அந்த நாள்

எப்போதாவது காவலுக்கு நிறுத்தப்படுகின்ற போலீஸ்காரர்கள், இரண்டு மூன்று நாட்களாகவே காவலுக்கு நிறுத்தப்படிருந்ததை காணும் போது கொஞ்சம் ஆச்சரியமாய் இருந்தது. ஆண்டு முழுதும் பறவைகள் போடும் எச்சத்தை அவ்வப்போது கனமழைதான் கழுவி விட்டுக் கொண்டிருந்தது. ஆனால் நேற்று சீருடை அணிந்த ஆட்கள் தண்ணீர் பாய்ச்சி கழுவிடும் போதுதான் உரைத்தது ”அடடா! நாளைக்கு நம்ம பிறந்த நாளாச்சே”

எல்லா நாளையும் போல் வழக்கமாய்த்தான் விடிந்தது அந்த நாளும், ஆனாலும் ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது. அதிகாலையிலேயே வெள்ளைவெளேரென ஒரு பெரும்படை திரண்டு வந்தது. தளதளவென கழுத்தை வலிக்கச்செய்யும் கனமான ரோஜா மாலையை போட்டார்கள், வரிசையாய் ஒவ்வொருவராய் பூவை அள்ளிப் போட்டு கும்பிட்டார்கள். நிதானமாய் மின்னும் கேமாராக்களுக்கு போஸ் கொடுத்ததோடு, பெயரைச் சொல்லி கூடவே புகழ் என்ற வார்த்தையையும் இணைத்து ஒரே குரலில் ஓங்கி ஒலித்தார்கள். மெதுவாய் கலைந்து போனார்கள். அடுத்த அரை மணியில் முதலில் வந்தது போலவே வெள்ளைவெளேர் உடையில் வேட்டி கரைகளில் மட்டும் கொஞ்சம் வேறுபாடோடு அடுத்த படை வந்தது, முதலில் செய்ததையே திரும்பவும் கிட்டத்தட்ட செய்தார்கள்.

இங்கு சிலையாய் வந்த ஆரம்ப காலம் நினைவில் இருக்கிறது. அப்போதெல்லாம் இத்தனை ஆர்பாட்டம் இல்லை. நாள் முழுதுக்கும் சேர்த்து ஒன்று அல்லது இரண்டு குழுக்கலாய் வருவார்கள். ஆண்டுகள் கடக்க கடக்க அணிகள் கூடியது. இந்த வருடம், எத்தனை அணிகளாய் வருவார்களோ என்று நினைக்கும் போதே வந்தவர்களின் எண்ணிக்கைக்கு ஒரு கையின் விரல்கள் தீர்ந்து விட்டிருந்தது.


நேரம் கடக்க கடக்க வெயில் ஏறுவதுபோலவே வந்த அணிகளின் எண்ணிக்கையும் ஏறிக்கொண்டேயிருந்தது. எத்தனையாவது அணி என்பதற்கு கைவிரல்கள் தீர்ந்து போய் கால்விரல்களில் எண்ணிக்கை ஓடிக்கொண்டிருந்தது. உடைகளும், ஆட்களும் புதிதுபுதியாய் தென்பட்டார்கள். எங்கிருந்து வந்தது இத்தனை அணி என்பது மட்டும் குழப்பமாகவே இருந்தது. கூடவே அந்தக்காலத்தில் தானும் புதிதாய் அணி துவங்கியது நினைவிற்கு வந்தது.

மாலையைப் போடுவதும் கழட்டுவதுமாய் இருந்ததால் கழுத்து வலிக்கவே செய்தது. தூவிய பூக்கள் பாதத்தின் மேல் கனக்கத் துவங்கியது. வெயில் இறங்கும் நேரம் மிகுந்த களைப்பாக இருந்தது. வாசமாய், புத்துணர்வாய் இருந்த பூக்கள் இப்போது கசகசப்பாய் இருப்பதாக தோன்றியது. வெயிலில் கருகிய மலர்களின் வாசம் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. வெயில் தணிய ஆரம்பிக்கும் பொழுது அணிகளும் ஆட்களும் அற்றுப்போய்விட்டனர்.

இருள ஆரம்பிக்கும் முன்பே, மூன்று நாளாய் காவலுக்கிருந்த போலீஸ்காரர்கள் கூட தங்கள் மூட்டைகளைக் கட்டுவதை காணும் போது வெறுமையாய் இருந்தது.

”அப்போ, இன்றைய மகிழ்ச்சி இவ்வளவுதானா, இனிமே அடுத்த ஆண்டுதானா?” என மனது வருத்தப்படத் துவங்கியது. ஏனோ, தேர்தலில் ஓட்டுப்போடும் ”மிஸ்டர் பொதுஜனம்” நினைவுக்கு வந்தது.

”ஓட்டு வாங்கி நாட்டை ஆண்டு செத்துப்போய் சிலையாய் வருடத்திற்கு ஒரு முறை மாலை, மலர், கோசம், சூளுரை, இனிப்பு எனக் கொண்டாடப்படும் நம்ம பொழப்பும், ஐந்து வருடத்துக்கு அம்போன்னு விடப்பட்டு, தேர்தல் நாட்களுக்கு மட்டும் போற்றுதலுக்குரிய குடிமகன்களாய் ம(மி)திக்கப்படும் பொது ஜனங்களின் பொழப்பும் ஒன்னுதானோ” என்று ஒரு விநாடி மின்னலாய் தோன்றிய போது, இருள ஆரம்பித்திருந்தது, கண்களில் வெளிச்சம் தீர்ந்து போனது.

______________________



24 comments:

vasu balaji said...

சிலை சொல்லும் கதை:).

காமராஜ் said...

