விரல் நுனிவரை வழிந்த கவிதையொன்றை
எழுதும் முன் எங்கோ தொலைத்துவிட்டேன்
தொலைத்த கவிதையை அங்கிங்கென
அலைந்து திரிந்து தேடிச்சலித்தும்விட்டேன்
தொட்டிலில் உறக்கத்தில் சிரிக்கும்
உங்கள் பக்கத்து வீட்டு மழலையின்
நெற்றியில் பூத்து நிற்கும்
வியர்வைத் துளிகளுக்குள் இருக்கலாம்
சிறகொடிந்து சிறைப்பட்டு
சில நெல்மணிகளுக்காக
சீட்டெடுக்க மட்டும் விடுதலையாகும்
ஒரு அடிமைக் கிளியிடம் இருக்கலாம்
ஒவ்வொரு சீண்டலுக்கும்
வெட்கப்பூ பூக்கும் உங்கள்
காதலியின் வியர்வையில் கசங்கிய
கைக்குட்டைக்குள் இருக்கலாம்
சமிக்ஞைகளில் சட்டை பிடித்திழுத்து
வறண்ட தலையோடு கை நீட்டும்
அழுக்கு அப்பிய குழந்தையின்
களைத்த கண்களுக்குள் இருக்கலாம்
சடசடவென அடிக்கும் மத்தியான மழைக்கு
அடி மரத்தோரம் அணைந்து கிடக்கும்
சாலையோர இளநீர்க்கடைப் பெண்ணின்
வறண்ட விழிகளில் இருக்கலாம்
இழுத்துச் செருகிய சேலையோடு
பரபரப்பாய் வீதியைத் தட்டியெழுப்பும்
எதிர் வீட்டுப்பெண்ணின்
ஈரக் கொலுசில் இருக்கலாம்
பருவம் தப்பிய மழைக்கு
வாடிய பயிரோடு வதங்கிய மனதோடு
அல்லாடும் விவசாயிகளின்
விலா எலும்புகளில் இருக்கலாம்
அதிசயமாய் எப்போதும்
அழகாய் மட்டும் தெரியும்
இன்னொருவன் மனைவியின்
இடுப்பு மடிப்புகளில் இருக்கலாம்
சமிக்ஞையில் சிவப்பு பூத்தும்
சீறித் தாண்டுபவனின்
முதுகைச் சுட்டெரிக்கும்
உங்கள் விழிகளில் இருக்கலாம்
கரைவேட்டி தரைபுரளத்
தலைவன் புகழ்மட்டும் பாடும்
ஒரு பச்சோந்தியின்
பழைய நிறத்தில் இருக்கலாம்
கொஞ்சம் விசாலமாய்த் தேடிப்பாருங்கள்
கிடைத்தால் எழுதிவிட்டுச் சொல்லுங்கள்
வாசித்து விட்டுப்போகிறேன்
உங்கள் கவிதையாகவே!
-0-
44 comments:
mm:-) sari..
wow..nijamave naan than first ah?
இந்த உலகம் கவிதையால் நிறைந்துக் கிடக்கிறது...
ஆனால் அவைகள் தேடும் போது கிடைப்பதில்லை..
தங்கள் கவிதை அருமை..
கவிதை வீதியும் தங்களை அன்போடு அழைக்கிறது..
இல்லாமல் இருக்காதுன்னு எல்லாத்தையும் சொல்லிபுட்டீரே சாமி... மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்குதோ?
நல்லாருக்கு கதிர்...
பிரபாகர்...
போடு அத்தனை ஓட்டையும்..
/"இல்லாமல் இருக்காது"/
ஆமாம்டி ஆமாம். ஊட்டுக்காரம்மா படிச்சா ‘அடி’,’இடி’,’கும்மாங்குத்து’,’வசவு’,’பட்டினி’இப்படி எதுவும் இல்லாம இருக்காது. இந்த குசும்புக்கு தங்கச்சியும் சப்போர்ட்டா? நாந்தின்ன உப்புக்கு நான் விசுவாசமா இருக்கணும். ஊட்டுக்காரம்மாக்கு போட்டு குடுக்கற குடுல ராமாயணத்து சீதை மாதிரி குனிஞ்சதலை நிமிரப்படாது.
கரைவேட்டி தரைபுரளத்
தலைவன் புகழ்மட்டும் பாடும்
ஒரு பச்சோந்தியின்
பழைய நிறத்தில் இருக்கலாம்
.....ஒவ்வொரு வரிகளிலும் கருத்து செறிவு..... அருமை.
