்...

க.பாலாசி said...

ம்ம்ம்ம்...

'பரிவை' சே.குமார் said...

Nice.

Anisha Yunus said...

நொய்யலை நினைவூட்டிய வரிகள்...!! :(

Sakthi said...

you are right..!