புதுவகையான புலம்பலாக இருக்கிறதே கதிர். நல்லா இருக்கு.

பழமைபேசி said...

ஏனுங் மாப்பு, சிலைக்குள் கூடு வுட்டு கூடு பாஞ்சி வந்தீங்ளா? அப்பிடியே, நெறைய கூடு வுட்டு கூடு பாயுங்க....

dheva said...

முகத்தில் அறைகிறது கட்டுரை....!

பகட்டு அரசியலில் மக்களும் சிலைகள்தான்... !

Jerry Eshananda said...

அண்ணா நாமம் வாழ்க.

Chitra said...

”ஓட்டு வாங்கி நாட்டை ஆண்டு செத்துப்போய் சிலையாய் வருடத்திற்கு ஒரு முறை மாலை, மலர், கோசம், சூளுரை, இனிப்பு எனக் கொண்டாடப்படும் நம்ம பொழப்பும், ஐந்து வருடத்துக்கு அம்போன்னு விடப்பட்டு, தேர்தல் நாட்களுக்கு மட்டும் போற்றுதலுக்குரிய குடிமகன்களாய் ம(மி)திக்கப்படும் பொது ஜனங்களின் பொழப்பும் ஒன்னுதானோ” என்று ஒரு விநாடி மின்னலாய் தோன்றிய போது, இருள ஆரம்பித்திருந்தது, கண்களில் வெளிச்சம் தீர்ந்து போனது.


.......உண்மையை சொல்லிட்டீங்களே! இன்னைக்கு "ஆட்டோ" ஸ்ட்ரைக்கா?

க ரா said...

மனிசனுக்கே உணர்ச்சி இல்லாத காலம்ணே இது.. இது சிலைக்கு எங்க உணர்ச்சி வர.. நல்லா இருக்குண்ணே இந்த கட்டுரையும்..

ஆரூரன் விசுவநாதன் said...

ஆட்டோ அனுப்பனுமா?????

க.பாலாசி said...

ப்ச்ச்ச்.... பொலம்ப வேண்டியதுதான்.. வேறென்ன செய்யமுடியும்...இதுல சிலையென்ன, மனுஷனென்ன....

ராமலக்ஷ்மி said...

//எத்தனையாவது அணி என்பதற்கு கைவிரல்கள் தீர்ந்து போய் கால்விரல்களில் எண்ணிக்கை ஓடிக்கொண்டிருந்தது.//

அதுவும் தீர்ந்துவிடக் கூடும் அடுத்து வரும் வருடங்களில். நாட்டு நடப்பை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Thamira said...

புதுமையாக இருந்தது.

நிலாமதி said...

உண்மையை உரத்து சொன்னமைக்கு நன்றி.

பவள சங்கரி said...

உண்மை. சிலையே வந்து நேரில் பேசியது போல இருக்கிறது. வாழ்த்துக்கள் .

சிவராம்குமார் said...

ஹ்ம்ம்.... நல்லா இருக்கு...

'பரிவை' சே.குமார் said...

சிலை சொல்லும் கதையில் எப்போதாவது விழும் செருப்பும் மாலையையும் இணைத்திருக்கலாமே அண்ணா..!

RVS said...

கைய பிடிச்சு ஒருத்தரை இழுத்து கம்பெனிக்கு வச்சுக்க கூடாது அந்த சிலை... ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...பாராட்டுகள்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Thenammai Lakshmanan said...

அணிகளின் எண்ணிக்கையும் ஏறிக்கொண்டேயிருந்தது. எத்தனையாவது அணி என்பதற்கு கைவிரல்கள் தீர்ந்து போய் கால்விரல்களில் எண்ணிக்கை ஓடிக்கொண்டிருந்தது//


அருமை.. இது கதிரின் டச்..:))

நிகழ்காலத்தில்... said...

உங்களுக்கு நடந்தது என சந்தோசமாக படித்தேன். பின்னர்தான் புரிந்தது:))

அட்டகாசம் மாப்பு..

சீமான்கனி said...

//”ஓட்டு வாங்கி நாட்டை ஆண்டு செத்துப்போய் சிலையாய் வருடத்திற்கு ஒரு முறை மாலை, மலர், கோசம், சூளுரை, இனிப்பு எனக் கொண்டாடப்படும் நம்ம பொழப்பும், ஐந்து வருடத்துக்கு அம்போன்னு விடப்பட்டு, தேர்தல் நாட்களுக்கு மட்டும் போற்றுதலுக்குரிய குடிமகன்களாய் ம(மி)திக்கப்படும் பொது ஜனங்களின் பொழப்பும் ஒன்னுதானோ” //

மொத்த பதிவுமே செவுட்டுல அறைந்தாற்போல்...

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

VELU.G said...

சிலை சொல்லும் கதை நல்லாயிருக்கு

vasan said...

நல்ல‌ மாற்றுச் சிந்த‌னையான‌ இடுகை.
சில சிலைக‌ளுக்குத்தான் இந்த‌ சிற‌ப்பு.வ‌ருச‌ம் ஒரு நாள் அதுவும் எல‌க்ச‌ன் வருச‌ம் கொஞ்ச‌ம் ஸ்பெஷ‌ல். ப‌ல‌ சிலைக‌ள் கேட்பார், பார்ப்பாரில்லாம‌ல் கிட‌க்கின்ற‌ன‌ சாத‌ர‌ண‌ ம‌க்க‌ளைப் போல‌வே.

தாராபுரத்தான் said...

கதை சொல்லும் சிலை...

மார்கண்டேயன் said...

(அந்த) இந்த நாள் விகடனிலும் வந்த நாள்,

http://youthful.vikatan.com/youth/NYouth/Blogs.asp

வாழ்த்துகள்