ம்ம்ம். மனசு கேக்கல. கவிதை நல்லாத்தான் இருக்கு.
ஆஹா......
"ம்ம்ம். மனசு கேக்கல. கவிதை நல்லாத்தான் இருக்கு."
SURRENDER. SURRENDER.
அப்ப எதிர் கவுஜ இல்லையா?
அசத்தல் கவிதை..
மீண்டும் மீண்டும் படிக்க படிக்க புதுசு புதுசாய்..
\\கொஞ்சம் விசாலமாய்த் தேடிப்பாருங்கள்
கிடைத்தால் எழுதிவிட்டுச் சொல்லுங்கள்
வாசித்து விட்டுப்போகிறேன்
உங்கள் கவிதையாகவே!\\
:-)))
அருமை....அசத்தல்
எதிர் கவிதை போட முடியாத அளவுக்கு ஆகிப்போச்சு. சிறுசு சிறுசா போட்டாத்தான் எதிர் கவிதை போடமுடியுமாக்கும். இப்படி பக்கம் பக்கமா எழுதினா எப்படிங்க?
கவிதை கண்வழி
உள்ளம் புகுகின்றது....
கண்டிப்பா...
எட்டிப்பார்க்கும் அருவியின்
சாரலில் கூட இருக்கலாம்
ஃபேஸ்புக் ப்ரொபைல் போட்டோவச் சொன்னேன்! :))
அருமையாய் இருக்கு கதிர்!!!
எதிர் கவுஜ ஆராவது போட விரும்புனா, தலைப்பு - இருந்தாலும் இருக்கும் :)
//எதிர் கவிதை போட முடியாத அளவுக்கு ஆகிப்போச்சு. சிறுசு சிறுசா போட்டாத்தான் எதிர் கவிதை போடமுடியுமாக்கும். இப்படி பக்கம் பக்கமா எழுதினா எப்படிங்க?
//
வழி மொழிகிறேன்
நல்லதொரு நிறைவான கவிதை கதிர்.
பாராட்டுக்கள். .
//ஒவ்வொரு சீண்டலுக்கும்
வெட்கப்பூ பூக்கும் உங்கள்
காதலியின் வியர்வையில் கசங்கிய
கைக்குட்டைக்குள் இருக்கலாம்//
கதிர்,
நேர்ல வந்து வெச்சுக்கறேண்டி.... (மார்ச்-18)
//அதிசயமாய் எப்போதும்
அழகாய் மட்டும் தெரியும்
இன்னொருவன் மனைவியின்
இடுப்பு மடிப்புகளில் இருக்கலாம்..//
என் அக்கா எங்க போனாங்க கதிர்?
கவிதை தொலைஞ்சி போனதா நீங்க சந்தேகப்படும் இடங்களை அவங்களுக்குத் தெரியப்படுத்தனும்.
எனிவே... கவிதை அருமை.
நிச்சயம் சொல்றேங்க...
வானம்பாடிகள் said...
/"இல்லாமல் இருக்காது"/
ஆமாம்டி ஆமாம். ஊட்டுக்காரம்மா படிச்சா ‘அடி’,’இடி’,’கும்மாங்குத்து’,’வசவு’,’பட்டினி’இப்படி எதுவும் இல்லாம இருக்காது. இந்த குசும்புக்கு தங்கச்சியும் சப்போர்ட்டா? நாந்தின்ன உப்புக்கு நான் விசுவாசமா இருக்கணும். ஊட்டுக்காரம்மாக்கு போட்டு குடுக்கற குடுல ராமாயணத்து சீதை மாதிரி////// ரசித்தேன்..
//சிறகொடிந்து சிறைப்பட்டு
சில நெல்மணிகளுக்காக
சீட்டெடுக்க மட்டும் விடுதலையாகும்
ஒரு அடிமைக் கிளியிடம் இருக்கலாம்//
கிளி சொல்ல முடியாத வரிகள்..அபாரம் கதிர்..
//ஒவ்வொரு சீண்டலுக்கும்வெட்கப்பூ பூக்கும் உங்கள் காதலியின் வியர்வையில் கசங்கிய கைக்குட்டைக்குள் இருக்கலாம்//
//மத்தியான மழைக்கு அடி மரத்தோரம் அணைந்து கிடக்கும்சாலையோர இளநீர்க்கடைப் பெண்ணின் வறண்ட விழிகளில் இருக்கலாம்
இழுத்துச் செருகிய சேலையோடுபரபரப்பாய் வீதியைத் தட்டியெழுப்பும்எதிர் வீட்டுப்பெண்ணின் ஈரக் கொலுசில்
அதிசயமாய் எப்போதும்அழகாய் மட்டும் தெரியும்இன்னொருவன் மனைவியின்இடுப்பு மடிப்புகளில் இருக்கலாம்//
என்ன கதிர் கவிதையெல்லாம் பூக்களின் வாசமாவே இருக்கு..
//கரைவேட்டி தரைபுரளத்தலைவன் புகழ்மட்டும் பாடும்ஒரு பச்சோந்தியின் பழைய நிறத்தில் இருக்கலாம்//
//பருவம் தப்பிய மழைக்கு வாடிய பயிரோடு வதங்கிய மனதோடுஅல்லாடும் விவசாயிகளின்விலா எலும்புகளில் இருக்கலாம்//
உண்மை உயிர் கொண்ட மாதிரி இந்த வரிகள்..
//விரல் நுனிவரை வழிந்த கவிதையொன்றை எழுதும் முன் எங்கோ தொலைத்துவிட்டேன்தொலைத்த கவிதையை அங்கிங்கென அலைந்து திரிந்து தேடிச்சலித்தும்விட்டேன்//
தொலைச்சிட்டேன் சலிச்சிட்டேன்னு இம்புட்டு சொல்லிட்டீங்களே..கவிதை நவரசம் கதிர்..
நன்று.
//வாசித்து விட்டுப்போகிறேன்
உங்கள் கவிதையாகவே!//
தாராள மனசு:)!
ஐ என்னோட இந்தப் பின்னூட்டத்துல கூட இருக்கலாம் இல்லையா அண்ணா ? ஹி ஹி .. நல்லா இருக்கு ..
அன்பின் கதிர் -சூப்பர் - கவிதை சூப்பர் -அடுத்தவன் பொண்டாட்டி இடுப்பு மடிப்புல கூட இருக்குமா ?? சரி சரி சரி
//சில நெல்மணிகளுக்காக
சீட்டெடுக்க மட்டும் விடுதலையாகும்
ஒரு அடிமைக் கிளியிடம்//
பல்லாயிரத்துக்கு குறைவில்லாம எடுக்கத்தான் சீட்டு.... சீட்டெடுக்க மட்டும் அல்ல, மந்திரியாகவும் விடுதலையாவோம்!
//அதிசயமாய் எப்போதும்
அழகாய் மட்டும் தெரியும்
இன்னொருவன் மனைவியின்
இடுப்பு மடிப்புகளில் //
ஓகோ.... ஊருக்குத் தகவல் சொல்லி அனுப்புறேன்... இதொ!
//கரைவேட்டி தரைபுரளத்
தலைவன் புகழ்மட்டும் பாடும்
ஒரு பச்சோந்தியின்///
பச்சோந்திகளா? கோடிகள் காணும் சீமானல்லவா??
//கொஞ்சம் விசாலமாய்த் தேடிப்பாருங்கள்
கிடைத்தால் எழுதிவிட்டுச் சொல்லுங்கள்
வாசித்து விட்டுப்போகிறேன்
உங்கள் கவிதையாகவே!
//
உங்கள் கவிதை!
உங்கள் கவிதை!
உங்கள் கவிதை!
உங்கள் கவிதை!
உங்கள் கவிதை!
உங்கள் கவிதை!
உங்கள் கவிதை!
உங்கள் கவிதை!
தொட்டிலில் உறக்கத்தில் சிரிக்கும்
உங்கள் பக்கத்து வீட்டு மழலையின்
நெற்றியில் பூத்து நிற்கும்
வியர்வைத் துளிகளுக்குள் இருக்கலாம்
///
அருமை...
அதிசயமாய் எப்போதும்
அழகாய் மட்டும் தெரியும்
இன்னொருவன் மனைவியின்
இடுப்பு மடிப்புகளில் இருக்கலாம்
////
ஆஹா.....
கவிதை வாசிப்பில் எனக்குப் போதிய அனுபவம் இல்லை. இனிமுதல் தொடங்கிவிடுகிறேன் உங்கள் கரம் பற்றி...
“இல்லாமல் இருக்காது” பல உணர்வுகளைத் தந்தது.
தேடிக் கொண்டே கவிதை எழுதுவோர் சங்கம் ஆரம்பியுங்களேன்!!
wow wow...super super..i dont have words to express..
//கொஞ்சம் விசாலமாய்த் தேடிப்பாருங்கள்
கிடைத்தால் எழுதிவிட்டுச் சொல்லுங்கள்
வாசித்து விட்டுப்போகிறேன்
உங்கள் கவிதையாகவே!//
அருமை..
Post a Comment